Actor Madhavan: ஏன் என்னை பாத்து இப்படி சொல்றாங்கன்னே தெரியல.. என்ன பாத்து பயப்படுறாங்க.. மாதவன் கேள்வி
Actor Madhavan: நான் எப்போதும் ஜாலியான ஆள். ஆனால், நான் ஷூட்டிங் போகும் இடமெல்லாம் என்னை பாத்து பயப்படுறது ஏன்னு தெரியவில்லை என நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

Actor Madhavan:20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து மக்களை ஈர்த்தவர் ஆர். மாதவன். இவரின் சமீபத்திய திரைப்படம் ‘ஹிசாப் பரபர்’.
கணக்கு பார்க்கும் மாதவன்
இந்தப் படத்தில் மாதவன் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ரயில் டிக்கெட் சரிபார்ப்பவராக நடித்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் கணக்குகள் குறித்து மிகவும் கவனமாக இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தான் உண்மையில் அப்படி இல்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால் இன்று எனது சொத்து மதிப்பு இப்போதைவிட மிக அதிகமாக இருந்திருக்கும் என ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
இந்தப் பேட்டியில், பணம் குறித்த தனது கருத்து, கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் மற்றும் திரையில் தனது இமேஜ் எப்படி உள்ளது என்பது ககுறித்தும் அவர் பேசியுள்ளார்.
சொத்து மதிப்பு
தன்னிடம் பில்லியன் டாலர் சொத்து மதிப்பு இல்லையென்றாலும் அதைப் பற்றி வருத்தப்படவில்லை. நான் அனுபவங்களில் செலவு செய்ய விரும்புகிறேன். ஒரு புதிய அனுபவத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதை நான் பார்க்க மாட்டேன்.
அனுபவத்தை பெற அதைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தேவை. இதற்காக பல தேவையற்ற செலவுகளைச் செய்துள்ளேன். ஆனால் ஒரு நடிகருக்கு அது அவசியம். அந்த அனுபவங்களால் தான் இன்று நான் ஒரு நடிகராக இருக்கிறேன் என அவர் விளக்குகிறார்.
பெற்றோரின் நேர்மை
நேர்மையான, கட்டுப்பாட்டுள்ள குணம் தனது பெற்றோரின் தலைமுறையுடன் தொடர்புடையது. எல்லா பெற்றோர்களும் நேர்மையானவர்களாக இருப்பதில் பெருமை கொள்கிறார்கள். அந்த நேர்மையை நீக்கிவிட்டால் அவர்களின் பெருமை போய்விடும்.
என் கதாப்பாத்திரம் இதுதான்
அது அவர்களின் வாழ்வின் அடிப்படை என நினைத்துள்ளனர். இது தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளுடன் நான் உணர்ந்தேன் என்றார். அத்துடன் தன் குணத்திலோ அல்லது பெற்றோரின் குணத்திலோ நேர்மையை எடுத்துவிட்டா் ஒன்று அவர்கள் முறிந்து போவார்கள் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி மற்றவர்களை அழிக்க முயற்சிப்பார்கள். நான் நடித்த இந்தக் கதாபாத்திரம் அப்படித்தான் செய்கிறது’ என்கிறார்.
ஏன் அந்தப் பெயர்ன்னு தெரியல
தான் ஒரு வேடிக்கையான நபர் என்றாலும், திரைக்கு வெளியேயும் திரையிலும் கோபமாக இருப்பது போன்ற ஒரு இமேஜ் உருவாகியுள்ளது என மாதவன் ஒப்புக்கொள்கிறார்.
இது மிகவும் விசித்திரமானது. என்னைச் சந்தித்தவர்கள் அனைவரும் நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிவார்கள். ஆனால் நான் செட்டுக்குச் சென்றால், என்னை சுற்றி ஒரு பயமுறுத்தும் தோற்றம் இருக்கிறது என அடிக்கடி சொல்கின்றனர்,
நான் கத்தியதே இல்லை
அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. செட்டில் நான் கத்தியதாகவோ அல்லது என் அதிகாரத்தை காட்டியதாகவோ எனக்கு நினைவில் இல்லை. ஆனால் மக்கள் மீது அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் போல’ என சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
ஹிசாப் பரபர் படம்
அஷ்வினி தீர் இயக்கியுள்ள ‘ஹிசாப் பரபர்’ படம் தனியார் வங்கியில் நடைபெறும் பெரிய ஊழலை வெளிக்கொணர முயற்சிக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. இந்தப் படத்தில் மாதவனைத் தவிர, நீல் நிதின் முகேஷ், கீர்த்தி குல்காரி மற்றும் ரஷ்மி தேசாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜனவரி 24ம் தேதி அன்று ஜீ5-ல் வெளியிடப்பட்டது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்