Naga Chaitanya- sobhita: விசாகா ராணியுடன் பண்டிகையை வைப் செய்த சைதன்யா.. வைரலாகும் புகைப்படங்கள்..
Naga Chaitanya- sobhita: நடிகர் நாக சைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதியினர் திருமணத்திற்கு பின் தங்களது முதல் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடினர்.

Naga Chaitanya- sobhita: நட்சத்திர தம்பதிகளான சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா கடந்த டிசம்பர் 4ம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் தற்போது தங்கள் முதல் பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்ட புகைப்படங்களை அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.
பொங்கல் கொண்டாட்டம்
சோபிதாவும் நாக சைதன்யாவும் தங்கள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியினை புகைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். ஷோபிதா ஷேர் செய்த புகைப்படங்களில் போகி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு நெருப்பின் படத்தைப் பகிர்ந்துள்ளார். "போகி, புதுப்பித்தல், மாற்றம்" என்று குறிப்பிட்டு இந்தப் படங்களை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், தென்னிந்தியாவின் பாரம்பரிய கோலத்தின் படத்தை அவர் பகிர்ந்து, "இனிய சங்கராந்தி. இனிய பொங்கல் என சிவப்பு இதய ஈமோஜியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
விசாகா ராணியுடன் கொண்டாட்டம்
இதற்கிடையில், நாக சைதன்யா, மனைவி சோபிதா துலிபாலாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவர்கள் இருவரும் தங்கள் வீட்டு வாசலில் பாரம்பரிய உடையணிந்து நின்று கொண்டுள்ளனர். இந்தப் படத்தை பகிர்ந்த சைதன்யா "என் விசாகா ராணியுடனான பண்டிகை வைப்ஸ்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு புகைப்படத்தில் சோபிதா சிவப்பு நிற சேலை மற்றும் பழுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் மற்றும் நாக சைதன்யாவின் கால்களின் புகைப்படத்தை பதிவிட்டு இதய எமோஜியை பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் பொங்கல் வைத்த புகைபப்டத்தையும் பகிர்ந்துள்ளார்.
சைதன்யா- சோபிதா திருமணம்
நாக சைதன்யா மற்றும் சோபிதா கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் பூர்வீக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தெலுங்கு பாரம்பரியத்தின் பல்வேறு சடங்குகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த குறிப்பிடத்தக்க தருணத்தைக் காண கூடியிருந்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் இதயப்பூர்வமான ஆசீர்வாதங்களால் திருமணம் ஆசிர்வதிக்கப்பட்டது.
பாரம்பரியத்தா கடைபிடித்த ஜோடி
இந்த சிறப்பு நாளில், சோபிதா தனது கலாச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் உண்மையான தங்க ஜரிகையுடன் கூடிய தங்க காஞ்சிவரம் பட்டு சேலையைத் தேர்ந்தெடுத்தார். கோயில் நகைகளால் தனது தோற்றத்தை அலங்கரித்தார். சைதன்யாவும் ஒரு பாரம்பரிய வெள்ளை பட்டாடை உடையில் அழகாக இருந்தார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோபிதாவுடனான தனது உறவை அவர்களின் நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு உறுதிப்படுத்தினார். அதற்கு முன்பு, அவர்கள் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியபோது அவர்கள் தங்கள் உறவை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அத்துடன் அவர்களின் பல புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் வெளிவந்த வண்ணமாக இருந்தன.
நாக சைதன்யா- சமந்தா
நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை 7 ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருணம் செய்து கொண்டார். பின் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பர புரிதலுடன் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்