Actor Karthi: சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து.. காயத்துடன் சென்னை திரும்பிய கார்த்தி..
Actor Karthi: சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் கார்த்தியின் காலில் அடிபட்டுள்ளது. இதனால், அவர் ஓய்வெடுப்பதற்காக சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Karthi: மைசூரில் நடைபெற்று வந்த சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக்கு விபத்து
வெளியான தகவலின் படி, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் கார்த்தியின் காலில் பயங்கர அடிபட்டுள்ளதாம். இதனால், படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு படக்குழுவினர் அனைவரும் உடனடியாக வீடு திரும்பியதாகத் தெரிகிறது.
விபத்தால் நடிகர் கார்த்தியின் காலில் வீக்கம் ஏற்பட்டதால் அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அனைவரும் சென்னை திரும்பினராம்.
சர்தார் 2
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். கார்த்தி, ராஷி கண்ணா, லைலா என பலர் நடித்திருந்த இந்தப் படம் ரா ஏஜெண்ட் பற்றியும், அவர்கள் வாழ்க்கை முறை பற்றியும் கூறியதுடன், குடிநீரின் அத்தியாவசியம் குறித்தும் பேசியிருப்பார் இயக்குநர்.
இந்தப் படம், மக்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
மைசூர் படப்பிடிப்பு
சமீபத்தில், சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சில நாட்களாக கர்நாடக மாநிலம் மைசூருவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
மேலும் படிக்க: சாய் பல்லவி ரொம்ப ஸ்பெஷல்.. கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?
இந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில், விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கார்த்திக்கு காலில் அடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்தகவலின்படி, மைசூரில் சர்தார் படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாகவும், அப்போது, கார்த்தியின் காலில் அடிபட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் அவரை ஒருவராம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியதாகவும் கூறுகின்றனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில், சர்தார் படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கார்த்தியின் உடல்நிலை சீரான பின் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடரும் என படக்குழு அறிவித்துள்ளது.
சர்தார் முதல் பாகத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த நிலையில், 2ம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறரா். முதல் பாகத்தில் நடிகர் கார்த்தி அவரது சொந்த குரலில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கார்த்தியை கதறவிட்ட டைரக்டர்.. இப்படி ஓபனா சொல்லிட்டாரே..
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மெய்யழகன். தற்போது சர்தார் 2 படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கார்த்தி நடிப்பில், கைதி 2, வா வாத்தியார், கார்த்தி 29 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
