Karthi: 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்.. நேரில் சென்று கார்த்தி அஞ்சலி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthi: 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்.. நேரில் சென்று கார்த்தி அஞ்சலி

Karthi: 20 அடி உயரத்தில் இருந்து விழுந்த உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்.. நேரில் சென்று கார்த்தி அஞ்சலி

Aarthi Balaji HT Tamil
Jul 18, 2024 09:20 AM IST

Karthi: சர்தார் 2 படப்பிடிப்பின்போது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நேரில் நடிகர் கார்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார்.

20 அடி உயரத்தில் இருந்து விழுந்த உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்.. நேரில் சென்று கார்த்தி அஞ்சலி
20 அடி உயரத்தில் இருந்து விழுந்த உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்.. நேரில் சென்று கார்த்தி அஞ்சலி

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சர்தார் 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

கடந்த வாரம் படம் பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஜூலை 15 முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பூஜையில் நடிகர் கார்த்தியின் தந்தையும், நடிகருமான சிவக்குமார் பங்கேற்றார். சர்தார் 2 படத்தில் முதலில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஸ்டண்ட் நடிகர் மரணம்

சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதையடுத்து படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் ஸ்டண்ட் நடிகரான ஏழுமலை என்பவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உள்புறத்தில் ஏற்பட்ட ரத்து உறைவு காரணமாக ஏழுமலை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக சர்தார் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கார்த்தி நேரில் அஞ்சலி

இந்நிலையில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறினார்.

படக்குழு விளக்கம்

முன்னதாக சர்தார் 2 படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம், "எங்களின் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் ரிக் மேனாக பணியாற்றிய ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர் ஏழுமலையின் மரணம் குறித்து வருந்தத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஜூலை 16 செவ்வாய்க்கிழமை மாலை, ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, நாங்கள் பணிகளை முடிக்கும் வேலையில் இருந்தோம் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் ஏழுமலை எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது.

ஆழ்ந்த இரங்கல்

இருப்பினும், 2024 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில், தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் ஏழுமலை துரதிர்ஷ்டவசமாக காலமானார்.

ஏழுமலையின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், இந்த துயரமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் நிற்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.