Actor Senthil: இது சுட்ட கதை இல்ல.. பட்ட கதை.. உஷாரய்யா உஷாரு.. சைபர் கிரைமில் சிக்கி புலம்பும் நடிகர் செந்தில்..
Actor Senthil: நடிகர் மிர்ச்சி செந்தில், தான் சைபர் கிரைமில் சிக்கி ரூ.15, 000 ஆயிரத்தை ஒரு நொடியில் இழந்ததாகக் கூறி வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Actor Senthil: மிர்ச்சி எஃப்எம்-ல் ஆர்ஜேவாக பலரின் மனங்களை கவர்ந்த செந்தில், நடிப்பிலும் தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். தவமாய் தவமிருந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்களைக் காட்டிலும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடத்த போது தான் பலரது மனதையும் வென்றார்.
பின், அந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் இணைந்து பிசினஸ் செய்து வரும் நிலையில், செந்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
ஒரு நொடியில் பறிபோன பணம்
இந்நிலையில், மிர்ச்சி செந்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. இவருக்கு வந்த மெசேஜை நம்பி பணம் அணுப்பி ஏமாந்நதாக அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். மேலும் மக்களை இதுபோல் ஏமாறாமல் இருக்கவும் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் வீடியோ
இதுதொடர்பாக செந்தில் வெளியிட்ட வீடியோவில், அழுகுறதா சிரிக்கிறதான்னே தெரியல. எவ்ளோ தான் நாம படிச்சு உலக அறிவுன்னு எல்லாம் நெனச்சாலும் ஒருத்தன் சப்பையா ஆன்லைன்ல ஒரு மெசேஜ் அனுப்பி 15 ஆயிரம் ரூபாவ என்கிட்ட இருந்து ஆட்டைய போட்டுட்டான். அந்த கதைய சொல்றேன் கேளுங்க. உங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
பணம் கேட்டு வந்த மெசேஜ்
கோயம்புத்தூர்ல எனக்கு தெரிஞ்ச பெரிய ஹோட்டல் தொழிலதிபர். அவரு வாட்ஸ் அப்ல இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வருது. எனக்கு உதவி வேணும்ன்னு. அவர்கிட்ட இருந்து எல்லாம் மெசேஜ் வர்றதே ரொம்ப ஆச்சர்யம் தான். அவரே மெசேஜ் அனுப்புறாரேன்னு சொல்லி என்ன உதவி வேணும்ன்னு கேட்டேன். அவரு அவசரமா எனக்கு 15 ஆயிரம் வேணும் அனுப்புங்கன்னு சொல்றாரு. நானும் அவர்கிட்ட நம்பர் கேக்குறேன்.
நம்பர் செக் பண்ணல
அப்புறம் அவர் அனுப்புன நம்பர செக் கூட பண்ணாம பணம் அனுப்புறேன். அனுப்பிட்டு அப்புறம் பாத்தா, ஏதோ யோகேந்தர்ன்னு சொல்லிட்டு வேற பேர் வருது. அப்போ தான் எனக்கு டவுட்டே வருது. அது சார் நம்பர் இல்லயே. வேற யாரோ நம்பரு. இது வவேற யாரோ நம்பர்ன்னா அப்போ இது ஸ்கேம் தானான்னு சந்தேகம் வருது. ஆனா, அதுக்குள்ள பணம் போச்சு.
ஹேக்கர்ஸ் வேல
பின்னாடி, அவருக்கே போன் பண்ணி கேட்டு பாத்தா நெஜமாலுமே ஸ்கேம் தான். என்ன செந்தில் என் வாட்ஸ்அப்ப காலையிலயே எவனோ ஹேக் பண்ணிட்டான். இந்த மாதிரி எனக்கு 500வது போன் வருது எனக்குன்னு சொல்றாரு. இந்த மாதிரி பல பேருக்கு மெசேஜ் போயிருக்கு. சில பேர் பணத்தையும் அனுப்பிருக்காங்க. நான் சைபர் கிரைம்ல கம்ப்ளையன்ட் பண்ணிருக்கேன்னு சொல்றாரு.
சுட்ட கதை இல்ல பட்ட கதை
ஆனா, என்னோட 15 ஆயிரம் ரூபா பணத்த எவனோ குறுக்க பூந்து ஆட்டைய போட்டு போயிட்டான். அடுத்த முற யாராவது இந்த மாதிரி பணம் கேட்டா அதை கன்பார்ம் பண்ணாம பணம் குடுக்காதிங்க. எமோஷனலாகி யோசிக்காம எதையும் பண்ணாதீங்க. இத சுட சுட சுட்டுட்டு வந்திருக்கேன். இது சுட்ட கதை இல்ல பட்ட கதை என பேசி விழிப்புணர்வு செய்துள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்