Naga Chaitanya: சிம்பிளான ஸ்டார் கிட் நாக சைதன்யா.. புகழ்ச்சிக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: சிம்பிளான ஸ்டார் கிட் நாக சைதன்யா.. புகழ்ச்சிக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..

Naga Chaitanya: சிம்பிளான ஸ்டார் கிட் நாக சைதன்யா.. புகழ்ச்சிக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..

Malavica Natarajan HT Tamil
Published Apr 08, 2025 06:46 AM IST

Naga Chaitanya: நடிகர் நாக சைதன்யா தண்டேல் பட வெற்றியை சிறுவர்களுடன் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Naga Chaitanya: சிம்பிளான ஸ்டார் கிட் நாக சைதன்யா.. புகழ்ச்சிக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..
Naga Chaitanya: சிம்பிளான ஸ்டார் கிட் நாக சைதன்யா.. புகழ்ச்சிக்கு மத்தியில் வைரலாகும் வீடியோ..

அந்த வீடியோவில், நாக சைதன்யா சிறுவர்களிடம், " என்ன படிக்கிறீர்கள்? எந்தப் பள்ளியில் படிக்கிறீர்கள் என்று கேட்டதுடன், பள்ளிக்கு ஏன் போகவில்லை என்றும் அவர்களை விசாரித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் நாக சைதன்யா

நாக சைதன்யா தனது காரைத் தானே ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, சில குழந்தைகள் காரை நிறுத்தினர். அப்போது, உங்களது தண்டேல் படத்தைப் பார்த்தோம் என்று அவர்கள் அவரிடம் கூறினர். அதற்கு நீங்க யாருன்னு கேட்டார். என்ன படிக்கிறீங்க? எங்க படிக்கிறீங்க என விசாரிச்சாரு. அதில் ஒரு பையன் தான் பள்ளிக்குப் போகவில்லை, போக மனசு இல்லை, இப்போ ஷாப் பார்த்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னான்.

ஞாயிற்று கிளமை மீட் பண்ணலாம்

போக மனசு இல்லையா?ன்னு சைதன்யா கேட்டுவிட்டு, பிறகு அந்தக் குழந்தைகளிடம் பாய் சொல்லிட்டுப் கிளம்பிவிட்டார். அண்ணா.. மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம்ன்னு குழந்தைகள் சொவ்ல சரின்னு சைதன்யா கூறிவிட்டு காரில் பறந்தார். இந்த வீடியோவை அந்தக் குழந்தைகள் தங்களுடைய மொபைலில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதால் அது வைரலாகிவிட்டது.

ரசிகர்களின் ரியாக்ஷன்

இந்த வீடியோவைப் பார்த்த சைதன்யாவின் ரசிகர்கள் அதற்கு எதிர்வினை தெரிவித்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு பெரிய அண்ணன் மாதிரி நாக சைதன்யா குழந்தைகளிடம் பேசுறாரு என ஒரு ட்விட்டர் பயனர் இந்த வீடியோவைப் பதிவேற்றினார்.

அவரு எல்லாருக்கும் மரியாதை கொடுப்பாரு. அதனாலதான் எல்லாருக்கும் அவரு பிடிக்கும்ன்னு ஒருத்தர் கமெண்ட் பண்ணியிருக்காங்க. சை ரொம்ப நல்லவரு.. இவ்வளவு சிம்பிளா இருக்கிற ஸ்டார் கிட் இவர்தான் இருக்கலாம்ன்னு இன்னொருத்தர் சொல்லியிருக்காரு என புகழ்ந்தார்.

தண்டேல் படம்

சைதன்யா சமீபத்தில் தண்டேல் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்த இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸிலும் சூப்பரான ஹிட் ஆனது. இவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி பலராலும் பாராட்டப்பட்டது.  

இந்நிலையில், சைதன்யா அடுத்து நடிக்கப் போகிற படங்கள் பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சமயத்தில் நாக சைதன்யா தன் மனைவியுடன் விடுமுறை நாட்களை கழித்து வருவதுடன், நீன்ட நாட்களுக்கு பின் கிடைத்த தண்டேல் படத்தின் வெற்றியை ரசித்துக் கொண்டிருக்கிறார்.