VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம்.. நடிகர் மணிகண்டன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijaysethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம்.. நடிகர் மணிகண்டன்

VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம்.. நடிகர் மணிகண்டன்

Marimuthu M HT Tamil
Jan 26, 2025 09:04 AM IST

VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம் என நடிகர் மணிகண்டன் பேட்டியளித்துள்ளார்.

VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம்.. நடிகர் மணிகண்டன்
VijaySethupathi: பத்திரிகை தரல.. தங்கச்சி கல்யாணம்.. விஜய்சேதுபதி அண்ணா நேரில் வந்து தந்த ரூ.3 லட்சம்.. நடிகர் மணிகண்டன்

அவ்வாறு டூரிங் டாக்கீஸ் ஊடகத்துக்கு நடிகர் மணிகண்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பினைக் காணலாம்.

அதில், ‘’விஸ்வாசம் படத்தின் கதையில் பணியாற்றியது அஜித்துக்கு தெரியுமா?

ஆமா.. ஆமா. நான் டப்பிங்கில் அஜித் சாரை பார்த்தேன். சிவா சார் என்னை அஜித் சார்கிட்ட, இவர் தான் சார், நம்மைப் படத்துக்கு வசனம் எழுதினார்னு அறிமுகப்படுத்தி வைச்சார். ரொம்ப இடங்களில் உங்கள் வசனங்கள் பிடிச்சிருந்ததுன்னு சொன்னார். அடுத்து உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொன்னார். உடனே, சிவா சார், இவர் தான் சார் விக்ரம் வேதாவில் ஒரு போலீஸ் ரோலில் நடிச்சிருந்தாரேன்னு சொன்னார். ஆமால்லன்னு சொன்னார். அடுத்து என்னப்பண்ணப்போறீங்க, நடிகராவா, எழுத்துப்பணியா என்பதை முடிவு பண்ணிடுங்க. அடுத்து அஜித் சார்கூட ஒரு போட்டோ எடுக்கணும்னு தோணுச்சு. ஆனால் புரொபஷனலா பேசிக்கிட்டு இருந்ததால் கேட்கமுடியலை. உடனே, சிவா சார்அதைப் பார்த்திட்டு போட்டோன்னு சொன்னதும் சொல்ல வேண்டியது தானே சார்னு அஜித் சார் கடிஞ்சிக்கிட்டார். அப்போது ஒரு பேக் ஒன்னு மாட்டியிருந்தேன். அதைப் பார்த்திட்டு, அதைக் கழற்றி வைங்க, யாரும் எடுத்துட்டுப்போயிடமாட்டாங்க கிண்டல் பண்ணுனார். அவர் பயங்கர ஜாலியான பெர்ஷன்.

உங்களுக்கும் பார்த்திபனுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. யார்னு சொல்லியிருக்காங்களா?

அவரை மாதிரியே, நீங்களும் ஒரு நடிகர், ஸ்கிரிப்ட் ரைட்டர், அவரை மாதிரியே ஒரு ஸ்லாங் இருக்கு.

இல்லை சார். யாரும் சொன்னதில்லை. பார்த்திபன் சார் ஆயிரத்தில் ஒருவன் படம் பண்ணிட்டு புரொமோஷனுக்கு வரும்போது, நான் ரேடியோவில் ஆர்.ஜே.வாக இருக்கிறேன். அவரை நான் தான் பொக்கே கொடுத்து கூப்பிட்டுப்போறேன். அப்போது கூட இருந்தவங்க மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் சார்னு சொல்றாங்க. ஏன் என் குரல் பேசுவீங்களான்னு கேட்டார். இல்லைன்னு சொன்னேன். உடனே, ஏன் என் குரலில் எதுவும் தனித்துவம் இல்லையான்னு கேட்டார். அடுத்து குட் நைட் பார்த்திட்டு வாழ்த்துச் சொன்னார்.

டெல்லி கணேஷை வைத்து நீங்கள் இயக்கிய படம் எப்படி இருந்துச்சு?

