Kadhal Sugumar: முதல் மனைவியால தான் சண்டை.. என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்.. காதல் சுகுமார் மனைவி குற்றச்சாட்டு
Kadhal Sugumar: நடிகர் காதல் சுகுமார் தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும், தன்னுடன் குடும்பம் நடத்தி சைக்கோ தனமாக நடந்து கொண்டதாகவும் பெண் ஒருவர் பரரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Kadhal Sugumar: காதல் சுகுமார் தன் வாழ்க்கையை சீரழித்ததாக அவருடைய 2ம் மனைவி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர், காதல் சுகுமாருக்கு எதிராக பல வீடியோ ஆதாரங்களையும் திரட்டி மீடியாக்களிடம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர், 2nd floor எனும் யூடியூப் சேனலுக்கு காதல் சுகுமாருக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், எனக்கும் அவருக்கும் ஒரு ஷார்ட் பிலிம்ல தான் பழக்கம் ஏற்பட்டுச்சு. நான் இதுவரைக்கும் 4 படம் பண்ணிருக்கேன். ஷார்ட் பிலிம் எல்லாம் நடிச்சிருக்கேன்.
ஷார்ட் பிலிம் மூலம் பழக்கம்
ஷார்ட் பிலம் டைம்ல இவரோட கான்டாக்ட் கெடச்சா பட வாய்ப்பு எல்லாம் வரும்ன்னு நெனச்சு பேச ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் என்னோட போட்டோ, குடும்பம் பத்தி எல்லாம் விசாரிச்சாரு.
அவரும் பிரண்டு மாதிரி கேக்குறாரேன்னு எல்லாம் சொன்னேன். எனக்கு சின்ன வயசுலயே கல்யாணம் ஆகிருச்சு, இப்ப 13 வருஷமா தனியா தான் இருக்கேன்னு எல்லாம் சொல்றேன். இதெல்லாம் சொன்னா வாய்ப்பு குடுப்பாங்கன்னு நெனச்சு சொன்னேன்.
லவ்வ சொன்னதும் ஓகே சொனே்னேன்
ஆனா, இதையே பிடிச்சிட்டு, அவரு எனக்கும் கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆச்சு. தனியா தான் இருக்கேன்னு சொல்லி பேச ஆரம்பிச்சாரு. ஒருநாள் லொக்கேஷன் பாக்க போகும் போது அவர் என்கிட்ட லவ்வ சொல்றாரு. நானும் அதுக்கு ஓகே சொல்லிட்டேன்.
அப்புறம் வீட்ல வந்து சொன்னா யாரும் இத ஏத்துக்கல. நான் முஸ்லீம், ஒரு இந்துவ கல்யாணம் பண்ணி தான் வாழ்க்கை நாசமா போச்சு, திரும்பவும் ஒரு இந்து, அதுவும் சினிமா காரன் வேணாம்ன்னு சொன்னாங்க.
அதுக்கு அப்புறம் அவரு முஸ்லீம் முறைப்படியே என்ன கல்யாணம் பண்ணிட்டு தனியா வாழ்ந்தாரு. அவரோட நான் நிறைய விழாக்களுக்கு எல்லாம் போயிருக்கேன். எல்லா இடத்துலயும் என்ன மனைவின்னு தான் அறிமுகப்படுத்துனதால எனக்கு எந்த சந்தேகமும் வரல.
பணம், நகை எல்லாம் கேட்டாரு
அப்போ எல்லாம் பைனான்சியர் மாறிட்டாரு. படம் கொஞ்சம் சிக்கல்ல இருக்குன்னு சொல்லி பணம் கேப்பாரு. அப்போ என் நகை எல்லாம் வச்சு காசு வாங்கி தருவேன். வட்டிக்கு வாங்குவேன். இப்படியே 7 லட்சம் வரைக்கும் செலவு பண்ணிருக்கேன்.
திடீர்ன்னு ஒருநாள் அவரோட முதல் மனைவி மெசேஜ் பண்ணி காசு கேக்குறாங்க. 3 வருஷமா நானும் அவரும் ஒன்னா இருக்கோம். அவரோட வெளிய போற போட்டோ எல்லாம் நான் சோசியல் மீடியாவுல போடுறேன். இதை எல்லாம் பாத்தும் அவங்க எப்படி சாதாரணமாக பேசுறாங்க என கேட்டேன்.
அப்போது தான் அவரின் சுய ரூபமே தெரிந்தது என அவரது 2வது மனைவி கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்