Kadhal Sugumar: அவன் ஒரு சைக்கோ.. free-யா கெடச்சேன்னு 3 வருஷம் துடிக்க துடிக்க வச்சி செஞ்சிட்டான்.. காதல் சுகுமார் மனைவி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kadhal Sugumar: அவன் ஒரு சைக்கோ.. Free-யா கெடச்சேன்னு 3 வருஷம் துடிக்க துடிக்க வச்சி செஞ்சிட்டான்.. காதல் சுகுமார் மனைவி

Kadhal Sugumar: அவன் ஒரு சைக்கோ.. free-யா கெடச்சேன்னு 3 வருஷம் துடிக்க துடிக்க வச்சி செஞ்சிட்டான்.. காதல் சுகுமார் மனைவி

Malavica Natarajan HT Tamil
Jan 19, 2025 01:33 PM IST

Kadhal Sugumar: நடிகர் காதல் சுகுமார் தன் வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும், தன்னுடன் குடும்பம் நடத்தி சைக்கோ தனமாக நடந்து கொண்டதாகவும் பெண் ஒருவர் பரரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Kadhal Sugumar: அவன் ஒரு சைக்கோ.. free-யா கெடச்சேன்னு 3 வருஷம் துடிக்க துடிக்க வச்சி செஞ்சிட்டான்.. காதல் சுகுமார் மனைவி
Kadhal Sugumar: அவன் ஒரு சைக்கோ.. free-யா கெடச்சேன்னு 3 வருஷம் துடிக்க துடிக்க வச்சி செஞ்சிட்டான்.. காதல் சுகுமார் மனைவி

இதுகுறித்து அவர், 2nd Floor எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் காதல் சுகுமார் தன்னிடம் சைக்கோ போல் நடந்து கொண்டதாகவும் கூறினார்.

முதல் மனைவி கிட்ட இருந்து போன்

இத நான் கேக்க போயி அது சண்டையா மாறிடுச்சு. அப்புறம் என்கிட்ட அழுது எல்லாம் சமாளிச்சாரு. நான் என் பையனுக்காக தான் பாக்குறேன். இல்லைன்னா டைவர்ஸ் பண்ணிருப்பேன்னு சொல்றாரு. அதுவரைக்கும் அவங்க டைவர்ஸ் பண்ணலன்னே எனக்கு தெரியாது. அப்புறம் வழக்கம் போல வீட்ல இருந்து வெளிய போனவரு ஆளையே காணோம். சோசியல் மீடியா எல்லாத்துலயும் என்ன பிளாக் பண்ணிட்டான்.

எல்லாம் என்ன அசிங்கமா பேசுனாங்க

ரொம்ப நாள் ஆகியும் வரலையேன்னு சினிமால இருக்க அவரோட பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம் கேட்டு முதல் வைஃப் வீட்டுக்கு போனேன். அங்கப் போனா, வீட்ல இருக்க எல்லாரும் என்ன ரொம்ப கேவலமா பேசி அடிக்க வர்றாங்க. நான் அவர மயக்கி வச்சிருக்கேன்னு சொல்லி அடிக்க வர்றாங்க. பொன்னாட்டி, புள்ள, மச்சான், மாமியார்ன்னு எல்லாரும் ஒரே வீட்டுல வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்புறம் என் கூட வந்த டைரக்டர் கிட்ட தான் அவரோட பொன்டாட்டி செத்துருவேன்னு சொன்னதால கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டேன்னு சொன்னாரு.

என் வாழ்க்கை இப்படி ஆகணுமா

அவரு என்கூட இருந்த வரைக்கும் எனக்காக ஒரு டிரஸ் கூட கொடுத்தது இல்ல. ஆனா அவன் போட்ருக்க டிரஸ்ல இருந்து ஷீ வரைக்கும் எல்லாம் நான் வாங்கிக் கொடுத்தது. ஆட்டுக்கால் பாயா, மாட்டு வால் சூப்புன்னு தான் ஐயாக்கு சமைச்சு வைக்கனும் ஆனா என் வாழ்க்கை இப்படி எல்லாம் ஆகும்ன்னு நெனக்கல. சுத்தி இருக்கவங்க கேக்குற கேள்வி எல்லாம் தாங்க முடியாம நான் மாத்திரை சாப்பிட்டு சாக போயிட்டேன். அப்புறம் என்ன காப்பாத்துனாங்க. என் அம்மா, அப்பாவுக்கு உடம்பு முடியல.

தெரிஞ்சே போகல

ஆனா, இது எதுவுமே நடக்காத மாதிரி அவன் சோசியல் மீடியாவுல ஜாலியா போஸ்ட் போட்டுட்டு இருக்கான். நான் வந்து அவருக்கு விளம்பரம் தர்றேனாம். இதுனால அவரு மார்க்கெட் ஏறி பட வாய்ப்பு எல்லாம் வரும்ன்னு சொல்லிட்டு இருக்கான்.

அவரோட முதல் மனைவி பத்தி பேசினாலே அடிப்பாரு. அவன இஸ்டப்ப்டடு தான் நான் கூட இருக்கோம். ஆனா இப்படி எல்லாம் இருப்பாங்கன்னு தெரிஞ்சு யாரும் இருக்குறது இல்ல தான.

சைக்கோ மாதிரி பண்ணுவான்

என் கூட இருக்கும் போது எல்லாம் சும்மாவே இருக்க மாட்டாரு. கடிப்பாரு எல்லாம் பண்ணுவாரு. என்னன்னு கேட்டா உன் மேல அவ்ளோ வெறின்னு சொல்லுவாரு. என்னோட அழகு, தேவதை பொக்கிஷம்ன்னு எல்லாம் பேசுவாரு.

நான உண்மையிலயே அவரு பணத்துக்காகவும் சுகத்துக்காகவும் மட்டும் தான் என் கூட இருந்தாரு. போலிஸ்காரங்க கூட வெளிய போன ஒருந்திக்கு ஆயிரக்கணக்குல செலவு பண்ணணும்ங்குறதால ஃபிரியா கிடைச் இவள வச்சி செஞ்சிருக்கியான்னு கேட்டாங்க" எனக் கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.