Actor Kavin: விஜய் மகன் படத்தில் நானா ?.. ‘ஆமா மீட்டிங் நடந்தது உண்மைதான் ஆனா’ - கவின் ஓப்பன் டாக்!
விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகமாக செய்ய இருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவே இருந்தது.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.
இது குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கவின் அளித்த பேட்டியில், “ அந்தப்படம் தொடர்பான சந்திப்பு நடந்தது உண்மைதான். அந்த சந்திப்பு நட்பு ரீதியாக, மிகவும் சாதரணமாக நடந்தது. அவர்களிடம் நான் எனக்கு இருக்கும் அடுத்தடுத்த வேலைகள் குறித்து சொன்னேன். அவர்கள் கலந்து யோசித்து விட்டு சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னர் எந்த தகவலும் வரவில்லை.
அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே..
எனக்கு என்னுடைய வேலைகள் சரியாக இருப்பதால், நான் அதில் கவனம் செலுத்தி சென்று கொண்டிருக்கிறேன். விஜய் சாரை பற்றி வெளியே அவர் அப்படி, இப்படியெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அவரை நேரில் சந்திக்கும் போது, இவரையா அப்படிச் சொன்னார்கள் என்ற ரீதியில் மிக மிக சாதரணமாக இருப்பார்.
சஞ்சயை பொருத்தவரை, அவர் அவரை விட சாதரணமாக இருப்பவர். எனக்கு அவரை பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது. அவர்களை பார்க்கும் போது, அவர்களே அப்படி இருக்கும் போது நாமெல்லாம் எங்கே.. என்று தோன்றும். நாம், இன்னும் இன்னும் பணிவாக வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.” என்று பேசினார்
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவே இருந்தது.
முன்னதாக, விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகமாக செய்ய இருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவே இருந்தது.
லண்டனில் ஸ்கீரின் ரைட்டிங்கில் BA (Hons) படிப்பும், டொராண்டோ திரைப்பட பள்ளியில் திரைப்பட தயாரிப்பு பிரிவில் டிப்ளமோவும் முடித்திருக்கிறார்
வேட்டைக்காரன் படத்தின் ஓபனிங் பாடலான நான் அடிச்ச தாங்க மாட்ட பாடலில், விஜயுடன் இணைந்து சில விநாடிகள் தோன்றி டான்ஸ் ஆடி, நன்கு பரிச்சயமானார் அவரது மகன் சஞ்சய். அப்போது சிறுவனாக இருந்த சஞ்சய், இப்போது லண்டனில் ஸ்கீரின் ரைட்டிங்கில் BA (Hons) படிப்பும், டொராண்டோ திரைப்பட பள்ளியில் திரைப்பட தயாரிப்பு பிரிவில் டிப்ளமோவும் முடித்திருக்கிறார். அத்துடன் சத்தமில்லாமல் “Pull The Trigger” என்ற குறும்படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார்.
அஜித், விஜய் சேதுபதி
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அவரது படத்தில் நடிக்கப்போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. வழக்கம்போல் இந்த படத்தில் அஜித், விஜய் சேதுபதி என டாப் நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் நடிக்கப்போவதாக வதந்திகளை கிளப்பினர்.
அந்தப்படத்தில் நடிகர் கவின் கமிட் ஆகவில்லை என்பது தெரிந்து விட்டது.
இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா முரளி ஆகியோரின் பெயர் அடிபட்டது. சிறிது காலம் கழித்து இவர்கள் மூவரும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இப்போது அந்தப்படத்தில் நடிகர் கவின் கமிட் ஆகவில்லை என்பது தெரிந்து விட்டது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் படத்துக்கு இசையமைக்கலாம் என்று பேச்சும் அடிபடுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்