Paandi Nattu Thangam: வனத்தை காக்கும் கார்த்திக்..நாட்டை காக்கும் நம்பியார்..பட்டையை கிளப்பிய 'பாண்டி நாட்டு தங்கம்'
35 Years of Paandi Nattu Thangam: தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான விருந்தை அளித்த நடிகர் கார்த்திக்கின் 'பாண்டி நாட்டு தங்கம்' 1989 ஆம் ஆண்டு இதே மே 19-ல் திரையரங்குகளில் ரிலீஸானது.

கோலிவுட் திரையுலகில் 1985, 1989ஆம் ஆண்டுகள் மிக மிக அற்புதமான ஆண்டுகளாகும். பெரும்பாலான 80ஸ் படங்கள் எல்லாம் இந்த இரண்டு ஆண்டுகளிலும் சக்கை போடு போட்டது என்று சொல்லலாம்.
அந்த வகையில் மிக அற்புதமாக கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தார் நடிகர் கார்த்திக்கின் திரைப்பயணத்தில் ஏகப்பட்ட வெற்றிப் படங்கள் அமைந்தன. அப்படியாக 1989ம் ஆண்டு மே 19ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பாண்டி நாட்டு தங்கம்'.
கார்த்திக், நிரோஷா, எம்.என்.நம்பியார், எஸ்.எஸ் சந்திரன், செந்தில், செந்தாமரை உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இளையராஜா இசை
டி.பி கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 80ஸ் கிட்ஸ் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடத்தை பிடித்திருந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார். அனைத்து பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 'உன் மனசுல பாட்டுத்தான்' , 'மயிலாடும் பாறையில', 'ஏலேலங்குயிலே', 'இளம் வயசுப்பொண்ண வசியம் பண்ணும் , 'சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு' என்று அனைத்து பாடல்களும் இன்றைக்கும் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க வைக்கும்.
கதை சுருக்கம்
ராணுவ அதிகாரியாக நம்பியாரும் ஒரு நேர்மையான வன அதிகாரியாக கார்த்திக்கும் நடித்திருப்பார்கள். கதைப்படி கார்த்திக் ஒரு கிராமத்திற்கு பணி மாற்றம் செய்யப்படுகிறார். அங்கு உயர்ந்த பதவியில் இருக்கும் செந்தாமரை சந்தன மரங்களை கடத்துகிறார். மறுபுறம் கார்த்திக் நிரோஷாவை காதலிக்கிறார். இப்படித்தான் கதை அமைக்கப் பட்டிருக்கும்.
பொதுவாக 80களில் வெளிவரும் திரைப்படம் எல்லாம் வித்தியாசமான கதைக்களம் எல்லாம் அதிகம் இருக்காது. 4 பாட்டு 4 சண்டை நல்லா இருக்கணும் என நினைப்பார்கள் அப்படி வெளிவந்த படங்கள்தான் 80ஸில் பெரும்பாலும் ஹிட் ஆன படங்களாகும். அது போலத்தான் 'பாண்டி நாட்டு தங்கம்' திரைப்படமும் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அரதப்பழசான கதை என்றாலும் இப்படம் 80ஸ், 90ஸ் கிட்ஸுக்கு இன்றும் ஞாபகம் வரும் வரையில் இப்படம் வந்த காலங்கள் மனதில் நிழலாடும்.
சக்கைபோடு போட்ட படம்
நகரத்து தியேட்டர்களில் ஓடிய படங்கள் சில காலத்துக்கு பிறகு கிராமத்து டெண்ட் கொட்டாய் ரக தியேட்டர்களுக்கு வரும் அப்படி வரும் படங்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்தான் ஓடும். ஆனால் பாண்டி நாட்டு தங்கம் திரைப்படம் பல கிராமத்து டெண்ட் கொட்டாய்களில் திரையிடப்பட்டாலும் அங்கும் நீண்ட நாட்கள் ஓடியது. அந்த அளவிற்கு இந்த படம் சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.
35 ஆண்டுகள் நிறைவு
ரசிகர்களுக்கு புதுமையான விருந்தை அளித்த 'பாண்டி நாட்டு தங்கம்' 1989 ஆம் ஆண்டு இதே மே 19-ல் திரையரங்குகளில் ரிலீஸானது. தமிழகம் முழுவதும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளி வந்து இன்றோடு 35 ஆண்டுகளை கடந்திருக்கிறது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 35 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கார்த்திக்கின் நடிப்பில் இந்தப்படமும் ஒரு மிகப்பெரிய மைல்கல்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

டாபிக்ஸ்