T.P. Gajendran : குடும்பங்கள் கொண்டாடும் படங்களை கொடுத்து அசத்தியவர்.. டி.பி. கஜேந்திரன் நினைவு நாள் இன்று!
T.P. Gajendran memorial day : குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியவர் டி.பி. கஜேந்திரன். அவரது நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.

குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குநர் டி. பி. கஜேந்திரன். டி.பி.கஜேந்திரன் கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிதம்பர ரகசியம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1988 இல், வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில் விசு, எஸ்.வி.சேகர், சீதா உட்பட பலர் நடித்திருந்தனர்.
ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர்,ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு காவக்காரன்',கார்த்தி நடித்த ‘பாண்டி நாட்டுத் தங்கம்', ராமராஜன் நடித்த ‘எங்க ஊரு மாப்பிள்ளை', பிரபு நடித்த ‘நல்ல காலம் பொறந்தாச்சு', ரமேஷ் அரவிந்த் நடித்த ‘பாட்டு வாத்தியார்', பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்', ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘பந்தா பரமசிவம்’, பிரசன்னா நடித்த ‘சீனா தானா' உட்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், ‘பந்தா பரமசிவம்’, ‘சந்திமுகி’, ‘வேலாயுதம்’, ‘வில்லு’, ‘பேரழகன்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன் தமிழ் சினிமாவில் சிறந்த பேமிலி எண்டர்டெயினர் படங்களில் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறக்கூடிய படமாக பட்ஜெட் பத்மநாபன் அமைந்திருக்கும். வெறும் குடும்ப படமாக இல்லாமல் காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து ஜனரஞ்சக விஷயங்களும் இடம்பிடித்திருக்கும் படமாக இது உள்ளது. இப்படத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், விவேக், மும்தாஜ், கரண், மணிவண்ணன், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் .
காமெடி நடிகராகவும் வலம் வந்த டிபி கஜேந்திரன், மினிமம் கியாரண்டி இயக்குநர் என்ற பெயருக்கு சொந்தமானவர். குறைந்த பட்ஜெட்டில் விரைவாக படம் எடுத்து தயாரிப்பாளருக்கு நிறைவான லாபம் கொடுப்பதில் டிபி கஜேந்திரன் கில்லாடி. இவர் 2015 இல் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிபி கஜேந்திரன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவையாகவும், குடும்ப சென்டிமெண்டலாகவும் இருக்கும். அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரஜினி, கமல், விஜய், வடிவேலு ஆகியோருடன் கூட்டணி வைத்து சிரிக்க வைத்துள்ளார். முக்கியமாக பம்மல் கே சம்பந்தம் படத்தில் இயக்குநராகவே நடித்து கமலுடன் காமெடி கலாட்டா செய்திருப்பார் இவர்.
அப்பா இறந்தும் ஷூட்டிங் ரத்து செய்யாமல் பொறுப்பாக அதனை முடித்துவிட்டு சென்றாராம். இதனை நடிகர் ராஜா திருமுருகன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பார். அதில்,”‘பாட்டு வாத்தியார்’ என்ற ஒரு படம் இயக்கினார். ஷூட்டிங் நடக்கும்போது அவரது அப்பாவின் மரணம் பற்றிய செய்தி வந்தது.
உடனே கிளம்பினால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரும் மறுநாள் முழுக்க இருந்து படப்பிடிப்பு முடிந்த உடன் அழுதபடி காரில் ஏறி கிளம்பினார்.” என பதிவிட்டிருப்பார்.
டிபி கஜேந்திரன் இயக்கத்தில் கடைசியாக 2010ல் மகனே என் மருமகனே திரைப்படம் வெளியானது. இதில் விவேக் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் ஆண்டு பிப் 05-ல் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இவரின் நினைவு நாளான இன்று அவரை நினைவு கூறுவோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்