Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'- நடிகர் நகுல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'- நடிகர் நகுல்!

Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'- நடிகர் நகுல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 30, 2024 03:02 PM IST

Actor Nakul: அக்காவே பல இடங்களில் சொல்லி இருக்கிறார், நகுல் எனக்கு ஒரு தம்பியாக இருந்ததை விட, குழந்தையாக இருந்தது தான் அதிகம் என்று.. அப்படித்தான் அவள் வீட்டில் நடந்து கொள்வாள் - நடிகர் நகுல்!

Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'-  நடிகர் நகுல்!
Actor Nakul: அக்காவ கஷ்டப்படுத்தி..சண்டை சச்சரவு வந்து… இப்பதான்..'- நடிகர் நகுல்!

அக்காவாக பார்த்தது கிடையாது.

இது குறித்து அவர் எஸ்.எஸ் மியூசிக் சேனலுக்கு பேசும் போது, "என் அக்கா தேவயாணியை நான் சிறுவயதில் இருந்தே ஒரு சகோதரியாக பார்த்தது மிகவும் குறைவு; ஆம், பெரும்பாலும் அவளை ஒரு நடிகையாகத்தான் பார்த்திருக்கிறேன்.அவள் நடிகையாக மாறியதில் இருந்து, வீட்டில் பெரிதாக இருந்தது இல்லை. தொடர்ந்து ஷூட்டிங்கில் பிசியாகவே இருந்தாள். 

அக்காவே பல இடங்களில் சொல்லி இருக்கிறார், நகுல் எனக்கு ஒரு தம்பியாக இருந்ததை விட,  குழந்தையாக இருந்தது தான் அதிகம் என்று.. அப்படித்தான் அவள் வீட்டில் நடந்து கொள்வாள். அம்மா, அப்பா அக்காவிடம் நான் ஏதாவது சொல்லும் போது, டேய் உன்னுடைய அக்கா யார் என்று உனக்கு தெரிய வில்லை என்பார்கள்.

எங்களுக்குள் சண்டையா? 

எங்களுக்குள் பிரச்சினை என்று செய்திகள் உலாவுவது குறித்து கேட்கிறீர்கள்.. எங்களுக்குள் என்ன நடந்தாலும், இறுதியாக அவள் என்னுடைய அக்கா. என்னுடைய குடும்பம். என்னுடைய ரத்தம். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருந்த நகுல், இப்போது பேசுவது போல் பேச மாட்டான். வாழ்க்கையில் நான் நிறைய கட்டங்களை தாண்டி வந்திருக்கிறேன்.

ரிலேஷன்ஷிப் குறித்த என்னுடைய புரிதல், அப்போது வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், என்னுடைய குழந்தைகள் பிறந்த பின்பு நான் நிறைய மாறி இருக்கிறேன். அப்போதெல்லாம் யாராவது என்னிடம் சண்டை போட்டால், நானும் சண்டை போட்டுகொண்டு, போனால் போய்விட்டு போகிறார்கள் என்று, என் போக்கில் இருப்பேன். ஆனால் இப்போது அப்படி அல்ல; இது மிகவும் குறுகிய வாழ்க்கை என்பதும், இந்த வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப் எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தற்போது உணர்ந்து இருக்கிறேன். 

இதுதான் வாழ்க்கை என்று தெரிவதற்கு முன்னமே வாழ்க்கை கிட்டத்தட்ட பாதி ஓடி விடுகிறது; அதற்கு கூடவே நம்முடைய கரியர் மற்றும் இதர விஷயங்களும் வந்து விடுகிறது. அதற்கிடையில் நாம் வாழ்வது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.. 

நான் தெரிந்தோ தெரியாமலோ ஆர்வக்கோளாறில் என்னுடைய அக்காவை கஷ்டப்படுத்தி இருக்கலாம். அவளும் சில வார்த்தைகள் பேசி என்னை கஷ்டப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்ன இருந்தாலும், இறுதியில் அவள் என்னுடைய அக்கா. அவளுடைய குழந்தைகளை நான் சிறுவயதில் பெரிதாக பார்த்ததில்லை. நீண்ட காலம் கழித்து பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை பார்க்கும் பொழுது, திடீரென்று அவர்கள் அப்படி வளர்ந்து விட்டார்கள். காலம் அவ்வளவு வேகமாக ஓடுகிறது. இவையெல்லாம் எனக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது" என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.