Akash Murali: அப்போ வாய்ப்புகள் குறைவு.. எனக்கும் ஸ்ட்ரெஸ் இருந்துச்சு.. ஆகாஷ் முரளி ஓபன் டாக்
Akash Murali: அப்போ வாய்ப்புகள் குறைவு.. எனக்கும் ஸ்ட்ரெஸ் இருந்துச்சு.. ஆகாஷ் முரளி ஓபன் டாக் ஆகப் பேசியுள்ளார்.

’நேசிப்பாயா’ என்னும் படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி.
நடிகர் ஆகாஷ் முரளியும், அவரது காதல் மனைவி சினேகா பிரிட்டோவும் இணைந்து பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர். அதன் தொகுப்பு இது!
யார் ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள்?
ஆகாஷ் - சினேகா தம்பதி: இரண்டுபேருமேன்னு சொல்லலாம். 50-50ன்னு கூட சொல்லலாம்.
யார் ரொம்ப மறப்பாங்க?
ஆகாஷ் முரளி: நான் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப்போனால், அங்கு அங்கு எதையாவது மறந்துவிட்டுட்டு வந்திடுவேன்.
யார் ரொம்ப பொஸசிவ்?
ஆகாஷ் முரளி: நான் தான் ரொம்ப பொஸசிவ்வுங்க.
சினேகா: ஆகாஷ் தான்.
என்ன மாதிரியான விஷயத்துக்கு ரொம்ப பொஸசிவ்?
ஆகாஷ் முரளி: காலேஜ் படிக்கும்போது ரொம்ப பொஸசிவ் ஆக இருந்தேன். அது எல்லாருக்கும் வர பொஸசிவ்னஸ் தாங்க.
யார் ரொம்ப சென்ஸிட்டிவ்?
சினேகா: நான் தான். யாராவது ரொம்பப் பிடிச்சிருச்சின்னா, சின்ன சின்ன விஷயத்துக்கு ரொம்ப ஹர்ட் ஆகிடுவேன்.
யார் ரொம்ப கோபக்காரி?
சினேகா: ஆமா நான் தான். ஆகாஷ் ரொம்ப அமைதி.
ஆகாஷ்: நான் ரொம்ப பொறுமைசாலி என்பதை ரொம்ப பெருமையாக சொல்லலாம். கோபம் வந்தால் ஒரு 5 நிமிஷம் தான்.
யார் ரொம்ப ரொமான்டிக்?
சினேகா: கண்டிப்பாக நான் தான். இல்லை நான் தான் இதை எடுத்துக்குவேன்.
ரொமான்டிக்காக சினேகா செய்த மறக்கமுடியாத விஷயம்?
ஆகாஷ் முரளி: ரொமான்டிக்காகவா.. வெளியூரில் சினேகா படிச்சிட்டு இருக்கும்போது, சினேகாவைப் பார்த்து ஒரு இரண்டு மாதம் ஆச்சு. வரமுடியாதுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. அப்போது மாஸ்டர்ஸ் படிச்சிட்டு இருந்தாங்க. அவங்க, அவங்க ஃபிரெண்ட் கிட்ட சொல்லி ஒரு மால் வரச் சொன்னாங்க. அங்கு போகும்போது, சினேகாவை ரொம்ப மிஸ் செய்ய ஆரம்பிச்சிட்டேன். லேட்டாக தான் போயிட்டு இருந்தேன். அப்போது ஒரு பஸ்ஸில் இருந்து இறங்கி, எதிர்புறத்தில் இருக்கிற சிக்னலுக்குப் போகணும். பார்த்தால், அங்கு சினேகா நின்னுட்டு இருந்தாங்க. அப்போது ரெட் சிக்னல் போட்டதும், படத்தில் வருகிற மாதிரி ஓடிப்போய் சினேகாவை கட்டிப்பிடிச்சிட்டேன்.
சினேகா: நான் எப்பவுமே அப்படி தான். அதனால், தான் நான் நிறைய கொரியன் படங்கள் பார்ப்பேன். அது ரொம்ப ரொமான்டிக்காகவும் ஸ்வீட்டாகவும் இருக்கும்.
சினிமாவில் எதையும் கணிக்கமுடியாதது. அடுத்தகட்டம் அதில் செல்ல பயம் இருக்கிறதா?
ஆகாஷ் முரளி: முதல் திரைப்படம் அமைஞ்சிருச்சு. எனக்கு பதற்றம் இருக்குது. முதல்படத்தை விட இரண்டாவது படம் நல்லா நடிக்கணும் என்கிற பதற்றம் நிச்சயம் இருக்கு. என்னுடைய முதல் படமாக நேசிப்பாயா அமைந்தது எனக்கு ரொம்ப நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இரண்டு வருஷமாக காத்திருந்திருக்கிறேன். அந்த சமயத்தில், எனக்கு வாய்ப்புகள் குறைவாகத் தான் இருந்தது.
எப்போதுமே நடிகரின் மகன் என்று ஈஸியாக சொல்வாங்களே. அது பற்றி?
ஆகாஷ் முரளி: சினிமாவில் இல்லாதவர்களிடம் கேட்டால், ஆம். எனது அப்பா முரளி ஒரு நடிகர் என்பதால் எனக்கு சினிமாவில் நுழைய வாய்ப்பு இருந்தது என்பது உண்மை தான். ஆனால், அதற்கப்புறம், நீங்கள் அதில் எப்படி நிலைத்து நிற்குறீங்க என்பதுதான் விஷயம் இல்லையா. எனக்கும் அந்த சமயத்தில் நிறைய ஸ்ட்ரெஸ் இருந்தது. அடுத்தடுத்து நன்கு நடித்தால் தான் வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் காதல் வாழ்க்கையை எந்தத் திரைப்படத்தோடு ஒப்பிடுவீங்க?
சினேகா: எங்கள் காதல் எங்களுடையது. அதை எந்தப் படத்துடனும் ஒப்பிடவேண்டாம். விட்டுடலாமே!
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்