Kamal Hassan: கதறவிட வந்தவரை கதறவிட்ட ரசிகர்கள்.. இவருக்கா இந்த நிலை.. எல்லாம் போச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kamal Hassan: கதறவிட வந்தவரை கதறவிட்ட ரசிகர்கள்.. இவருக்கா இந்த நிலை.. எல்லாம் போச்சு

Kamal Hassan: கதறவிட வந்தவரை கதறவிட்ட ரசிகர்கள்.. இவருக்கா இந்த நிலை.. எல்லாம் போச்சு

Malavica Natarajan HT Tamil
Published Oct 03, 2024 05:19 PM IST

Kamal Hassan: நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால், இந்தியன் 3 படத்திற்கு போதிய வரவேற்று இல்லாமல் இருக்கிறது. இதனால், இந்தப் படத்தின் வெளியீடு குறித்து படக்குழு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Kamal Hassan: கதறவிட வந்தவரை கதறவிட்ட ரசிகர்கள்.. இவருக்கா இந்த நிலை.. எல்லாம் போச்சு
Kamal Hassan: கதறவிட வந்தவரை கதறவிட்ட ரசிகர்கள்.. இவருக்கா இந்த நிலை.. எல்லாம் போச்சு

நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக கமல் ஹாசன், இந்தியனாக கொடுத்த குரல் தமிழக மக்களிடம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் இன்றளவும் இருப்பதை உணர்ந்த, கமல் ஹாசனும், அப்படத்தின் இயக்குநர் ஷங்கரும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகத்தை எடுக்க தயாராகினர்.

சுமார் 5 ஆண்டுகளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வந்ததாலும், தாத்தா வராரு கதறவிட போறாரு என்ற பாடலும் மேலும், படத்திற்கான ஹைப் கூடியது.

அதிகரித்த எதிர்பார்ப்பு

இதனால், பிரம்மாண்ட இயக்குநர் இந்தியன் 2 படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்றனர். ஆனால், தாத்தா நிஜமாகவே ரசிகர்களை கதறவிட்டுவிட்டார். படத்தின் பாதி இடங்கள் கமல் பேசுவதாகவே இருக்கிறது. கொலை செய்ய வந்தவனிடமும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால், ரசிகர்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் கதறினர்.

மேலும், படத்தில் உள்ள பல லாஜிக் குறைகள் பட்டி தொட்டி எங்கும் வேகமாக பரவியது. இதனால், படம் எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பை பெறாமல் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பெறும் தோல்வியை சந்தித்தது.

இதன் தாக்கம் நிச்சயம் இந்தியன் 3 படத்திலும் இருக்கும் என இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தார். அதேசமயம் அவர் இயக்கும் அடுத்தடுத்த படத்திலும் இதன் தாக்கம் இருக்கும் எனவும் அச்சப்பட்டார்.

5 வருட உழைப்பு

இந்தியன் படத்தின் அடுத்த பாகத்திற்காக ஷங்கர் தன் 5 வருட உழைப்பை அளித்துள்ளார். அத்துடன் இதற்காக பெரும் பணத்தையும் அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் பெற்றுள்ளார்.

இந்தியன் 2 படம் எடுக்கும் போதே அதன் 3ம் பாகத்திற்கான படத்தையும் எடுத்து முடித்துள்ளார் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் உள்ள சஸ்பெண்ஸ்களை இந்தியன் 3 கூறுவது போல பல காட்சிகள் கிட்டத்தட்ட 3ம் பாகத்திற்கான படத்தையும் முடித்துள்ளார். இப்போது படத்தை திரும்ப எடுக்கவும் முடியாமல், அதே கதையை திரையிடவும் முடியாமல் தவித்து வருகிறாராம்.

மேலும், இந்தியன் 2 படத்திற்காக பிரத்யேகமான காட்சிகள், அனிமேஷன்கள், பிரம்மாண்ட செட், வெளிநாட்டில் ஷூட்டிங், பல நடிகர்கள் பட்டாளம் என ஷங்கர் கேட்ட அத்தனைக்கும் படக்குழு ஓகே சொல்லியுள்ளது.

அச்சத்தில் எடுத்த முடிவு

ஆனால், தற்போது, இந்தியன் 2 படத்தை பார்த்த பின் அடுத்த திரைப்படத்தின் வெளியீட்டை நினைத்து ஷங்கருடன் சேர்ந்து அவர்களும் அச்சத்தில் உள்ளார்களாம்.

இதனால், ஷங்கரும் தயாரிப்பு நிறுவனமும் கலந்து பேசி, இந்தியன் 3 படத்தை ஓடிடியிலேயே நேரடியாக திரையிடலாம் என ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் படம் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நேரடியாக ஒடிடியில் வெளியிடப்படலாம் எனவும், தற்போது வரை எந்த ஓடிடி தளம் என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலால் கவலையில் உள்ளது கமல் ரசிகர்கள் தான். உடல்நிலை, அரசியல், பிக்பாஸ், திரைப்படம் என கமலுக்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வருவதால், கமல் ரசிகர்கள் அவரை நினைத்து கவலைப்பட்டு வருகின்றனராம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.