Actor Madhavan: '6 பேக்ஸ் இல்ல.. டான்ஸ் தெரியாது.. ஆனாலும் நான் 25 வருஷம் சர்வைவ் பண்றேன்' - மாதவன் சொன்ன சீக்ரெட்
Actor Madhavan: 25 வருடங்களாக சிக்ஸ் பேக் இல்லாமல், நடனமாடத் தெரியாமல் ஹீரோவாக ஜொலித்து வருவதற்கான காரணங்களை நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

Actor Madhavan: சிக்ஸ் பேக் இல்லாமல், நடனமாடத் தெரியாமல் 25 வருடங்களாக ஹீரோவாக ஜொலிப்பது எப்படி என்று மாதவன் கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது. 'ஹிஸாப் பராபர்' எனும் இந்தி படத்தின் மூவம் நடிகர் மாதவன் தற்போது மீண்டும் மக்களை சந்திக்க வந்துள்ளார்.
அந்தப் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில், மாதவன் பங்கேற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நடிகர் மாதவன் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர், தன் சினிமா வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார்.
பெண்களின் மனம் கவர்ந்த நடிகர்
1990களின் பிற்பகுதியில் தனது புன்னகையால் பல பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் மாதவன். மேடி மேடி என பெண்கள் விரும்பும் நடிகராகவும், தான் திரையில் வந்தாலே படம் ஹிட் என்ற தாக்கத்தையும் உருவாக்கினார். இவர், சமீபத்தில் ஜீ5 ஓடிடியில் வெளியான 'ஹிஸாப் பராபர்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.
மாதவனின் 'ஹிஸாப் பராபர்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையொட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், இத்தனை வருடங்களாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கக் காரணத்தையும் விளக்கியுள்ளார்.
சிக்ஸ் பேக் இல்லை.. நடனமும் வராது
"மக்களைப் புரிந்துகொள்ள நான் அதிக நேரம் செலவிடுகிறேன். அதனால்தான் 25 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கிறேன். சிக்ஸ் பேக், நடனம் என ஒரு சூப்பர் ஹீரோவுக்கான எந்த அம்சமும் எனக்கில்லை. இருந்தாலும் நான் ஜொலிக்கிறேன். ஏனென்றால், உலகின் மிகவும் சிக்கலான தலைமுறையை நான் சரியாகப் பிரதிபலிக்கிறேன்" என்று மாதவன் கூறியுள்ளார்.
இந்தத் தலைமுறை ஏன் சிக்கலானது?
இந்தத் தலைமுறையை ஏன் சிக்கலானது என்று கூறுகிறேன் என்பதையும் மாதவன் விளக்கியுள்ளார். "என் தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஐடி, அரசியல், வணிகம் என எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். முந்தைய எந்தத் தலைமுறையும் பார்த்திராத அளவுக்கு உலகம் வேகமாக மாறுவதை எங்கள் தலைமுறை பார்த்திருக்கிறது.
சிக்கலான சூழ்நிலையிலும் தொடர்பு
எஸ்டிடி பூத்களில் இருந்து பேஜர்கள், ஸ்மார்ட்போன்கள் வரை எல்லாவற்றையும் எங்கள் வாழ்வில் பார்த்திருக்கிறோம். இவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறையவே கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது" என்று மாதவன் கூறியுள்ளார்.
4 வருஷத்துக்கு பிறகு மறந்து போகிறார்கள்
இப்போதைய சராசரி மனிதன் அப்பாவி இல்லை என்றும், தனது கதாபாத்திரத்தை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும் என்றும் மாதவன் கூறியுள்ளார். நான்கு வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை என்றால் மக்கள் மறந்துவிடுவார்கள். சினிமாவில் அந்த அளவுக்குப் போட்டி நிலவுகிறது. ஆனால் நமக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்றும் மாதவன் கூறியுள்ளார்.
மாதவனின் புதிய பங்களா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் மாதவன், பாலிவுட்டிலும் புகழ்பெற்றவாக உள்ளார். மும்பையில் வசித்து வரும் மாதவன் அங்குள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஒரு புதிய சொகுசு அப்பார்மெண்ட் வாங்கியுள்ளார். மாதவன் வாங்கியிருக்கும் சொத்தின் மதிப்பு ரூ. 17.5 கோடிக்கு என கூறப்படுகிறது.
மாதவன் படம்
மாதவன் நடிப்பில் கடந்த ஆண்டு சைத்தான் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ஜோதிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரபல தயாரிப்பாளரான எஸ். சஷிகாந்த், டெஸ்ட் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். சித்தார்த், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஸ்போர்ஸ்ட் டிராமா பாணியில் உருவாகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்