Aadhi: நடிகர்களுடன் ஆழ்ந்த நட்பு இல்லை.. தொழில் நிமித்தமான நட்பு தான்.. நடிகர் - இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு
Aadhi: ’என் கேங் இப்பவும் இருக்காங்க சார். இது தொழில் நிமித்தமான நட்பு. நடிகர்கள் என்னுடைய சக தொழில் நிமித்தமான நண்பர்கள் சார். நண்பர்கள் வேறு சார்’ என நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியிருக்கிறார்.

Aadhi: நடிகர்களுடன் ஆழ்ந்த நட்பு இல்லை என்றும்; அவர்களுடன் இருப்பது தொழில் நிமித்தமான நட்பு தான் என்றும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இது:
காட்சிகளும் வித்தியாசமான இசையும் முன்பு இருந்தது. தற்போது காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கு. பாடல்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
பாடல்களுக்கான தேவை கதை நகர்த்துறது எல்லாம் உலகமயம் ஆகிடுச்சு என்பதால், நெட்பிளிக்ஸ், அமேஸான் வந்ததால் பாடல்களின் தாக்கம் குறைஞ்சிடுச்சு சார். அதனால் வந்தால் புரோமோ சாங் அப்படி தான் வருது. மியூசிக்கலி படங்கள் வரும்போதுதான் அதற்குண்டான தேவை இருக்குது சார். இது தவிர்க்கமுடியாது. பாடல்கள் இல்லாத நிலை நோக்கி சினிமா நகரத்தொடங்கியிருச்சு என்பதால், அதைத் தடுக்கமுடியாது சார். ஒரு காலத்தில் ஆங்கிலப் படங்களில் பாடி டான்ஸ் ஆடுனாங்க. அடுத்து தனியாக பாடல்கள் வந்தது. அதனால் பாடல்கள் குறைவது இயல்புதான். மற்றபடி கதை நகர்வில் தான் மெலோடி பாடல்கள், காதல் பாடல்கள் போடமுடியாது. எதிர்காலத்தில் தனியாகப் போடப்பட்டு ஹிட்டான பாடல்களைத்தான் படங்களில் பயன்படுத்தும் நிலை வரும்.
உங்கள் இசையமைப்பில் சவாலான படங்கள் பற்றி சொல்லுங்க?
என்றைக்குமே காமெடி படம் தான் சவாலாக இருக்கும். அரண்மனை 4 எல்லாம் ரொம்ப சவாலாக இருந்தது. ஏனென்றால், முடிவில் ஒரு அம்மன் தொடர்பான காட்சிகள் வரும். அங்கு பார்த்த வேலைகள் ஒரு மூன்று படத்தினுடைய காட்சிகள் அதில் இருக்கும். அப்போது பாட்டும் வரணும், பி.ஜி.எம்மும் வரணும்னு சொல்வாங்க. அதாவது சார் பாட்டாக ஒன்று போட்டுடலாம் சார். ஆனால், பாட்டுக்குள்ள பிரேக் பண்ணி பிரேக் பண்ணி பி.ஜி.எம் கொண்டு வரணும். அதுவும் ஒரே பேட்டர்னில் இருக்கணும்.
அரண்மனை எல்லாம் டிராக் காமெடியாக இருக்கும். படம் ஒரே மாதிரியாக இருந்தால் பரவாயில்லை சார். ஆனால் கமர்ஷியல் படங்களுக்கு இசையமைக்கும்போது அப்படியில்லை. முதல் காட்சி காமெடி காட்சியாக இருக்கும். அடுத்த காட்சி சீரியஸாக இருக்கும். இப்படி மூடு ஷிஃப்ட் ஆகும். இது பார்க்கிற ஆடியன்ஸுக்கு தெரியாத மாதிரி மியூஸிக் செய்யணும். அதே மாதிரி, காமெடிக்கு மியூஸிக் போடுறது ரொம்ப டஃப்பாக இருக்கும் சார். லவ் மற்றும் சீரியஸ் சீனுக்கு மியூஸிக் போட்டுவிடலாம், ஆனால் அரண்மனை 4 மாதிரியான படங்களுக்குப் போடுவது ரொம்ப டஃப்பாக இருக்கும் சார்.
உங்களுக்குப் பிடித்த நீங்கள் இசையமைத்த படம் எது?
எனக்கு தனி ஒருவன் பிடிக்கும். ஏனென்றால், நான் நிறைய முயற்சி செய்து பார்க்க வாய்ப்பு கிடைச்சது. உதாரணத்திற்கு, வில்லன் தீம்முக்கு எல்லாம் அடுத்து அடுத்து வரும்போது, ஒரு பாட்டை 25 நிமிஷம்போட்டுக்கப்பான்னு சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருந்துச்சு சார். ரவி சாருக்கு ஒரு மியூஸிக், அரவிந்த் சுவாமி சாருக்கு ஒரு மியூஸிக். அடுத்து இரண்டு பேரும் சேரும்போது ஒரு மியூஸிக் மிக்ஸ் ஆகும் சார். அது பார்க்கிறதுக்கு கிக்காக இருக்கும். அடுத்து இன்று நேற்று நாளை ரொம்ப என்ஜாய் செய்து பண்ணுனேன். மீசைய முறுக்கு மாதிரியான படங்கள் எல்லாம் என்ஜாய் செய்து பண்ணுனேன் சார்.
நீங்கள் பணியாற்றிய படங்களில் ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க. இவங்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கலையா ஆதிக்கு?
சேது அண்ணாகூட புரோமோஷன் அப்போது ஒரு 3 நாள் டிராவல் ஆனேன். அடுத்து டச் இல்லை சார். சிவா அண்ணனும் அப்படி தான். நான் இசையமைப்பாளர் என்பதால் ரீரெக்கார்டிங்கில் இருப்பேன். அப்புறம் புரோமோஷன் அப்போது கூப்பிடுவாங்க. அப்போது ஒரு 2 நாட்கள் எல்லோரும் சேர்ந்து பயணிப்போம். அதில் ஆழ்ந்து பழக முடியாது. நல்ல மரியாதையெல்லாம் இருக்கு. நான் நினைக்கிற நட்பு நமக்காக எல்லாம் செய்யிற மாதிரியான நட்பு சார். என் கேங் இப்பவும் இருக்காங்க சார். இது தொழில் நிமித்தமான நட்பு. நடிகர்கள் என்னுடைய சக தொழில் நிமித்தமான நண்பர்கள் சார். நண்பர்கள் வேறு சார்’’ என ஹிப்ஹாப் தமிழா ஆதி முடித்தார்.
நன்றி: டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனல்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்