Karthik Kumar: “நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் வெட்கப்பட போவதில்லை” - சுசித்ரா கருத்துக்கு கார்த்திக் குமார் பதிலடி
நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் வெட்கப்பட போவதில்லை. அதை பெருமையாகவே கருதுகிறேன் என்ற கார்த்திக் குமார், முன்னாள் மனைவி சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக விடியோவை பகிர்ந்துள்ளார்.
ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகராக இருந்து வருபவர் கார்த்திக் குமார். இவரது முன்னாள் மனைவியும், ஆர்ஜே, நடிகையுமான சுசித்ரா கார்த்திக் குமார் மீது பல்வேறு குற்றாச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், "ஓரினச்சேர்க்கையாளராக வெளிவர அவருக்கு தைரியம் இல்லை. திருமணமான இரண்டு வருடங்களில் நான் அதை கண்டு பிடித்தேன்.
திருமணமான முதல் ஆண்டு எனக்கும், கார்த்திக் குமாருக்கும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரிடம் சென்றோம். அப்போது மருத்துவர் என் கணவர் ஓரினச்சேர்க்கையாளரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்.
இதன் பிறகு அவர் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பழகுவதை நான் கவனித்தேன். அடிக்கடி மும்பை சென்றுவிடுவார்" என்றார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
அத்துடன் தனது பேட்டியில் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில் கார்த்திக் குமார் பேசிய விடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் வெட்கப்பட போவதில்லை
நடிகர் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த விடியோவில், "நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாகவே கருதுகிறேன்.
நான் செய்ய உத்தேசித்திருக்கும் விஷயத்தில், எந்த நகரத்திலு் எங்கு வேண்டுமானாலும் அதற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொள்வேன். அனைத்து பாலினங்களுக்கும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே.
இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் குமாரின் இந்த திடீர் விடியோ ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சுசித்ராவின் கருத்துக்கு பதிலாகவே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் கருத்துகள் பகிரப்பட்டது.
இதைத்தொடர்ந்து மற்றொரு விடியோவை பகிர்ந்த கார்த்திக் குமார், "எதிர் பாலின ஈரப்பை கொண்டாடுவது அனைத்து பாலின அடையாளங்களையும் தழுவியது.
தன்னைப் போன்ற எதிர் பாலின நபர்களின் சலுகைகளை ஒப்புக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திக் இரண்டாவது மனைவி பகிர்வு
கார்த்திக் குமார் இரண்டாவது மனைவியான அம்ருதா சீனிவாசன் இந்த விடியோவை மறு பகிர்வு செய்துள்ளார். சுசித்ரா தனது பேட்டியில் அம்ருதா பெயரை குறிப்பிட்டு இருந்ததால் அவர் இந்த விடியோவை பகிர்ந்திருக்கலாம் என தெரிகிறது.
சுசி லீக்ஸால் மனஉளைச்சல்
சுசி லீக்ஸை பொருத்தவரை அது தனுஷ், கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அடங்கிய கேங் செய்த ப்ராங். ஆனால் அது என்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியான காரணத்தால், நான் பலியாடாகி விட்டேன்.
இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சுசித்ரா பின்னர் அதிலிருந்து மெல்ல மீண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி திரையுலகில் பூதாகரத்தை கிளப்பியுள்ளது.
கடைசியாக சுசித்ரா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் தற்போது பேட்டி ஒன்றின் மூலம் வைரல் ஆகியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்