நாங்க இப்படி தான் காதலிக்க ஆரம்பிச்சோம்.. கல்யாணத்திற்கு பின் காதலை விளக்கும் சைதன்யா - சோபிதா ஜோடி..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாங்க இப்படி தான் காதலிக்க ஆரம்பிச்சோம்.. கல்யாணத்திற்கு பின் காதலை விளக்கும் சைதன்யா - சோபிதா ஜோடி..

நாங்க இப்படி தான் காதலிக்க ஆரம்பிச்சோம்.. கல்யாணத்திற்கு பின் காதலை விளக்கும் சைதன்யா - சோபிதா ஜோடி..

Malavica Natarajan HT Tamil
Published Mar 19, 2025 02:59 PM IST

நட்சத்திர தம்பதியான நாக சைதன்யா- சோபிதா தாங்கள் எப்படி காதலிக்க தொடங்கினோம் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளனர்.

நாங்க இப்படி தான் காதலிக்க ஆரம்பிச்சோம்.. கல்யாணத்திற்கு பின் காதலை விளக்கும் சைதன்யா - சோபிதா ஜோடி..
நாங்க இப்படி தான் காதலிக்க ஆரம்பிச்சோம்.. கல்யாணத்திற்கு பின் காதலை விளக்கும் சைதன்யா - சோபிதா ஜோடி..

சோபிதா சைதன்யாவின் காதல் கதை எப்படி தொடங்கியது?

எங்கள் காதல் கதை இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் ஆஸ்க் மீ எனிதிங் கேள்வியுடன் தொடங்கியது என்று சோபிதா கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். நான் எனக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அனுப்பிய கேள்விகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு ரசிகர், நாக சைதன்யா உங்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறரா். ஆனால், நீங்கள் ஏன் அவரை ஃபாலோ செய்யவில்லை எனக் கேட்டார். நான் அப்போது தான் நாக சைதன்யாவை கவனிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

அந்த ரசிகரின் கேள்விக்குப் பின், நான் நாக சைதன்யாவின் இன்ஸ்டா அக்கௌண்டை செக் செய்தேன். அப்போது, அவர் வெறும் 70 பேரை மட்டுமே ஃபாலோ செய்தது தெரிந்தது. அதில் நானும் ஒருத்தி என்பதை பார்த்து எனக்கு சிறிது மகிழ்ச்சியாக இருந்தது, எனவே நானும் அவரை ஃபாலோ பண்ணினேன்.” என்றார்.

முதல் டேட்டிங்

பின் சிறிது நேரத்தில் நாங்கள் இருவரும் மெசேஜ் செய்ய தொடங்கினோம். அப்படியே நாங்கள் நண்பர்களாக மாறினோம். நானும் சைதன்யாவும் எங்களது முதல் டேட்டிங்கை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் செய்தோம். நாங்கள் இருவரும் காலை உணவு சாப்பிட மும்பை வந்தோம் என அவர் தங்களது காதல் நினைவுகளை பகிர்ந்தார்.

காதலுக்கு சம்மதம்

அவர்களின் காதலை குறித்து மேலும் பேசுகையில், சோபிதா, “எங்கள் காதலில் எந்த சிறப்பு நிகழ்வும் இல்லை. அது மிகவும் இயல்பாக நடந்தது” என்று கூறினார். அவர்கள் தங்களின் குடும்பங்களை ஒருவரையொருவர் சந்தித்து பின் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி, பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம், திருமண சடங்குகளில் ஈடுபட்டோம் எனக் கூறினார்.

இப்போதைக்கு இதுதான் விருப்பம்

அத்தோடு, தங்கள் நீண்ட கால காதல் வாழ்க்கையில், தங்களுக்கு எது தேவை, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். நாங்கள் எதுவும் பெரிதாக விரும்பவில்லை. குடும்பத்துடன் உணவு உண்பது, ஒன்றாக எதுவும் செய்ய நேரம் ஒதுக்குவது மற்றும் தெலுங்கில் அரட்டை அடிப்பது தான் இப்போதுள்ள விருப்பம் எனக் கூறினார்.

அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆனால் நாங்கள் எப்போதும் விடுமுறையைக் கழிக்க அல்லது ஒன்றாக ஓய்வெடுக்க நேரம் தேடுகிறோம் என்று அந்த தம்பதியினர் பத்திரிகையிடம் கூறினர்.

நட்சத்திர ஜோடி திருமணம்

நாக சைதன்யா- சோபிதா திருமண விழா ஹைதராபாத்தில் உள்ள ஐகானிக் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சில நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த திருமணம் தெலுங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி நடைபெற்றது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner