Guntur Kaaram: 'நான் குடிச்சது பீடியே இல்ல, இது தான் அது' - மகேஷ் பாபு சொன்ன ரகசியம்
குண்டூர் காரம் படத்தில் அதிகமாக பீடியைப் புகைத்தது பற்றி நடிகர் மகேஷ் பாபு விளக்கமளித்துள்ளார்.

குண்டூர் காரம் படத்தில் தான் புகைத்தது உண்மையான பீடி இல்லை எனவும்; தான் ஒருபோதும் புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கமாட்டேன் எனவும் கூறிய சம்பவம் வைரல் ஆகியுள்ளது.
அண்மையில் ஜனவரி 12ஆம் தேதி தெலுங்கில் மகரசங்கராந்தியை ஒட்டி வெளியான திரைப்படம், குண்டூர் காரம். இப்படத்தில் மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாக்ஷி செளத்ரி, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்குண்டான இசையை தமன் அமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘’குறிச்சிமாடத்துபெட்டி'' என்னும் பாடல், படம் வருவதற்கு முன்பே ஹிட்டானது. படத்தை தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் எழுதி, இயக்கியுள்ளார். 200 கோடி ரூபாய் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மூன்று நாட்களில் ரூ.164 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் பல இடங்களில் மகேஷ் பாபு பீடி குடிப்பதுபோல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் அந்த பீடி குறித்து குண்டூர் காரம் படத்தின் ஹீரோ மகேஷ் பாபு விளக்கமளித்துள்ளார். அது என்னவென்றால், ‘’குண்டூர் காரம் படத்தில் நான் பிடித்தது வழக்கமான பீடி கிடையாது. அது லவங்க இலைகளால் செய்யப்பட்ட ஆயுர்வேத பீடி. முதல்முறை சூட்டிங் தொடங்கும்போது ஒரிஜினல் பீடியைப் பயன்படுத்தினேன்.
கொஞ்ச நேரத்தில் தலைவலியே வந்துவிட்டது. பிறகுதான், ஆயுர்வேத பீடியை புகைக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். அது நன்றாக இருக்கவே, அதை குண்டூர் காரம் படம் முழுக்கவே பயன்படுத்தினோம். ஆனால், நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன். அதனை ஊக்குவிக்கவும் மாட்டேன்’' என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்