கமல் எனும் காந்தக் குரலோன்.. சந்தோஷமோ சோகமோ.. காதலோ தோல்வியோ.. கமல் குரலில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கமல் எனும் காந்தக் குரலோன்.. சந்தோஷமோ சோகமோ.. காதலோ தோல்வியோ.. கமல் குரலில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?

கமல் எனும் காந்தக் குரலோன்.. சந்தோஷமோ சோகமோ.. காதலோ தோல்வியோ.. கமல் குரலில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?

Malavica Natarajan HT Tamil
Nov 03, 2024 02:15 PM IST

தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகராக உள்ள கமல் ஹாசன், தன் காந்தக் குரலால் எப்பேர்பட்ட மக்களையும் பாடல் மூலம் ஈர்த்துவிடுவார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கமல் எனும் காந்தக் குரலோன்.. சந்தோஷமோ சோகமோ.. காதலோ தோல்வியோ.. கமல் குரலில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?
கமல் எனும் காந்தக் குரலோன்.. சந்தோஷமோ சோகமோ.. காதலோ தோல்வியோ.. கமல் குரலில் இந்தப் பாடல்களை கேட்டிருக்கிறீர்களா?

படித்த மேதாவியாக இருந்தாலும் சரி, பட்டிக்காட்டானாக இருந்தாலும் சரி, கடவுள் பக்தனாக இருந்தாலும் சரி, எதிர்பாளனாக இருந்தாலும் சரி, மருத்துவராக இருந்தாலும் சரி, நோயாளியாக இருந்தாலும் சரி, ஒருவனுக்கு ஒருத்தி என ராமனாக இருக்க வேண்டும் என்றாலும் சரி, மன்மதனாக சுற்ற வேண்டும் என்றாலும் சரி, சண்டியராக இருக்க வேண்டும் என்றாலும் சரி, வாழ்க்கையை சொல்லித் தரும் ஆசிரியராக இருந்தாலும் சரி எந்த கமல் வேண்டுமோ அந்தக் கமல் திரையில் வாழ்ந்து காட்டிவிட்டு செல்வார்.

கமல் வெறும் நடிகர் அல்ல

அப்படிப்பட்ட திறமை கொண்ட மனிதன் சினிமாத் துறையில் வெறும் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி, மக்களை சந்தோஷப்படுத்தும் நபராக இருந்தது இல்லை. நடிப்புடன் சேர்த்து படங்களுக்கு வசனம் எழுதுவது, தான் விரும்பும் மாறுபட்ட சினிமாவை இயக்குவது, தயாரிப்பது என ஒருபக்கம் செல்ல, தன் எண்ண ஓட்டங்களை திரைக்கதையுடன் இணைத்து பாடல்களாக வடிவமைப்பதும், பல திரைப்படங்களில் உள்ள பாடல்களுக்கு தன் குரல் மூலம் உயர் கொடுத்து வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

மெகா ஹிட் கொடுத்த கமல்

இதுவரை, திரைப்படங்களுக்கு கமல் பாடிய ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர அனைத்து பாடல்களுமே மெகா ஹிட் அடித்தவை தான். ஒவ்வொரு பாடலும், அந்தக் கதைக்கேற்ப இருப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்ளும் கமல், தனது குரலில் தன்னுடைய மொத்த உழைப்பையும் வெளிக் கொண்டு வருவார். அப்படி, சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பல விமர்சனங்களைப் பெற்றும், ஓடிடியில் நல்ல வரவேற்பையும் பெற்ற மெய்யழகன் படத்தில் கமல் பாடிய 2 பாடல்கள் படத்திற்கு நடுவே உயிரை உருக்குவது போன்று அமைந்துள்ளது.

என்ன பாடல் வேண்டும் அத்தனையும் இங்க இருக்கு

இதனால், அவர் குரலுக்கு தற்போது பலரும் ரசிகர்களாக மாறியுள்ளனர். ஆனால் இவர் இதற்கு முன் தமிழ் சினிமாவில் கிளாசிக் பாடல், குத்து பாடல், ராப் பாடல் என பல விதமான பாடல்களை பாடி அசத்தியுள்ளார். அவை அத்தனையும் ஹிட் அடித்தவை என்பதும் உண்மையே.

ஆட்டம் போடும் பாடல்

உதாரணமாக, போட்டா படியுது படியுது, ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்ல, ருக்கு ருக்கு ருக்கு, காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது, கொம்புல பூவ சுத்தி, ஆழ்வார் பேட்ட ஆளுடா போன்ற பாடல்கள் துள்ளலாக மக்களை ஆட்டம் போட வைக்கும்.

சோகத்தை கொண்டாடும் பாடல்

யார் யார் சிவம், யாரோ இவன் யாரோ, மாட விளக்கே, அணு விதைத்த பூமியிலே, நானாகிய நதிமூலமே, தன்மானம் உள்ள நெஞ்சம், தென்பாண்டி சீமையிலே, சாகாவரம் போன்ற பாடல்கள் நம் உயிருக்குள் ஊடுருவி மனதை உழுக்குமாறு இருக்கும்.

காதலில் லயிக்கும் பாடல்

கண்மணி அன்போடு காதலன், இஞ்சி இடுப்பழகி, உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது, நினைவோ ஒரு பறவை, வனித்தாவணி, நீல வானம் நீயும் நானும், சிங்கிள் கிஸ்கே லவ்வா, கண்ணோடு கண் போன்ற பாடல்கள் காதலின் தீவிரத்தை உணர்த்துவதாக அமையும்.

உணர்வுகளை பாய்ச்சும் பாடல்

கடவுள் பாதி மிருகம் பாதி, இரணியன் நாடகம், நெருப்பு வாயினில், துப்பாக்கி எங்கள் தோலிலே, எலே மச்சி மச்சி, சிரி சிரி சிரி, சாமதான வேத தண்டம், எதிராளி பாக்கிறான் போன்ற பாடல்கள் உலகின் தத்துவங்கள் அனைத்தையும் உணர வைத்திருப்பார்.

இப்படி, மக்களை மகிழ்விக்கும் கலைஞனின் குரலை நாம் ஏன் பெரிதளவில் கொண்டாடத் தவறிவிட்டோம் எனத் தெரியவில்லை. இனியாவது, கமல் மட்டுமின்றி உணர்வுகளை கடத்திச் செல்லும் குரல்களை கண்டெடுத்து அதற்கு உரிய மரியாதை செய்வோம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.