ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..

ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..

Malavica Natarajan HT Tamil
Published May 13, 2025 03:05 PM IST

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு இடையிலான பிரச்சனையில், நடிகர் கூல் சுரேஷை இழுத்து பலரும் திட்டி வருவதாகவும், பிறர் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம் எனவும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..
ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..

இந்த நிலையில், ரவி மோகன் குடும்ப பஞ்சாயத்தில் தன் தலை உருட்டப்படுவதாக நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார். இவர்களது பிரச்சனையில் தேவையில்லாமல் தன்னை இழுத்து அசிங்கமாக திட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்யாணத்துக்கு ஜோடியாக வந்த ரவி மோகன்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், " 2 நாளுக்கு முன்னாடி ஐசிரி கணேஷ் சாரோட மகள் கல்யாண்ததுக்கு போயிருந்தேன். அங்க நிறைய சினிமா பிரபலங்கள், அரசிய் தலைவர்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அப்போ ஜெயம் ரவி அவர்களும் கெனிஷாவோட வந்திருந்தாங்க. அங்க ஜெயம் ரவி வந்து என்கிட்ட கேட்டாரு என்ன கூல் எப்படி இருக்க, ஆள் ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்ட, உடம்ப எல்லாம் குறைச்சு ஃபிட் ஆகிட்ட. காஸ்ட்டியூம் எல்லாம் சூப்பரா இருக்கு. ஹீரோவா நடிக்குற போல. வாழ்த்துகள். சாப்டாச்சான்னு கேட்டாரு. இது சோசியல் மீடியாவுல வீடியாவாகவும் வந்தது.

நைட் 11 மணிக்கு போன்

என் தாய் மீது ஆணையா சொல்றேன். நேற்று இரவு 11 மணிக்கு மேல எனக்கு பெங்களூர்ல இருந்து போன் வருது. ஒரு பொன்னு தான் பேசுறாங்க. அவங்க என்கிட்ட என்னங்க நீங்க ஜெயம் ரவிக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க. அவர் எப்படி தெரியுமா அப்படி தெரியுமான்னு கேள்வி கேட்டுட்டு இருக்காங்க. நான் அவங்ககிட்ட நான் கல்யாணத்துக்கு போனேன். அவர எனக்கு தெரியுங்குறதுனால பேசுனேன் அவ்ளோதான்னு சொல்றேன்.

பிளாக் பண்ணிட்டேன்

ஆனா அவங்க கேக்கல. அவங்க எனக்கு ஜெயம் ரவி போன் நம்பர் குடுங்க. இல்ல அவங்க மனைவி ஆர்த்தி நம்பர் கொடுங்கன்னு கண்ணா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. என்ன நடந்ததுன்னு உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இது புருஷன் பொண்டாட்டி விஷயம். அதுல அவங்க அப்பா அம்மா கூட தலையிட முடியாது. அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதெல்லாம் நாம வெளிப்படையா பேச முடியாது. அதுனால என்கிட்ட இதபத்தி பேசாதீங்கன்னு சொல்லி, அவங்கள பிளாக் பண்ணிட்டேன்.

பளிச்சுன்னு தெரியுது

ஆனா அவங்க விடல. எனக்கு வாட்ஸ்அப்ல வாய்ஸ் மெசேஜ் அனுப்பிகிட்டே இருக்காங்க. ஒரு குடும்பத்துக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். நாங்க சினிமாக்காரங்கங்குறதால வெளியில பளிச்சுன்னு தெரியுது. அதவச்சு நாமளே முடிவுக்கு வர முடியாது.

எந்த ரவியா இருந்தாலும் பிரச்சனை தான்

ஜெயம் ரவி கூட வந்த கெனிஷா அவரோட பிரண்டான்னு கூட தெரியாது. என கூட 4 தம்பிங்க வந்திருக்காங்கன்னா எனக்கும் அவனுக்கும் வேற எதாவது உறவு இருக்குமன்னு ஆகிடுமா? நான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி எல்லாம் பேசல. என்ன நடந்ததுன்னு யாருக்குமே தெரியாது. குடம்பத்துல பிரச்சனை இருக்கத்தான் செய்யும். அது ஜெயம் ரவியா இருந்தாலும் சரி, ராதா ரவியாக இருந்தாலும் சரி, நிழல்கள் ரவியாக இருந்தாலும் சரி ஏன் நம்ம கவர்னர் ஆர். எந். ரவியாக இருந்தாலும் சரி எல்லா குடும்பத்துலயும் எல்லா பிரச்சனையும் இருக்க தான் செய்யும்.

கல்யாணத்துக்கு போனது குத்தமா?

நான் பிரச்சனைகள பாத்துட்டேன். ஜெயிலுக்கு மட்டும் தான் போகல. அதையும் நீங்க போக வச்சிடுவீங்க போலயே. இது அவங்க குடும்ப பிரச்சனை. இந்த விஷயம் கோர்ட்ல இருக்கு. இதைஎல்லாம் அவங்களே பாத்துபாங்க. தயவுசெஞ்சு எனக்கு போன் பண்ண தாய்குலத்துக்கிட்ட மண்டியிட்டு கேட்டுகுறேன். உங்களுக்கு என்ன பிரச்சனையோ தெரியல. அந்த பிரச்சனையில என்னைய கோத்துவிட்டுட்டு போயிடாதீங்க. கல்யாணத்துக்கு போனது ஒரு குத்தம்ன்னு கமெண்ட்ல என்ன போட்டு திட்டுறீங்க. எல்லா குடும்பத்துலயும் பிரச்சனை இருக்கு. அத வெளியில இழுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திட்டு, எனக்கு அந்த மாதிரி போன் பண்ணாதீங்க என கோரிக்கை விடுத்தார்.