தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Karthi: ‘அரசு மருத்துவமனைக்கு யாருமே.. லோகேஷ் உடன் ‘கைதி 2’ எப்போது? - நடிகர் கார்த்தி பேச்சு!

Actor Karthi: ‘அரசு மருத்துவமனைக்கு யாருமே.. லோகேஷ் உடன் ‘கைதி 2’ எப்போது? - நடிகர் கார்த்தி பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 09, 2024 03:46 PM IST

Actor Karthi: லோகேஷ் கனகராஜ் உடன் ‘கைதி 2’ படத்தில் இணைவது எப்போது என்பது குறித்து நடிகர் கார்த்தி பேசி இருக்கிறார்.

Actor Karthi: ‘அரசு மருத்துவமனைக்கு யாருமே.. லோகேஷ் உடன்  ‘கைதி 2’ எப்போது? - நடிகர் கார்த்தி பேச்சு!
Actor Karthi: ‘அரசு மருத்துவமனைக்கு யாருமே.. லோகேஷ் உடன் ‘கைதி 2’ எப்போது? - நடிகர் கார்த்தி பேச்சு!

தன்னுடைய பிறந்தநாளுக்கு இரத்த தானம் செய்த தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டி, விருந்தளித்து மகிழ்ந்து இருக்கிறார் நடிகர் கார்த்தி!

இரத்ததானம் செய்த ரசிகர்கள் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ரசிகர்களை வைத்திருக்கும் இவர், தன்னுடைய அண்ணன் சூர்யாவுடன் இணைந்து அகரம் அறக்கட்டளை சார்பில், மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்து வருகிறார். கூடவே, உழவன் என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன் மூலம் விவசாயத்தையும் ஊக்குவித்து வருகிறார். இவருடைய ரசிகர்களும் மாவட்டம் தோறும் மக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி, நடிகர் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுக்க, அவரது ரசிகர்கள் சார்பில் இரத்த தான முகாம்கள் நடைபெற்றது. இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் முதற்கட்டமாக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 ரசிகர்களை, நடிகர் கார்த்தி இன்று நேரில் சந்தித்தார்.

சென்னையில் விருந்து 

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற இந்த விழாவில், இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மேலும், இரத்த தானம் செய்ததற்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்பின் நடிகர் கார்த்தி பேசும் போது, “அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பிறந்தநாளில், இரத்த தானம் செய்த போதே, உங்களுடன் கலந்து கொள்ள நினைத்தேன். எனினும், உடல்நிலை சரியில்லாததால், கலந்து கொள்ள முடியாமல் போனது. அடுத்த முறை நிச்சயம் உங்களுடன் இணைந்து கொள்வேன். நீங்கள் அனைவரும் இரத்தம் கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி.நான் மருத்துவர்களுடன் குழுவில் இருக்கிறேன். 

இரத்தம் இல்லை

அவர்கள் இரத்தம் இல்லை என்று கூறுவதை கேட்டிருக்கிறேன். முக்கியமாக அரசு மருத்துவமனைக்கு, பெரிய அளவில் யாரும் இரத்தம் கொடுப்பதில்லை. அவரவர் தங்களின் உறவினர்களுக்கு கொடுத்துக் கொள்வார்கள்.ஆனால், நீங்கள் யாரென்றே தெரியாதவர்களுக்கு இரத்தம் கொடுத்துள்ளீர்கள். இது சாதாரண விஷயமே கிடையாது. அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. அதுவும் அரசு மருத்துவமனையில் செய்ததற்கு நன்றி. அடுத்த வருடம் உங்களுடன் இணைந்து முதலில் நான் துவங்கி வைக்கிறேன்.

அனைவரும் உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள். நாம் செய்த நல்ல விஷயங்கள், அவர்களுக்கு சென்று சேர வேண்டும். அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இரண்டு படங்கள் முடிந்துவிட்டன, விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும். அடுத்து சர்தார் 2 துவங்க இருக்கிறது. அடுத்த வருடம் லோகேஷூடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.