Actor Manikandan: 'மத்தவங்களுக்கு வாழ்ந்து காட்ட நெனச்சு நான் வாழாம போயிட்டேன்'- ஆதங்கப்பட்ட மணிகண்டன்
Actor Manikandan: நான் என் வாழ்க்கையை மத்தவங்களுக்காக வாழ்ந்து காட்ட நெனச்சு எனக்காக வாழாம போயிட்டேன் என நடிகர் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆதங்கமாக பேசியுள்ளார்.

Actor Manikandan: தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பன்முகத் தன்மை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காரணம் ஒரு திறமையை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுவது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை.
அதனால், தற்போது நடிகர்களாக வருவோர்கள், பாடகர்களாகவும், இசையமைப்பாளர்களாக, நடன இயக்குநர்களாக, இயக்குநர்களா என பல திறமைகளுடன் உள்ளனர். அவர்களால் தான் தமிழ் சினிமாவில் சர்வைவ்வும் செய்ய முடிகிறது.
நடிகர் மணிகண்டன்
அப்படி பன்முகத் திறமை கொண்ட ஒருவராக உள்ளார் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் டப்பிங் கலைஞராகவும், கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும், வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும் தன் பணியை இவர் செவ்வனே செய்து வருகிறார்.
இவரது ஒவ்வொரு படைப்பும் மக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அப்படி இருக்கையில், இவர் சமீபத்தில் நடித்த குடும்பஸ்தன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில், தன் வாழ்க்கை குறித்த தகவல்களை கூறியிருப்பார்.
எனக்காக நேரம் செலவிட முடியல
அந்தப் பேட்டியில், "மணிகண்டனோட வாழ்க்கையில காதல் இன்னும் வரல. என்னோட லைஃப் சினிமாவுக்குன்னு ஓட வச்சிட்டதுனால எனக்காக பெருசா நேரம் செலவிட முடியல. நான் என் பிரண்ட் கிட்ட சொல்லுவேன். அடுத்த ஜென்மத்துலயாவது ஒழுங்கா வாழனும்டான்னு.
இந்த துறை மேல எனக்கு பெரிய வைராக்கியம் இருந்தது. நிறைய பேருக்கு பதில் சொல்றதுக்காக வாழ்ந்தேன். அதெல்லாம் பண்ணிருக்க தேவையில்லையோன்னு தோணுது. ஆனா இதுக்கு மேல அதெல்லாம் யோசிச்சு ஒண்ணும் பண்ண முடியாது.
ரொம்ப வலி மிகுந்த வாழ்க்கை
என்னோட வாழ்க்கை ஆரம்பத்துல ரொம்ப வலி மிகுந்ததா இருந்தது. அந்த டைம்ல நான் வாழ்ந்து காட்டுறேன்னு வாழ ஆரம்பிச்சு எனக்காக வாழ முடியாம போச்சு. ஒரு விஷயத்துக்காக வேலை செய்யுறோம்ன்னா அதுக்காக ரொம்ப மெனக்கெடுறேன். ஆனா, அதுவே எனக்கு மைனஸ் ஆகிடுது. ஏன்னா அதத் தவிர வேற எது மேலயும் கவனம் செலுத்த மாட்டிங்குறேன். எதுக்கும் ஒரு லிமிட் தெரியாம எல்லாத்துலயும் தீவிரவாதியாவே இருக்கேன்.இதுனால மத்தவங்களுக்கும் கஷ்டம் ஆகிடுது.
பலன எதிர்பார்த்து வேல செய்ய கூடாது
சினிமாவுல நானே ஆரம்ப நிலையில தான் இருக்கேன், நான் யாருக்கும் அட்வைஸ் சொல்ற இடத்துல இல்ல. நான் என்னோட வேலைய செஞ்சிட்டே இருந்தேன். அத யாரோ பாத்திருக்காங்க அவ்ளோ தான். நான் சினிமாவுல இதெல்லாம் செஞ்சா பெரிய ஆள் ஆகிடலாம்ன்னு எந்த வேலையும் செய்யல. பலன எதிர்பார்த்து வேல செஞ்சா ரொம்ப சீக்கிரமாவே டயர்ட் ஆகி கஷ்டப்படுவோம்.
படம் நடிக்குறது, எடுக்குறது எல்லாம் ரெண்டாம் பட்சம் தான். ஒரு படத்துல நாம இருக்கோம்ங்குறதே இந்த காலத்துல பெரிய விஷயம் தான்" எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்