71 வயதிலும் முத்தத்தை மிச்சம் வைக்காத கமல்.. தக் லைஃப் செய்த கமலுக்கு நெட்டிசன் கொடுத்த ரியாக்ஷன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  71 வயதிலும் முத்தத்தை மிச்சம் வைக்காத கமல்.. தக் லைஃப் செய்த கமலுக்கு நெட்டிசன் கொடுத்த ரியாக்ஷன்!

71 வயதிலும் முத்தத்தை மிச்சம் வைக்காத கமல்.. தக் லைஃப் செய்த கமலுக்கு நெட்டிசன் கொடுத்த ரியாக்ஷன்!

Malavica Natarajan HT Tamil
Published May 18, 2025 03:13 PM IST

தக் லைஃப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் அபிராமி மற்றும் த்ரிஷா ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும் முத்தக் காட்சியில் நடித்தது குறித்து நெட்டிசன்கள் கலவையான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

71 வயதிலும் முத்தத்தை மிச்சம் வைக்காத கமல்.. தக் லைஃப் செய்த கமலுக்கு நெட்டிசன் கொடுத்த ரியாக்ஷன்!
71 வயதிலும் முத்தத்தை மிச்சம் வைக்காத கமல்.. தக் லைஃப் செய்த கமலுக்கு நெட்டிசன் கொடுத்த ரியாக்ஷன்!

ஆனால், வெளியான டிரைலரில் உள்ள கமல் ஹாசனின் ரொமான்ஸ் காட்சிகளையும் முத்தக்காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள் அதுகுறித்து சில கருத்துகளை முன் வைத்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை கமல் ஹாசனுக்கு ஜோடியாக காட்டப்பட்ட அபிராமி மற்றும் த்ரிஷாவின் வயதைப் பற்றி தான்.

கமல்ஹாசன் - த்ரிஷா, அபிராமி வயது வித்தியாசம்

ஒருவர், கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் காட்சியின் ஸ்கிரீன்ஷாட்டையும், கமல்ஹாசன் அபிராமி (42)யுடன் முத்தமிடும் மற்றொரு படத்தையும் பகிர்ந்து, "இல்லை. இங்கு கடவுளே இல்லை" என்று எழுதியுள்ளார். 70 வயதான கமல்ஹாசனுக்கும், 42 வயதான திரிஷாவுக்கும் இடையிலான வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டு தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கமலை விமர்சித்த நெட்டிசன்கள்

ஒரு ரெடிட் பயனர், "ஒரு முதியவர் இளம் பெண்ணுடன் காதலிப்பதில் தவறில்லை, ஆனால் அது சரியாகக் காட்டப்பட வேண்டும். ஒரு முதியவர் இளமையாக நடித்து இளம் பெண்களுடன் காதலிப்பது விசித்திரமாக இருக்கிறது" என்று எழுதியுள்ளார்.

அண்ணா என்ன அண்ணா இதெல்லாம்

கமல்ஹாசன் - அபிராமி நடித்த முத்தக் காட்சியைக் குறிப்பிட்ட மற்றொருவர், "இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது" என்று எழுதியுள்ளார். கமல்ஹாசன் - த்ரிஷாவின் வயது வித்தியாசம் குறித்து, "த்ரிஷா, ஸ்ருதிஹாசனை விட மூன்று வயது மட்டுமே மூத்தவர்" என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "30 வருட வித்தியாசம் தான் இருவருக்கும் என நக்கலாக பதிவிட்டுள்ளார். "யோவ்வ்... அண்ணா.. அது என்ன அண்ணா?" என்று மற்றொருவர் முத்தமிடும் ஸ்கீர்ன் ஷாட்டை பதிவிட்டு கேட்டுள்ளார். "மணி ரத்னம் தனது பாரம்பரியத்தை நாசமாக்குகிறார்" என்று ஒருவர் தன் கோவத்தை வெளிப்படுத்தினார்.

இது வயதான கும்பல் தலைவன் கதை

சில ரசிகர்கள் நடிகருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளனர். ஒருவர், "இந்த ஜோடி சரியில்லை என்று எதுவும் இல்லை, ஏனெனில் கதை ஒரு வயதான ஒரு கும்பல் தலைவன் இளம் பெண்ணுடன் உறவு வைத்திருப்பதைக் காட்டுகிறது. ஆனால், 30 வயது வித்தியாசத்தில் அபிராமி மற்றும் கமல்ஹாசன் முத்தமிடுவது விசித்திரமாகத் தோன்றுகிறது. இருப்பினும், படம் அவர்களின் வயது வித்தியாசத்தை உண்மையானதை விட குறைவாகக் காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன்" என்று எழுதியுள்ளார். மற்றொருவர், "இது இரண்டு சம்மதமுள்ள பெரியவர்கள், ஆனால், கமலின் மனைவியாக மூத்த நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படம்

மணி ரத்னம் இயக்கிய இந்த கும்பல் ஆக்‌ஷன் திரில்லரில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், சான்யா மால்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அலி ஃபஜல், பங்கஜ் திரிபாதி, ரோஹித் சாரஃப் மற்றும் வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர். மணி ரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து 1987 இல் வெளியான 'நாயகன்' படத்திற்குப் பிறகு இது இவர்களின் மீண்டும் இணைந்த படம். இந்தப் படம் ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.