Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு

Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு

Marimuthu M HT Tamil
Jan 17, 2025 03:20 PM IST

Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேசியதின் முழுவிவரம் அளிக்கப்பட்டுள்ளது.

Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு
Manikandan: அஜித் சாருடைய பணிகள் இன்ஸ்பயரிங்.. நெப்போட்டிசம் இருந்தால்.. குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன் பேச்சு

கோவையில் குடும்பஸ்தன் படவிழாவில் நடிகர் மணிகண்டன், அப்படத்தில் நடித்த அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

அதில், ’’ரொம்ப சந்தோஷம். லவ்வர் படத்துக்கு கோயம்புத்தூரில் பிரஸ் மீட் வைச்சிருந்தோம். அதன்பின் இப்போது தான், கோவை வந்திருக்கிறேன்.

குடும்பஸ்தன் அப்படிங்கிற படம், எல்லார் வீட்டிலும் நடக்கும் தினசரி சம்பவங்களின் தொகுப்பு தான், இந்தப் படம்.

எனக்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னது பிடிச்சிருந்தது. இன்னிக்குத் தேதிக்கு ஒரு சாகச படம் எடுக்கணும்னு தான் அதை எழுதத் தொடங்கியிருக்காங்க. மலையில் ஏறுறது பத்தி எழுதலாமா, நடுக்கடலில் நீந்துறது பத்தி எழுதலாமா என யோசிக்கும்போது, இன்னிக்குத் தேதி குடும்பம் நடத்துறதை சாகசம்தான், அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு கதை எழுதியிருக்காங்க. அதனால் தான், இந்தப் படத்தை எடுத்துப் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.

எனக்கு கொங்கு ஸ்லாங் வரல: மணிகண்டன்

என்கூட நடிச்சவங்க எல்லாம் ஒரு பத்து ஆண்டுகளாக நக்கலைட்ஸ் டீமில் பல வீடியோக்களில் ட்ரெயின் ஆகிட்டு இருந்திருக்காங்க. எனக்குதான் அவங்களோட வொர்க் பண்றப்ப, ஸ்லாங் வரல. அதற்காக பொறுமையாக எனக்கு விவரிச்சு, நல்லவிதமாக என்னை நடிக்க வைச்சாங்க. இது ஒரு டீம் எஃபர்ட் தான். இந்தப் படம் நாங்க நினைச்ச மாதிரி வந்தது பெரிய சந்தோஷம். நக்கலைட்ஸ் ஓனர் பிரசன்ன பாலச்சந்திரன் சாரை, அவரது நக்கலைட்ஸ் டீமில் வாழ்நாள் வழிகாட்டி மாதிரி பார்க்குறாங்க. உண்மையிலேயே பெரிய சுரங்கம் அவர். நிறைய உள்ள விசயங்களை உள்ளவைச்சுக்கிட்டு, அந்த நல்ல விஷயங்களைக் கொடுத்துட்டே இருக்கார்.

இந்தப் படம் பண்ணுனதில் நிறைய நல்ல விஷயம் நடந்துருக்கு என்றால், அதில் பிரசன்ன பாலச்சந்திரன் சாரின் பழக்கம் கிடைச்சதும் முக்கியமானது. ஜென்சன் மாதிரியான நிறைய நக்கலைட்ஸ் குழுவினரை பார்த்ததே மிகப்பெரிய சந்தோஷம்.

ஹீரோயின் சாந்தி தெலுங்கில் இருந்து வர்றாங்க. தெலுங்கில் இருந்து வர்றதால், எப்படி கொங்கு தமிழ் பேசுவாங்கன்னு கேட்டேன். அவங்க மெனக்கெடல் இல்லாமல் நல்லாப் பண்ணுனாங்க. சூட்டிங் மறுநாள் என்றால், அதற்கு முந்தைய நாளே வசனங்கள் எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணிட்டு வந்திடுவாங்க. ஒரு டேக்குக்கு மேல் அவங்க போனதே கிடையாது. அவங்களோட டெடிகேசனுக்கும் வாழ்த்துகள். படத்தைப் பற்றி ஓவர் வியூ இவ்வளவுதான்.

அஜித் சார் இன்ஸ்பயரிங் - மணிகண்டன்

ஒரு குடும்பம் என்றால் சுக துக்கம் இரண்டுமே இருக்கும் தான். அதை ரொம்ப சோகமான பூச்சு இல்லாமல், பயங்கரமாக சிரிக்க சிரிக்க சந்தோஷமாக போஸ்டரில் பார்க்கும்போது சந்தோஷமாக ஒரு உணர்வு தெரியுதுல, அப்படி ஒரு காமெடி நிறைந்த படமாக தான், குடும்பஸ்தன் படம் இருக்கும். எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கிறமாதிரியான வேடிக்கையான விஷயங்கள் இருக்கும்.

ரேஸில் ஈடுபடும் அஜித் சார் எங்களை மாதிரி ஜெனரேஷனுக்கு பெரிய ஐகான் தான். அவருடைய உள்ளுணர்வான கார் ரேஸை நோக்கிய முயற்சி பயங்கரமாக இருந்து இருக்கிறது. அஜித் சார் அவரது கனவை எப்போதுமே அவர் கைவிட்டது இல்லை. அவருக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கிறது, எங்கள மாதிரி ஆட்களுக்கு இன்ஸ்பயரிங்காகவே இருக்கு. தொடர்ந்து அதைத் துரத்திட்டே இருந்தால் அதைப் பிடிச்சிடலாம் எனக் காட்டுது.

நெப்போட்டிசம் இருக்குதான்னு தெரியலை. அப்படியெல்லாம் இருந்து இருந்தால் என்ன மாதிரி சின்ன நடிகர்கள் எல்லாம் வந்திடவே முடியாது’ என குடும்பஸ்தன் பட விழாவில் மணிகண்டன் பேசியுள்ளார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.