“ப்ளடி பெக்கர்” புது அப்டேட் கொடுத்த படக்குழு! டிரைலர் விரைவில்!பிச்சைக்காரனாகாவே மாறிய கவின்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “ப்ளடி பெக்கர்” புது அப்டேட் கொடுத்த படக்குழு! டிரைலர் விரைவில்!பிச்சைக்காரனாகாவே மாறிய கவின்!

“ப்ளடி பெக்கர்” புது அப்டேட் கொடுத்த படக்குழு! டிரைலர் விரைவில்!பிச்சைக்காரனாகாவே மாறிய கவின்!

Suguna Devi P HT Tamil
Oct 07, 2024 09:33 PM IST

நடிகர் கவின் தற்போது அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளடி பெக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி அன்று அக்டோபர் 31 அன்று இந்த படம் வெளியாக உள்ளது.

“ப்ளடி பெக்கர்” புது அப்டேட் குடுத்த படக்குழு! டிரைலர் விரைவில்!பிச்சைக்காரனாகாவே மாறிய கவின்!
“ப்ளடி பெக்கர்” புது அப்டேட் குடுத்த படக்குழு! டிரைலர் விரைவில்!பிச்சைக்காரனாகாவே மாறிய கவின்!

நடிகர் கவின் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் மக்களின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 3 ஆவது சீசனில் கலந்து கொண்டார். அதில் அவரது செயல்களுக்காக மக்களால் அதிகமாக விமரசனத்திற்கு உள்ளானர். இருப்பினும் 5 லட்சம் பணத்துடன் வெளியேறினார். அதன் பின்னர் லிப்ட் படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து இருந்தார். கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. மேலும் இந்த ஆண்டு வெளி வந்த ஸ்டார் திரைப்படம் கவினின் நடிப்பிற்கு பெயர் வாங்கி தந்துள்ளது. இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மோனிகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

ப்ளடி பெக்கர்

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும்இப்படத்தினை  இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தாயரித்துள்ளார். அவரது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

வரும் தீபாவளிக்கு பந்தயத்தில் உள்ள படங்களில் பிளடி பெக்கர் படமும் ஒன்றாகும். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் குறித்தான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வெளியாகிய சில மணி நேரத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.யாசகராக நடித்துள்ள கவினின் தோற்றம் அசந்து போகும் வண்ணம் உள்ளது. இந்த வீடியோவில்  சிக்னலில் யாசகம் கேட்பவராக தரையில் அமர்ந்து ஆட்டோகாரரிடம் பிச்சை கேட்கிறார் கவின். அந்த ஆட்டோகாரர் சவாரி இல்லை என்று சொல்கிறார். அப்போது அந்த ஆட்டோகாரருக்கு பதில் அளித்த கவின் பரிதாபமாக அந்த ஆட்டோகாரரின் காலை பார்த்து “எனக்கு மட்டும் கால் இருந்திருந்தா உன்ன மாதிரி நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்” என அப்பாவி முகத்துடன் கூறி நகர்கிறார்.

அப்போது, சாவு ஊர்வலம் ஒன்று அந்த சாலை வழியே சென்று கொண்டிருக்கிறது. உடனே அந்த குத்துப்பாட்டு கேட்டதும் கவின் எழுந்து நின்று குத்தாட்டம் போட்டுவிட்டு நடந்து செல்கிறார். இதை பார்க்கும் ஆட்டோ ட்ரைவர் கோபமடைகிறார். இந்தப் படத்துக்கு மிகப் பெரிய அடையாளம் கவினின் கெட்டப். அதைத் தாண்டி படம் என்ன பேசுகிறது என்பதை ட்ரெய்லர் மூலம் தான் கணிக்க முடியும். வெறும் ஓர் அறிவிப்பாக இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர்க்காக கவினின் ரசிகர்கள் காத்து கொண்டு உள்ளனர். மேலும் இந்தபடத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளது கூடுதல் ட்ரீட் ஆக இருக்கப்போகிறது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.