Nana Patekar: "அதெல்லாம் பொய்".. நடிகை தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நடிகர் நானா படேகர்!
Actor Nana Patekar, MeToo: 2008 ஆம் ஆண்டில் ஒரு படப்பிடிப்பின் போது தனுஸ்ரீ தத்தாவுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நானா படேகர் மீண்டும் மறுத்துள்ளார்.
Actor Nana Patekar, Tanushree Dutta: கடந்த 2018 ஆம் ஆண்டில், மீ டூ இயக்கத்தின் போது, நடிகர் தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 2008 ஆம் ஆண்டு வெளியான 'ஹார்ன் ஓகே பிளீஸ்' படத்தின் ஒரு பாடல் படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார் நானா படேகர்.
நானா படேகர் மறுப்பு
இந்நிலையில், தி லாலன்டாப் உடனான சமீபத்திய நேர்காணலில், நடிகர் நானா படேகர் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மீண்டும் மறுத்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனக்குத் தெரியும் என்றும், அதனால்தான் நான் ஒருபோதும் கோபப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
"அதெல்லாம் பொய்"
இது குறித்த அவர் அளித்த பேட்டியில்,"அதெல்லாம் பொய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் எனக்கு கோபம் வரவில்லை. எல்லாமே பொய்யாக இருக்கும்போது, நான் ஏன் கோபப்பட வேண்டும்? அதெல்லாம் பழையவை. அவை நடந்திருந்தால் பேசலாம். அவர்களைப் பற்றி நாம் என்ன பேச முடியும்? அப்படி எதுவும் நடக்காத அந்த நேரத்தில் நான் என்ன சொல்ல முடியும்?. எல்லோருக்கும் உண்மை தெரியும். திடீரென்று, நீங்கள் இதைச் செய்தீர்கள், நீங்கள் அதைச் செய்தீர்கள் என்று ஒருவர் கூறுகிறார். இதற்கெல்லாம் நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்? இதை நான் செய்யவில்லை என்று சொல்லியிருக்க வேண்டுமா? நான் எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை எனக்குத் தெரியும்." என்றார்.