அற்புதமாக இருந்தது. டெல்லி கணேஷ் சார் வந்து உண்மையாலுமே ஒரு லெஜண்ட். அந்தப் படம் எடுக்கும்போதும் சரி, எடுத்து முடிச்சதுக்கப்புறமும் சரி, ஒரு ஃபேமிலி மாதிரியே ஆகிட்டேன். வாழ்க்கையில் பார்த்த கஷ்டங்களைக் கூட என்கிட்ட பகிர்ந்து இருக்கார். பயங்கரமா நம்புவார். நான் நிறைய ரோல்ஸ் பண்ணியிருக்கனும்போலடான்னு சொல்லிட்டு இருந்தார். எனக்கு சரியான ரோல்கள் எழுதலையோன்னு வருத்தப்பட்டிருக்கார். நானும் உண்மைதான்னு சொன்னேன். ஏதோ ஒரு ரீல்ஸில் நான் அவரைப் பத்தி பேசியிருந்தா கூட பார்த்திட்டு, கருத்து சொல்லிடுவார். என் மீது அதீத அக்கறையுள்ளவர். அவருடைய இறப்பு எனக்கு பயங்கர கஷ்டத்தை ஏற்படுத்துச்சு. உண்மையாலுமே கஷ்டத்தை ஏற்படுத்திச்சு.

பல கேரக்டர் ரோல் நடிச்சிட்டு இருந்தீங்க, எப்போது கதாநாயகன் ஆகத்தோணுச்சு?

அதை ஏன்கிட்ட வந்து கேட்டதும் எனக்கே சிரிப்பு தான், ஏன்பான்னு கேட்டேன். எனக்கு சொன்ன கதாநாயகன் கேரக்டருமே, அதற்கு ஒற்றுமையாக இருந்ததால் தான் எடுத்துக்கிட்டேன்.

விஜய் சேதுபதி எப்படி உங்களுக்கு பழக்கம்?

விஜய் சேதுபதி அண்ணா வந்து காதலும் கடந்து போகும் படத்தில் நடிக்கும்போது பழக்கம். அதுவும் பிரமாதமான ஒரு சம்பவம். வர, சூட்டிங் போக, முடிக்கன்னு இருந்தார். திடீர்னு ஒரு மழை நாளில், ஒதுங்க இடம் இல்லை. அப்போது நான் நின்னுக்கிட்டு இருந்த இடம் பக்கத்தில் வந்து நின்னுக்கிட்டார். அப்போது பேசுறார். என்னைப் பத்தி எல்லாத்தையும் கேட்கிறார். ஆர்.ஜே.வேலை எல்லாம் பார்த்திருக்கியடா, அந்த வேலை எல்லாம் பண்ணியிருக்கியடான்னு ஆச்சர்யப்பட்டுட்டார். என் தங்கச்சிக்கு ஒரு ஆப்ரேஷன், அதைத் தெரிஞ்சுகிட்டு, வந்து பார்த்தார். அடுத்து தங்கச்சிக்கு கல்யாணம்னு பத்திரிகை வச்சுகூட கூப்பிடல. திடீர்னு அவர்கிட்ட இருந்து ஒரு போன். இன்னிக்கு தானே, உன் தங்கச்சி கல்யாணம்ன்னு கேட்டுட்டு, 20 நிமிஷத்தில் வந்திட்டார் சார். வந்து என் அப்பா, அம்மாகிட்ட என்னைப் பத்தி நம்பிக்கையா பேசினார். இல்லைடா ஏதோ உருத்திட்டே இருச்சுன்னு சொன்னார். சட்டுன்னு 3 லட்ச ரூபாய் எடுத்துக்கொடுத்திட்டார்.

நீங்கள் சொன்னால், நம்பமாட்டீர்கள் அதெல்லாம் போட்டு செலவு பண்ணவுடன், கையில் 700 ரூபாய் தான் மீதம் இருந்துச்சு. அந்த தொகையை அன்றைக்குத்தரலை என்றாலும், நான் கடன் வாங்கியிருப்பேன். என்னுடைய வளர்ச்சியில் மிக அக்கறையானவர், விஜய்சேதுபதி அண்ணா’’என முடித்தார், நடிகர் மணிகண்டன்.

நன்றி: டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனல்

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.