ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு
ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப் என நடிகர் மோகன்லால் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப் என நடிகர் மோகன்லால் வெளிப்படை பேசியுள்ளார்.
ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களைப் படிக்கிறதுக்குக் காரணம் என்ன?
படம் நடிக்கிறது மட்டும் இல்லையே வாழ்க்கை. வேறு சில விஷயங்களும் நமக்குத் தேவை. நமக்கு நிறைய கேள்விகள் மனதிற்குள் இருக்கும். யாராவது ஒருத்தவங்க பதில் சொன்னால், நாம் அவருக்கு ரசிகர் ஆகிவிடுவோம். அவருடைய ஒரு புக் ஆக இருக்கலாம். ஒருத்தருடைய பேச்சில் புத்தகத்தில் தேவையான பதில் நமக்குக் கிடைக்கும்போது, ஓ மை காட் என இருக்கும். ஒரு பிரச்னை இருக்கும்போது சாயி பாபாவின் மெசேஜ் நமக்கு வரும்போது, ஸ்பிரிச்சவலைத் தாண்டி எமோஷனலான பாண்டிங் ஆக அது இருக்கும்.
என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், சூப்பர் இயற்கை சக்தி எனக்கு நடிப்பதில் உதவியாக இருக்கு. என்னுடைய தினசரி வாழ்க்கை மற்றும் எப்படி நடக்கனும் என்பது அந்த சக்தி வழிநடத்துறதாகத்தான் நான் நினைக்கிறேன்.
மோகன் லால் எப்படி இவ்வாறு நடிக்குறீங்கன்னு என்னிடம்கேட்டால், யாரோ என்னை வழிகாட்டுவதால்தான் எனக்கு இப்படி நடிக்கமுடிகிறது எனத்தோன்றும்.
ஏதோ ஒரு சக்தி என்னை வழிநடத்தும் என்று சொல்வது மன அழுத்தம் இல்லாமல் இருக்கும் இல்லையா?
நான் தேவையில்லாத எமோஷனலை என் தோளில் தூக்கி சுமக்கமாட்டேன். மனதாலும் உடலாலும் பட்டும்படாமல் இருப்பது நல்லதுதானே.
எப்படி ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கீங்க?
முதல் கேள்வியில் பதில் இருக்கு. நாங்கள் எந்த ஸ்ட்ரெஸ்ஸையும் எடுத்துக்கிறது இல்லை. பிரச்னைக்குரிய விஷயங்களை மெனக்கெட்டு நினைத்து, பரோஸ் படத்தின் ரிலீஸ் எப்படி நடக்கும். ஆள்கள் பார்க்குமா அப்படி எல்லாம் நினைக்காமல் ஒரு தடவை செய்திட்டால் அவ்வளவுதான் என்பதைப் புரிந்துகொள்ளணும். 64 வயசு ஆகிடுச்சு. அதனால் அந்த பக்குவம் வந்திடுச்சு. நமது குடும்பச்சூழல், நாம் நண்பர்கள் எல்லாம் நம்மை Influence செய்யும். கோயிலுக்கு போறது எதுக்கு. நான் பிரச்னையில் இருக்கேன். எனக்கு உதவி செய்யுங்கன்னு கடவுள்ட்ட கேட்கத்தான். ப்ளீஸ் ஹெல்ப் மீ தான் பெஸ்ட் பிரேயர்.
உங்களுடைய 30 வயதில் நீங்கள் பெரிதாக நினைத்த விஷயம், கொஞ்சம் தாமதமாக இதெல்லாம் பெரிதாக நினைத்திருக்கிறோமேன்னு நினைச்சிருக்கீங்களா?
நேர்மையாக சொன்னால், முன்பு நடந்ததை மாற்றமுடியாது. எதற்கும் பழையதை நினைக்கணும். அதெல்லாம் பொய். நடந்ததை சினிமாவில் ஃபிளாஷ்பேக்கில் இருப்பதைப்போல் போய் கரெக்ட் செய்யமுடியாது. நடந்ததை விட்டுடணும். ஒன்னுமே பண்ணமுடியாது.
நீங்கள் பின்பற்றுகிற ஐடியாலாஜி அல்லது தத்துவம் என்று அதைச் சொல்லலாம்?
நான் முதல்முறையாக நடிக்கும்போது இயற்கையிடம் கேட்டது, ’ப்ளீஸ் ஹெல்ப் மீ’ என்று தான். நீங்கள் இயற்கையிடம் கேட்டால் இயற்கை அதனைத் தரும். நீங்கள் மக்களை விரும்புங்கள். மக்கள் திரும்பி உங்களை விரும்புவாங்க. வேறு ஒன்றும் இல்லை. எப்படி நீங்கள் லைஃபை பார்க்குறீங்களோ, அப்படி தான் லைஃப் உங்களைப் பார்க்கும். சந்தோஷமாக இருக்கணும். பின்னே, தேவையில்லாத கேள்விகள் இப்படி கேட்கக் கூடாது. நான் ஜஸ்ட் ஒரு காமெடிக்காக சொன்னேன்.
எங்களுக்கு எல்லாம் ஒரு ஆர்வம் இருக்கும். நீங்கள் கமல் சார், ரஜினி சார், அமிதாப் சார் எல்லாம் சந்திக்கும்போது என்ன பேசுவீங்க?
அது ஆர்வமான கேள்வியாகவே இருக்கட்டும். நாங்கள் நண்பர்கள் மாதிரி தான் பேசிக்குவோம். எல்லோரையும் எவ்வளவு வருஷமாக தெரியும். படத்தைப் பற்றி பேசிறது எல்லாம் இல்லை. பொதுவாக ஜாலியாகப் பேசுவோம்.
ஒரு படத்தை ஏன் பண்ணனும்னு யோசிப்பீங்களா?
100 சதவீதம் யோசிப்பேன். ஒரு டைரக்டர் ஸ்கிரிப்ட் சொல்லும்போது, வரக்கூடிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லணும். முன்னாடி எல்லாம் மலையாளப் படத்தில் ஸ்கிரிப்ட் ஒன்னும் இல்லை. இப்போது அதெல்லாம் மாறிடுச்சு. இப்படியெல்லாம் பார்த்து செய்தாலுமே சில படங்கள் தோற்றுவிடும். அதற்கு லக்கும் இருக்கு. சில நேரங்களில் நான் தான், இந்த படம் பண்ணனும்தோணும். அப்படி தான் படம் பண்ணுவேன்.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி