'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்

'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்

Marimuthu M HT Tamil
Updated May 12, 2025 09:40 AM IST

‘ பள்ளி வந்து சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு எதிர்ப்புறம், புனித பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் என்கிற ஸ்கூல் இருக்கும். அங்கு தான், 10ஆம் வகுப்பு வரை படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 சாந்தோமில் படிச்சேன்' என நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.

'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்
'நான் நல்லாப் படிப்பேன்.. சினிமான்னு முடிவு எடுத்ததும் அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்’: மணிகண்டன்

இதுதொடர்பாக நடிகர் மணிகண்டன் ஜே.எஃப்.டபிள்யூ பின்ஜ் யூடியூப் சேனலுக்கு, அனு ஹாசன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்து இருந்தார். இந்தப் பேட்டி பிப்ரவரி 28ஆம் வெளியாகியிருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம். அவையாவன:

‘’எழுத்தாளர், இயக்குநர், நடிகர், வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்னு நிறைய பண்ணியிருக்கீங்க. நடிகர் மணிகண்டன் ஒரு பன்முகத் திறமைமிக்க கலைஞர்?அவருடைய பள்ளி வாழ்க்கை எங்கு இருந்தது?

பள்ளி வந்து சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு எதிர்ப்புறம், புனித பிரான்சிஸ் சேவியர் மெட்ரிக்குலேசன் என்கிற ஸ்கூல் இருக்கும். அங்கு தான், 10ஆம் வகுப்பு வரை படித்தேன். பிளஸ் 1, பிளஸ் 2 சாந்தோமில் படிச்சேன்.

ஸ்கூலில் எப்படி நடிகர் மணிகண்டன் சமத்துப் பையனா?

நான் ஸ்கூலில் ரொம்ப நல்லா படிப்பேன். பொதுவாக ஒரு லைன் இருக்கு இல்லை. படிப்பு வராதவங்க, உருப்படியாகதவங்க தான் அவங்க தான் சினிமாவுக்குப்போவாங்கன்னு. நான் போய் சினிமாவுக்குப் போறேன் சொன்னேன். உடனே, எங்கள் வீட்டில் எல்லோரும் பயங்கர ஷாக். ஏனென்றால், நான் ரொம்ப நல்லாப் படிப்பேன். கிரிக்கெட்னா உயிரு. நான் பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பர். ஒரு கட்டத்தில் தெரிஞ்சுப்போச்சு, கிரிக்கெட்டர் ஆவது பயங்கர கஷ்டம்போல. அடுத்து இன்ஜினியரிங்கும் போயிட்டேன். நல்லபடியாகப் படிச்சு, முடிச்சிட்டேன். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் படிச்சேன். என் வாழ்க்கையே என்னவாக இருந்தது என்றால், ஆட்டோமேஷன் இன்ஜினியராக வேலை செய்யப்போறேன். ஒரு ரூ.45ஆயிரம் சம்பளம். ஹேப்பி ஃபேமிலியாக இருக்கணும். சனி,ஞாயிறு என்றால், ஏதாவது ஒரு படத்துக்குப் போறது, கல்யாணம், ஒரு அழகான ஃபேமிலின்னு நினைச்சிட்டு இருந்தேன். மொத்தமாக எல்லா கனவுகளும் சிதைந்து இங்கே வந்தாச்சு.

Go With Flow ஒரு சில விஷயங்களுக்காக பண்றீங்க. மத்த விஷயங்கள் எல்லாம் பிளான் தானே பண்றீங்க?

சும்மா போய் பார்க்கணும்னு வரலை. போனால், அதில் அந்தத்துறையில் நிலைச்சிருக்கணும். 2007-ல் இந்த முடிவு எடுக்கிறேன். அடுத்து வாழ்க்கை வந்து எது எல்லாம் பண்ணக்கூடாதுனு ஒரு ஆறு வருஷம் படம் சொல்லிக்கொடுத்துச்சு. யார் யார்கிட்ட எல்லாம் வேலை செய்யக்கூடாதோ, அப்படி போய் செம அடிவாங்கி, வந்திட்டேன். புலம்பல்கள் எல்லாம் இருந்துச்சு. அப்போது தினம் தினம் நான் எனக்கு சொல்லிக்கிட்டது என்னவென்றால், தம்பி, இப்படி தினமும் நடக்கப்போகுது. அடிவாங்குவதற்குத் தயாராய் இரு எனச் சொல்லிக்கிட்டேன்.

ஸ்கூலில் எல்லாம் சினிமா பார்ப்பீங்களா?

நிறைய பார்ப்பேன். கட் அடிச்சிட்டு எல்லாம் பார்க்கமாட்டேன். நல்ல பையன் என்கிற பெயர் இருக்கு இல்லையா, சின்ன தவறு பண்ணினால் கூட டீச்சர்ஸ் கேட்பாங்க. ஆனால், சேட்டை செய்யிற பசங்களுக்கு ஒரு சுதந்திரம் இருக்கு. எங்க வீட்டில் டெலிவிஷனில் தான் படமே பார்ப்பேன். எங்க வீட்டில் தியேட்டருக்கு கூட்டிட்டுப்போனதே கிடையாது.

வேட்டையாடு விளையாடு காலேஜ் முதல் வருஷம் வெளிவருது. நான் காலேஜ் கட் அடிச்சிட்டுப் பார்த்த, முதல் படம் வேட்டையாடு விளையாடு.

அந்தப் படத்தின் சில காட்சிகள், எங்கள் காலேஜில் எடுத்திருந்தாங்க. மத்தபடி, கேபிள் டிவியில் ஞாயிற்றுக்கிழமைப் போடுற படங்கள் தான், நான் சினிமா பார்க்கிறதுக்கான வழி. அதுவும் எங்க சித்தப்பா வீட்டில்போய் தான் படம் பார்ப்பேன். எங்கள் வீட்டில் டிவி கிடையாது. எங்கள் வீட்டில் படிக்கலையான்னு கேட்பாங்க.

இப்படி சித்தப்பா வீட்டில் பார்த்த படங்களை பசங்ககிட்ட போய் டிஸ்கஸ் பண்றது, நடிச்சுக்காட்டுறது எல்லாம் பண்ணிட்டோம். அந்த சமயத்தில் கிரிக்கெட், சினிமா பத்திதான் பேசிக்கிட்டே இருப்போம். அதுதான், சினிமாவுக்கான திறவுகோலாக இருந்தது. இவையெல்லாம் தான், என்னை வளர்த்தது’’ என நடிகர் மணிகண்டன் கூறியிருக்கிறார்.