தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Madhavan: சாக்லேட் பாய் பிறந்தநாள் ஸ்பெஷல்... என்னென்றும் இளம் ரசிகைகள் மனதில் நிற்கும் மாதவன்

HBD Madhavan: சாக்லேட் பாய் பிறந்தநாள் ஸ்பெஷல்... என்னென்றும் இளம் ரசிகைகள் மனதில் நிற்கும் மாதவன்

Aarthi Balaji HT Tamil
Jun 01, 2024 06:12 AM IST

HBD Madhavan: நடிகர் மாதவன் ஜூன் 1 ஆம் தேதி, 1970 ஆண்டு பிறந்தார். ரங்கநாதன் மற்றும் சரோஜா தம்பதிக்கு மகனாக ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்தார்.

சாக்லேட் பாய் பிறந்தநாள் ஸ்பெஷல்... என்னென்றும் இளம் ரசிகைகள் மனதில் நிற்கும் மாதவன்
சாக்லேட் பாய் பிறந்தநாள் ஸ்பெஷல்... என்னென்றும் இளம் ரசிகைகள் மனதில் நிற்கும் மாதவன்

ட்ரெண்டிங் செய்திகள்

இளைமை காலம்

நடிகர் மாதவன் ஜூன் 1 ஆம் தேதி, 1970 ஆண்டு பிறந்தார். ரங்கநாதன் மற்றும் சரோஜா தம்பதிக்கு மகனாக ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் பிறந்தார். ஒரு தமிழ் - பிராஹிம் குடும்பத்தில் வளர்ந்த இவர் தனது சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தார். மேலும் ரோட்டரி இன்டர்நேஷனலுடன் கனடாவில் பரிமாற்ற மாணவராக ஒரு வருடம் கழித்தார். அவர் கூடுதல் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார்.

முன்னணி என்.சி.சி கேடட்களில் அவர் அங்கீகரிக்கப்பட்டார். இது இங்கிலாந்திற்குச் செல்லவும் பிரிட்டிஷ் இராணுவம், ராயல் நேவி மற்றும் ராயல் ஏர்ஃபோர்ஸில் பயிற்சி பெறவும் அனுமதித்தது, ஒரு கட்டத்தில் அவர் சேர நினைத்தார், ஆனால் வயது பிரச்சினைகளால் அவரால் முடியவில்லை. . இதற்குப் பிறகு அவர் தனது சொந்த ஊருக்கு வந்து, பொதுப் பேச்சு மற்றும் ஆளுமை வளர்ச்சியைத் தொடங்கினார், மேலும் பம்பாயில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

தொலைக்காட்சி விளம்பரம்

முதலில், மாதவன் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் சிறிய தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றினார். 1996 ஆம் ஆண்டு "இஸ் ராத் கி சுபஹ் நஹி" திரைப்படத்தின் மூலம் ஒரு திரைப்படத்தில் அவரது முதல் தோற்றம் வந்தது.

அவர் தொலைக்காட்சி தொடர் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த காலத்தில் செல்போன் கூட இல்லை என ஒரு முறை பேட்டியில் கூறினார்.

அவர் கூறுகையில், ”என்னிடம் போன் இல்லாததால் பக்கத்து வீட்டுகாரவங்களுக்கு தான் போன் வரும். அவர்கள் இரவு கூட என்னிடம் வந்து உனக்கு நாளைக்கு ஷூட் இல்ல. நல்ல உறங்கு என சொல்வார்கள். அப்போ எனக்கு ஒரு மாதிரி சங்கடமாக போய்விட்டது.

இதனால் நான் எனக்காக ஒரு போன் வாங்கினேன். அந்த போன் வாங்கியதால் தான் எனக்கு சந்தோஷ் சிவனின் விளம்பரம் கிடைத்தது. நான் முதன் முதலில் நடித்த கிடைத்தது. வுட் டால்க் ad-ல் நடிக்கவிருந்த நபரால் ஷூட்டிங் வரமுடியவில்லை. அதனால் அதில் நடிக்க அவருக்கு குடுக்கற 60 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு தரனே சொன்னாங்க. எனக்கு உடனே அடப்பாவி 30 ஆயிரம் ரூபாய்க்கு போன் வாங்கினோம் 60 ஆயிரம் டீலா என்று தோன்றியது” என பேசி இருந்தார்.

இளைஞர்களின் மனதை திருடிய கள்ளன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் ஆம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

படத்தில் வரும் ரயில் நிலைய காதல் ப்ரோபோசல் சீன் தற்போதும் வரை ரசிகர்களின் விருப்பமான ஒன்று. அதில் ஷாலினி அஜித்தை நினைத்தும், மாதவன் அவரது மனைவி சரிதாவை நினைத்தும் நடித்தார்களாம் . அதனால் தான் அந்த காட்சி உண்மையாக இருந்ததற்கு காரணம் என ஒரு முறை பேட்டியில் மாதவன் தெரிவித்து இருந்தார்.

அதன் பின் அவரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இயக்குநர் கவுதம் மேனன் இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தின் கதையை கெளதம் மேனன், மாதவனிடம் சொல்லிய போது அவருக்கு அது அதிகம் பிடித்துவிட்டது. அந்த கதையை பல தயாரிப்பாளர்கள் கேட்டுவிட்டு தயாரிக்க தயங்கினார்கள். அதில் நடித்தே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தார் மாதவன். அதன் பிறகு ஒரு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார். ஹரிஷ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்தார். பாடல்கள் மற்றும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பின் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் படம் மூலம் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார். சாக்லெட் பாய் என பெயர் வைத்திருந்த மாதவன் தன் இமெஜை மாற்ற விரும்பினார். படத்தில் வரும் ஷட்டர் காட்சியை பற்றி லிங்குசாமி சொன்ன பிறகு அதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் மாதவன். அதன் பின் பிரியமான தோழி, ஜேஜே, ஆயுத எழுத்து, இறுதிச்சுற்று போன்ற படங்களில் நடித்த பிறகு படிப்படியாக இந்தி சினிமாவில் கால் பதிக்க தொடங்கினார் மாதவன். இவர் கடைசியாக ராக்கெட்ரி: நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி, நடித்து வெற்றி பெற்றார்.

விருதுகள்

சிறந்த அறிமுக நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான சிறந்த நடிகருக்கான நான்கு பிலிம்பேர் சவுத் விருதுகளை இரண்டு முறை வென்றுள்ளார் மாதவன் . அவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், IIFA சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.

PETA சங்கம் மற்றும் மனிதாபிமான காரணங்கள்

மாதவன் ஒரு சைவ உணவு உண்பவர். 2006 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் PETA ஆல் 'அழகான ஆண் சைவ உணவு உண்பவராக' தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் எப்போதும் விலங்கு உரிமைகளுக்கான சாம்பியனாக இருந்து வருகிறார். உண்மையில், மேடி தனது திரைப்பட அறிமுகத்திற்குப் பிறகு PETA இல் சேர்ந்தார். மாதவனும் அவரது குடும்பத்தினரும் பெரும்பாலான PETA காரணங்களில் தீவிரமாக பங்கேற்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்