Vijay: 'விஜய்க்கு ஓவர் ஹைப் கொடுக்க பிஆர் டீம் இருக்கு.. இதெல்லாம் இல்லைன்னா ஒன்னுமே இல்ல'- மீசை ராஜேந்திரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: 'விஜய்க்கு ஓவர் ஹைப் கொடுக்க பிஆர் டீம் இருக்கு.. இதெல்லாம் இல்லைன்னா ஒன்னுமே இல்ல'- மீசை ராஜேந்திரன்

Vijay: 'விஜய்க்கு ஓவர் ஹைப் கொடுக்க பிஆர் டீம் இருக்கு.. இதெல்லாம் இல்லைன்னா ஒன்னுமே இல்ல'- மீசை ராஜேந்திரன்

Malavica Natarajan HT Tamil
Jan 20, 2025 03:12 PM IST

Vijay: விஜய் படத்துக்கும் , அவருக்கும் ஓவர் ஹைப் கொடுக்க ஒரு பக்காவான பிஆர் டீமும், ஐடி விங்கும் இருக்கு என நடிகர் மீசை ராஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Vijay: 'விஜய்க்கு ஓவர் ஹைப் கொடுக்க பிஆர் டீம் இருக்கு.. இதெல்லாம் இல்லைன்னா ஒன்னுமே இல்ல'- மீசை ராஜேந்திரன்
Vijay: 'விஜய்க்கு ஓவர் ஹைப் கொடுக்க பிஆர் டீம் இருக்கு.. இதெல்லாம் இல்லைன்னா ஒன்னுமே இல்ல'- மீசை ராஜேந்திரன்

ஆக்ரோஷமான ரசிகர்கள்

அவர்களின் படம் வந்தால், ரசிகர்கள் கொண்டாட்டமே திருவிழா போல இருக்கும். மேள தாளம் முழங்க, முதல் காட்சிகளை பட்டாசு வெடித்து கொண்டாடி தன் படம் போல ஆர்பரிக்கும் ரசிகர்களும் உள்ளனர். அதுமட்டுமின்றி, தான் விரும்பும் நடிகரை பெரிதாக காட்டிக் கொள்ள மற்றொரு நடிகரை அவமானப்படுத்தும் ரசிகர்களும் உள்ளனர்.

இந்தப் போராட்டம் பல வருடங்கள் கடந்தும் இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களுக்குள் புது ட்ரெண்ட் ஒன்று உருவாகி வருகிறது. அது தான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நிலவரத்தை வைத்து ஒப்பிட்டு பார்ப்பது.

விஜய் நடித்த படத்தின் வசூல் அதிகமா,அஜித் நடித்த படத்தின் வசூல் அதிகமா என்ற சண்டை தீர்ந்த பாடில்லை. அதுமட்டுமின்றி, எந்த நடிகர்களின் படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவை, எந்த நடிகருக்கு சம்பளம் அதிகம் என்ற பேச்சுகள் எல்லாம் தான் தன்னை பெருமை படுத்துவதாக பேசி வருகின்றனர்.

அஜித் விஜய் படத்தின் வசூல்

இந்நிலையில், எஸ் எஸ் மியூசிக் யூடியூப் சேனலில் பேட்டி அளித்த நடிகர் மீசை ராஜேந்திரன் அஜித் மற்றும் விஜய் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தையும், லாபம் தரும் படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், அவர் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூல் குறித்து பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், வாரிசு , துணிவு படம் வந்த சமயத்தில் விஜய்யின் வாரிசு படத்தை கோயம்புத்தூரில் 11 கோடிக்கு விற்பனை செய்கின்றனர். அந்தப் படத்தின் வசூல் 11 கோடிக்கும் அதிகமாக சில லட்சங்களை தான் வசூலித்தது.

அதே சமயத்தில் அஜித்தின் துணுவு படத்தை 8 கோடிக்கு விற்பனை செய்கின்றனர். அந்தப் படம் 11 கோடி ரூபாய் வசூலித்தது.

அப்படிப் பார்த்தால், வாரிசு படம் வெளியீட்டின் போது படம் விநியோகித்தவர்களுக்கு 30, 40 லட்சம் தான் லாபம் வந்தது. ஆனால், துணிவு படத்திற்கு 3 கோடி லாபம் கிடைத்தது. இது இரண்டையும் வைத்துப் பார்த்தால் எந்த படம் ஹிட்டானது என்று சொல்ல முடியும்.

எது லாபம்

5 ரூபா முதலீடா போட்டு 50 ரூபா எடுக்குறது பெருசா, இல்ல 49 ரூபா போட்டு 1 ரூபா எடுக்குறது பெருசா. இங்க விஜய்க்கு நல்ல பக்காவான பி.ஆர் டீம் இருக்கு. ஐடி விங்கும், பிஆர்ஓ டீமும் விஜய்ய சுத்தி அப்படியே ஹைப் பண்றாங்க. அத பண்ணாதீங்கன்னு தான் நான் சொல்றேன். நீங்க வெளிப்படையா இருந்து சுத்தமா இருக்கணும். உண்மைய பேசனும்" எனக் கூறினார்.

வரிசையில் நிற்கும் படங்கள்

ஏற்கனவே விஜய் அஜித் ரசிகர்களுக்குள் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற கருத்துகளால் இது இன்னும் அதிக பிரச்சனையை ஏற்படுத்தும்.

தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படமும், விஜய்யின் கடைசி படமும் ரிலீஸாக காத்திருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் மற்றும் படத்தின் வெற்றி தோல்வி குறித்த கருத்துகள் வைரலாகி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.