Harish Kalyan Marriage: நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்
நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர், அறிது அறிது, சட்டப்படி குற்றம், பொறியாளன் உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நடித்த ’பியார் பிரேமா காதல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இவர் தற்போது அவர் ’நூறு கோடி வானவில்’ , ’ஸ்டார்’ மற்றும் ’டீசல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதா உதயகுமார் ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டாபிக்ஸ்