Actor Karunas: கூவத்தூர் குழப்பம்..கொதித்த திரிஷா.. மீண்டும் சென்னை கமிஷனரிடம் சென்ற கருணாஸ்! - காரணம் என்ன?
நடிகை கருணாஸூம் என் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அறுவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த A.Vராஜீவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

அதிமுக முன்னாள் பிரமுகரான ஏ.வி.ராஜூ அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கூவத்தூர் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.
அதைப்பற்றி பேசும் போது, அதில் நடிகை த்ரிஷாவை தொடர்பு படுத்தியும், எம்.எல்.ஏக்களுக்கு தேவையான பெண்களை கருணாஸ்தான் ஏற்பாடு செய்ததாகவும் பேசினார்.
அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் எழுந்தன. அதனைத்தொடர்ந்து அவர் வீடியோ வெளியிட்டு மன்னிப்புக்கோரினார்.
ஆனால் அதற்கு இசையாத நடிகை த்ரிஷா, அவர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது தொடர்பான வக்கீல் நோட்டீசையும் அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.
நடிகை கருணாஸூம் என் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அறுவருக்கத் தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த A.Vராஜீவ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர்களான பயில்வான் ரங்கநாதன், தமிழா பாண்டியன், செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் பல்வேறு யூடியூப் சேனல்களில் பேசினர்.
அதில் கருணாஸையும் இழுத்து பேசினர். இந்த நிலையில் நேற்றைய தினம் கருணாஸ் மீண்டும் சென்னை கமிஷனரிடம் மீண்டும் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அந்த புகாரில் நேற்று மீண்டும், யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்

டாபிக்ஸ்