'18 வருஷம் ஆச்சு.. இனிமே ரொமான்ஸ் படத்துல நடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..'- மாதவன் சொன்ன ஷாக் ஸ்டேட்மெண்ட்
நான் 18 வருடங்களுக்கு முன்பே இனி ரொமான்ஸ் படங்களில் நடிக்க மாட்டேன் என முடிவு செய்துவிட்டேன் என்று பேசிய நடிகர் மாதவன் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வந்த தமிழ் படம் டெஸ்ட். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நடிகை நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மீன் ஆகியோருடன் இணைந்து நடித்த இந்தப் படம் கடந்த மாதம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன் தான் ஏன் ரொமான்ஸ் படங்களில் நடிப்பதில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார்.
நான் ரொம்ப தவிச்சுபோயிட்டேன்
பிஹைண்ட்வுட்ஸிற்கு அளித்த அந்தப் பேட்டியில், "நான் ஹீரோவா பண்ண இத்தனை படங்கள்ல என்கூட நடிச்ச ஒரே தமிழ் ஹீரோயின் அப்புறம் கடைசி ஹீரோயின்னா அது ஷாலினி தான். மத்த ஹீரோயின்களுக்கு எல்லாம் சரியான தமிழ் தெரியாததுனால ரொம்ப நான் தவிச்சுட்டேன். ஏன்னா அந்த மொழி தெரிஞ்சிருந்தா அவங்க, ஏற்கனவே எழுதியிருக்க டயலாக்க இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆக்க ஏதாவது பேசி ட்ரை பண்ணுவாங்க. அப்பதான் நம்மால அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து அதை இம்ப்ரூவ் பண்ண முடியும்.