Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி

Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி

Marimuthu M HT Tamil
Jan 25, 2025 09:15 AM IST

Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி

Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி
Manikandan: நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு.. ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட்.. 2 மாத ரிகர்சல்.. நடிகர் மணிகண்டன் பேட்டி

நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் என்னும் படம் நேற்று ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகியிருக்கிறது. இந்தப் படத்தின் புரொமோஷன் தொடர்பாக நடிகர் மணிகண்டன் பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

அவ்வாறு டூரிங் டாக்கீஸ் ஊடகத்துக்கு நடிகர் மணிகண்டன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் இயக்குநர் ஞானவேல் சார்கூட மீட்டிங் நடக்குது. அப்போது இவ்வளவு நாட்களாக என்னை ஃபாலோ பண்றீங்கன்னு கேட்கிறேன். இல்லை சும்மா தான்னு சொல்லிட்டார்.

ஒரு மூன்று மணிநேரம் ஃப்ரீயாக இருப்பீங்களான்னு கேட்டார். இருப்பேன் சார். அப்போது ஜெய்பீம் படத்தோட கதையை ஞானவேல் சார் சொல்கிறார். எமோஷனலாக இருக்கு. உடனே, ஸாரி சார், நீங்க கதை சொல்றதுக்காக தான் அழைச்சிருப்பீங்கன்னு தெரியாது அப்படின்னு சொல்றேன். அடுத்து இதை எதுக்காக என்னிடம் சொல்றீங்கன்னு கேட்டேன். இல்லை இடையில் ஹீமராக எழுதித்தரமுடியுமான்னு கேட்டார். நான் கண்டிப்பாக பண்றேன்னு ஒத்துக்கிட்டேன்.

அடுத்து ஸ்கிரிப்ட்டை தரமுடியுமான்னு கேட்டு வாங்கிட்டுப் போய், அன்றைக்கே முழுமையாகப் படிச்சு முடிச்சேன்.

ஞானவேல் சார் கொடுத்த டிவிஸ்ட் - நடிகர் மணிகண்டன்!

எங்கம்மா திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவங்க என்பதால், அந்த வட்டார வழக்கு, படத்தில் இருந்தது. பிறகு, என் அம்மாவிடம் கேட்டு சில விடுகதையெல்லாம் சேர்த்தேன். அது அவருக்கு பிடிச்சிருந்தது. அடுத்து ஒரு இரண்டு வாரம் கதையை டிஸ்கஸ் செய்து முடிச்சிட்டோம்.

அடுத்து ஸ்கிரிப்ட் நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு கிளம்புறேன். அப்போது மணி இருங்கன்னு சொல்றார், ஞானவேல் சார். அடுத்து ராஜாகண்ணு கேரக்டர் யார் பண்ணினால் நல்லாயிருக்கும்ன்னு என்னிடம் ஒரு சாய்ஸ் கேட்கிறார்.

நான் என்னைத்தவிர, நான்கைந்து நடிகர்களோட பெயரைச் சொல்கிறேன். அடுத்து அவங்க எல்லாரும் இருக்காங்க. உங்களுக்கு ஓ.கே.வான்னு கேட்டாங்க. நான் எப்படி சார்னு தயங்குகிறேன். உடனே, அவர் இல்லை அந்த சீனை நீங்க படிச்சுகாட்டிய விதம் நல்லாயிருந்துச்சு அதனால்தான் என்றார். உடனே, சார் நான் சத்தியமாக சொல்றேன். இந்த வாய்ப்பினை வாங்கணும் என்கிற எண்ணத்தில் நான் படிக்கல சார்னு சொல்றேன். அதைக்கேட்டுட்டு, படிச்சுக்காட்டியதில் நீங்க பண்ணுனீங்க என்றால் நல்லாயிருக்கும்ன்னு சொன்னார், ஞானவேல் சார்.

நயன்தாரா மேம் தந்த ஒத்துழைப்பு: நடிகர் மணிகண்டன்

அப்போது நான் சொல்றேன். நயன்தாரா மேம் கூட, நெற்றிக்கண் படம் போயிட்டிருக்குன்னு சொல்றேன். 20 நாள் மட்டும் பேசி வாங்கித் தர்றீங்களான்னு கேட்டார். அடுத்து நயன்தாரா மேம், ஓ.கே. நான் இன்னொரு படத்தில் நடிச்சிட்டு வந்திடுறேன் சொல்றாங்க. அந்த கேப்பில் நான் நடிச்ச படம் தான், ஜெய்பீம்.

சில படங்கள் எடுக்கும்போதே தெரிஞ்சிடும் சார். ஜெய்பீம் எடுக்கப்போறோம் என்கிற முதல் நாளே இது வேறு ஒன்றாக இருக்கப்போகுதுன்னு தெரிஞ்சது.

ஆனால், இப்படம் அரசியல் ரீதியாக மாறும்னு நினைக்கல. இந்தப் படம் வெளியானதும் படத்தைப் பார்த்து தமிழக முதலமைச்சர் ஐயா, நிறைய தொல் பழங்குடியினருக்கு நிலப்பட்டாவும், ஆதாரும் வழங்க உத்தரவிட்டது வந்து இந்தப் படத்தை எடுத்ததற்கான முழுப் பணியையும் நிறைவு செய்தது.

ஜெய்பீம் படத்தில் நடிப்பதற்காக எனக்கு இரண்டு மாதம் ரிகர்சல்: நடிகர் மணிகண்டன்

முதலில் ஜெய்பீமில் நடிகர் சூர்யா சார் நடிக்கிறது தெரியாது சார். ஓரிரண்டு வாரங்களில் நடிகர் சூர்யா சார் ஜெய்பீம் படம் பண்றாங்கன்னு சொல்லிட்டாங்க.

ஜெய்பீம் படத்தில் நடிக்கிறதுக்காக இரண்டு மாசம் எனக்கு ரிகர்சல். நாங்க போயி, இருளர் மக்கள் தங்கியிருக்கிற இடத்தில் தங்கியிருந்து, அவுங்க கூடதான் வேட்டைக்குப்போறேன். ஒரு கட்டத்துக்கு மேல், உறவு சொல்லி, பேச ஆரம்பிச்சிட்டாங்க.

வேட்டை என்பது மிகப்பெரிய விளையாட்டாக இருக்குன்னு எனக்குத் தெரியாது. அவங்க சொல்வாங்க, காட்டுப்பன்றியை ஒரே ஆளாக இவன் அடிச்சான் அண்ணானு சொல்வாங்க. வேட்டைக்காரனுக்குப் பின் இருக்கும் கதை, அவங்க பாடல்கள், நடனம் ஆகியவற்றைக் கத்துக்க இரண்டு மாசத்தில் முடிஞ்சது.

ஒவ்வொரு படமும் பெரிய ஆய்வாக தான் எனக்கு இருக்குது. இப்போது, நான் நிஜ ராஜாக்கண்ணு போலவே உலவ, அந்த இரண்டு மாதப் பயிற்சி உதவியது’’ என்றார், நடிகர் மணிகண்டன்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.