எல்லாம் நினைவில் நிற்கும்.. படங்கள் அல்ல.. பாடங்கள்.. ஆசானை நினைவு கூர்ந்து கமல் ஹாசன் உருக்கம்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  எல்லாம் நினைவில் நிற்கும்.. படங்கள் அல்ல.. பாடங்கள்.. ஆசானை நினைவு கூர்ந்து கமல் ஹாசன் உருக்கம்..

எல்லாம் நினைவில் நிற்கும்.. படங்கள் அல்ல.. பாடங்கள்.. ஆசானை நினைவு கூர்ந்து கமல் ஹாசன் உருக்கம்..

Malavica Natarajan HT Tamil
Dec 23, 2024 02:18 PM IST

தமிழ் சினிமாவின் இயக்குநர் சிகரமும் தனது ஆசானுமான கே. பாலச்சந்தரின் நினைவு நாளை ஒட்டி நடிகர் கமல் ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

எல்லாம் நினைவில் நிற்கும்.. படங்கள் அல்ல.. பாடங்கள்.. ஆசானை நினைவு கூர்ந்து கமல் ஹாசன் உருக்கம்..
எல்லாம் நினைவில் நிற்கும்.. படங்கள் அல்ல.. பாடங்கள்.. ஆசானை நினைவு கூர்ந்து கமல் ஹாசன் உருக்கம்..

தமிழ் சினிமாவின் சிற்பி

தமிழ் சினிமாவில், நாகேஷ், கமல் ஹாசன், ரஜினி காந்த், டெல்லி கணேஷ், சரிதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன் போன்ற எண்ணற்ற திரைக் கலைஞர்களை உருவாக்கி வளர்த்துவிட்ட மாபெரும் கலைஞர் என்றால் அவர் கே. பாலச்சந்தர் தான். அதுமட்டுமின்றி, பல வெற்றி இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கவும் காரணமாக அமைந்துள்ளார்.

இவர் சினிமாவின் இயக்குநராக மட்டும் இல்லாமல், நாடக ஆசிரியராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் நடிகராவும் தன் வாழ்நாளை சினிமா எனும் கலைக்காவே அற்பணித்துள்ளார்.

பெண்களை கொண்டாடிய மகான்

பெண்களை சிறந்த ஆளுமைகளாவும், அவர்களின் உளவியல் சிக்கல்களை பெரிதளவில் பேசிய நபர்களில் ஒருவராகவும் இருந்தவர் கே. பாலச்சந்தர். அதனால் தான் ஆண்களை சுற்றி ஓடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை, பெண்களை சுற்றியும் ஓட வைத்தார். அவை தான் தற்போது வளர்ந்து வந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களாக மாறியுள்ளது.

நாடகத் துறையில் இருந்து வந்த பாலச்சந்தர் அதன் வடிவங்களையும், பரிணாமத்தையும் மாற்றி சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் பல புரட்சிகளை செய்தவர்.

ரஜினி எனும் கலைஞன் அறிமுகம்

தான் அனுபவிக்கும் அத்தனை வசதிகளுக்கும் வித்திட்டவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் தான். தன்னை அபூர்வ ராகத்தில் இருந்து தில்லு முல்லு வரை என்னுள் ஒளிந்திருக்கும் வில்லனையும், கதாநாயகனையும், காமெடியனையும் அறிமுகம் செய்து வைத்து உச்சத்தில் தூக்கி நிறுத்தியவரும் அவர் தான் என நடிகர் ரஜினிகாந்த் பல இடங்களிலும் குறிப்பிட்டுள்ளார்.

கமலின் ஆசான்

கோலிவுட்டில் மட்டும் தன்னை நிரூபித்துக் கொண்டிருந்த கமல் ஹாசனை தன் படம் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் கே. பாலச்சந்தர் தான். கமலின் அத்தனை திறமைகளுக்கும் அடிபோட்ட ஆசானும் அவர் தான். அதனால் தான் கே. பாலச்சந்தரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து அவரது உத்தமவில்லன் படத்தில் நடிக்க வைத்தார். பாலச்சந்தரின் இறுதி காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும் விமர்சன ரீதியில் பெருமளவு பேசப்பட்டது.

விருதுக்கு சொந்தக்காரர்

சினிமாவில் சுமார் 50 வருடம் தன் உழைப்பை வழங்கிய கே. பாலச்சந்தர் 7 தேசிய விருது, 13 பிலிம்பேர் விருது, தாதாசாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ விருது என பல விருதுகளை வாழ்நாளில் பெற்று தமிழ் சினிமாவில் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.

இவர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அவருடைய 84வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

படம் அல்ல பாடம்

இதனையொட்டி, நடிகர் கமல் ஹாசன் தனது ஆசானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "எத்தனை படங்கள்... அத்தனையும் பாடங்கள். பள்ளியாகவும் பல்கலைக்கழகமாகவும் திகழ்ந்து பயிற்றிப் பல கல்வி தந்த ஆசான் கே.பாலசந்தரின் நினைவு நாள் இன்று. அவரிடம் பயின்றவை என்றும் என் நினைவில் நிற்கும். என்னை வழி நடத்தும். அவர் புகழ் நிலைக்கும்." எனக் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.