நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்! கனத்த இதயத்துடன் இறுதி சடங்கு செய்த மகள்கள்!
நேற்று (25/03/2025) இரவில் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இரு மகள்களும் கண்ணீர் மல்க இறுதி சடங்கினை செய்தனர். இது காண்போர் மனதை கலங்க செய்தது.

நடிகரும் இயக்குனரும் ஆன மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு முதலே மனோஜிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அவரது உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மகள்கள் இருவரும் மிகுந்த கனத்த இதயத்துடன் மனோஜிற்கு இறுதி சடங்கினை செய்தனர். கண்ணீர் மல்க சடங்குகளை செய்த காட்சிகளை பார்த்த அனைவரும் கலங்கி நின்றனர். பாராதி ராஜாவும் கனத்த இதயத்துடன் அவரது மகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இந்த உடல் தகனத்தின் போது நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உடன் இருந்தார். மேலும் பல திரைப்பிரபலங்கள் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மறைவு திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடு செய்ய முடியாத இழப்பால் வாடும் குடும்பத்தினர்
இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் இயக்குனர் பாரதிராஜா மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும் மகனின் இழப்பால் வாடும் அவருக்கு பல திரையுலக பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மனோஜிற்கு 48 வயதே ஆன நிலையில் இந்த எதிபாரா இழப்பு அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது.
தந்தையின் படத்தினால் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் இறுதி வரை தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என கடுமையாக உழைத்தவர் மனோஜ் பாரதிராஜா. இவரது பல கனவுகள் நிஜம் ஆகாமலே போகியுள்ளது. இவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரிடியாக வந்து என்றே கூறலாம்.
இயக்குநர் அவதாரம்
கடந்த 1999இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர், சமீப காலங்களில் கதைக்கு முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவுடனான ரஜினிகாந்தின் பல காம்பினேஷன் காட்சிகளில் மனோஜ் பாரதிராஜா தான் டூப் போட்டு நடித்துள்ளார்.
இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் சுசிந்திரன் எழுதியதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.
மனோஜ் பெயரில் பாரதிராஜா 'மனோஜ் கிரியேஷன்ஸ்' என தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். சாதுர்யன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நந்தனா என்பவருடன் காதலில் விழுந்த மனோஜ், அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
மனோஜுக்கு ஆர்த்திகா, மதிவதினி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மனோஜ் பாரதிராஜாவுக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது.

டாபிக்ஸ்