Actress Sreeleela: ஸ்ரீலீலாவின் காதலுக்கு பச்சை கொடியா? பூசி முழுகி பதில் தந்த ஹீரோவின் தாய்..
Actress Sreeleela: நடிகை ஸ்ரீலீலா பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்திக்கு ஹீரோவின் அம்மா பூசி முழுகி பதில் தந்துள்ளார்.

Actress Sreeleela: டோலிவுட்டில் தன் நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை ஸ்ரீலீலா தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்து வருகிறார். இவர், பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகருடன் காதலில் விழுந்துவிட்டார் என செய்திகள் பரவத் தொடங்கின.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சம்பந்தப்பட்ட நடிகரின் தாயாரே அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவது போல பேசியுள்ளார். இந்த செய்திகள் தான் இப்போது இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங்
டோலிவுட் அழகியான ஸ்ரீலீலா பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்து வருகிறார் என்ற செய்திகள் சில காலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இருவரும் ஆஷிக் 3 படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்தே டேட்டிங் வதந்திகள் தொடங்கின. ஆனால், இதை கார்த்திக் ஆர்யனின் அம்மா மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார் போல.
