Manohar: ரதி நிர்வேதம் பார்த்து ஆசீர்வதித்த சிவாஜி சார்.. அப்பாவின் மறைவுக்கு பின் வந்த விருது.. நடிகர் மனோகர் பேட்டி
Manohar: ரதி நிர்வேதம், நெஞ்சத்தைக் கிள்ளாதே படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர நடிகர் மனோகர் அவர்களின் பேட்டியைக் காணலாம்.

Manohar: தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகர் மனோகர். அழியாத கோலங்கள் படத்தில் அறிமுகமான மனோகருக்கு, நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் பெரிய பெயரைப் பெற்றுத்தந்தது.
பிரேம் நசீர், மம்முட்டி, மோகன் லால், கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கும் நடிகர் மனோகர் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு, ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி குறித்து பார்ப்போம். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
வணக்கம். இன்றைக்கும் அழியாத கோலங்கள் மனோகர் இவர் தான் என அடையாளம் கண்டுகொள்கிறார்களா?
ஆமாங்க சார். அடையாளம் கண்டுபிடிச்சிடுறாங்க. நான் பஸ், ஆட்டோ, காரில் போகும்போது, சில பேர் என்னிடம் நீங்கள்தான் மனோகரா எனக் கேட்பார்கள். அப்போது, அது நான் இல்லைன்னு சொல்லிட்டுப் போவேன். அது நல்லதுக்கு கேட்குறாங்களா கெட்டதுக்கு கேட்குறாங்களான்னு தெரியல. சரியான வாய்ப்பு இல்லைன்னு நினைச்சிடுவாங்களோன்னு இப்படி பதில் சொல்லிடுறது. அழியாத கோலங்கள் படத்தைக் காட்டிலும், நெஞ்சத்தைக் கிள்ளாதே கீச்சு, தானே நீங்க என பலர் கேட்பாங்க. சிரித்தால் அடையாளம் கண்டுபிடிச்சிடுறாங்க சார்.
