கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்! - முழு விபரம் உள்ளே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்! - முழு விபரம் உள்ளே!

கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்! - முழு விபரம் உள்ளே!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 05, 2025 01:08 PM IST

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்! - முழு விபரம் உள்ளே!
கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்! - முழு விபரம் உள்ளே! (the hindu )

கவுண்டமணி மனைவி காலமானதை தொடர்ந்து, அவரது ஆத்மா சாந்தியடைய திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சென்னை தேனாம்பேட்டை உள்ள இல்லத்தில் வைத்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

கொடிகட்டி பறந்த கவுண்டமணி

1980, 90 களில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் - செந்திலும் இணைந்து நடித்த படங்களின் காமெடிகள் இன்று இணையத்தை கலக்கி வருகின்றன.

1970-ம் ஆண்டு வெளியான ‘ராமன் எந்தன் ராமனடி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் நுழைந்த கவுண்டமணி தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இடையே, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் கடைசியாக ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.