Actor K.Balaji: நல்ல நடிகர்..நல்ல தயாரிப்பாளர்.. ரீமேக் மன்னன்.. ரஜினியை பில்லாவாக மாற்றிய பாலாஜி..!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor K.balaji: நல்ல நடிகர்..நல்ல தயாரிப்பாளர்.. ரீமேக் மன்னன்.. ரஜினியை பில்லாவாக மாற்றிய பாலாஜி..!

Actor K.Balaji: நல்ல நடிகர்..நல்ல தயாரிப்பாளர்.. ரீமேக் மன்னன்.. ரஜினியை பில்லாவாக மாற்றிய பாலாஜி..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 02, 2024 06:00 AM IST

யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர் திரையுலகினர்.

 பாலாஜி
பாலாஜி

இதையடுத்து தன் மூத்த மகள் சுஜாதா பெயரில் சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற கம்பெனியை துவக்கினார். இதன் முதல் படம் அண்ணாவின் ஆசை 1966ல் வெளியானது. ஜெமினி சாவித்திரிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த படத்தில் அவர்களை நடிக்க வைத்திருந்தார். அந்த படம் வியாபாரம் ஆகவில்லை.

ஒரு கட்டத்தில் ஜெமினி எஸ்.எஸ் வாசன் அந்த படத்தை வினியோகம் செய்ய முன் வந்தார். இதனால் பெரும் நஷ்டம் இல்லாமல் பாலாஜி தப்பிதார். இதையடுத்துதான் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்னவென்றால் புதிய கதையை நேரடியாக எடுப்பதற்கு பதில் வேறு மொழியில் ஓடி வெற்றி பெற்ற படங்களை மொழி மாற்றம் செய்து ரீமேக் செய்ய முடிவு செய்தார்.

அதில் அவர் அந்த படங்களை தேர்ந்தெடுக்க புது முயற்சியில் ஈடுபட்டார் . வெற்றி பெரும் பிற மொழி படங்கள் ஓடும் ஊருக்கே சென்று ஆட்டோ டிரைவர், டீக்கடைகாரர்கள் என பலரிடம் படத்தை பற்றி கேட்டு அதன் பின் அந்த படம் எடுப்பது குறித்து முடிவு செய்தார். இப்படி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெற்றி வாகை சூடிய படங்களை தமிழுக்கு ஏற்றார் போல மொழி மாற்றம் செய்து வெற்றி குவித்தார்.

இதையடுத்து தங்கை, என் தம்பி ராஜா, எங்கிருந்தோ வந்தாள், நீதி, ராஜா, தியாகம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். இதையடுத்து கமலை வைத்து சட்டம், வாழ்வே மாயம் படங்களையும் எடுத்தார். ரஜினியை வைத்து பில்லா படத்தை தயாரித்தார். அதில் தான் முதல் முதலில் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடும் வசனம் வரும்.

பாலாஜி எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு விழா அன்றும் எம்.ஜி.ஆரிடம் சென்று அவரிடம் ராசியான கையால் 100 ரூபாய் வாங்குவது பாலாஜியின் வழக்கம். ஒரு கட்டத்தில் சிவாஜி வச்சு படம் எடுக்குற என்னை வைத்து எடுக்க மாட்டேங்குற என்று கேட்டதற்கு ஏதேதோ சொல்லி கடைசி வரை நழுவி விட்டார்.

தன் மனைவி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார் பாலாஜி. ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். அதனால் தனது மனைவியை கரம் பிடித்த நாளில் தன் படங்கள் வெளி வர வேண்டும் என்பதை ஒரு சென்டி மெண்டாகவே வைத்திருந்தார். எனவே அந்தநாளில், படம் ரிலீஸ் செய்யவேண்டும் என விரும்பினார். இதனால் பாலாஜியின் முக்கால்வாசி படங்கள், ஜனவரி 26ம் தேதியன்று வெளியானவை. 

அதே சமயம் நடிகர் நடிகைகள் தொடங்கி டெக்னீஷியன், லைட்பாய் உட்பட எவருக்கும் சம்பள பாக்கியே வைக்காதவர், யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர் திரையுலகினர்.

உடல் நலக்குறைவால் கே.பாலாஜி, 2009 மே 2-ம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் ஹெச்டி தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.