விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனத்துக்கு கொந்தளித்த சசிகுமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனத்துக்கு கொந்தளித்த சசிகுமார்

விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனத்துக்கு கொந்தளித்த சசிகுமார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2025 12:46 PM IST

கருப்பு உடை அணிந்து சபரிமலை ஐயப்பான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் நடிகர் சசிகுமார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனம்துக்கு கொந்தளித்த சசிகுமார்
விரதம் இருந்து சபரிமலையில் சாமி தரிசனம்.. வைரலாகும் புகைப்படங்கள்! சூர்யா பற்றிய விமர்சனம்துக்கு கொந்தளித்த சசிகுமார்

சபரிமலை பயணம்

இதையடுத்து நடிகர் சசிகுமார் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்திருக்கும் நிலையில், விரதமிருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். கருப்பு நிற ஆடையுடன் ஐயப்பா சாமியாக சபரிமலையில் சசிக்குமார் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சினிமா நடிகர்களில் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று ஐயப்பனை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வில்லனாக வலம் வந்த நம்பியார் தீவிர ஐயப்பன் பக்தராக இருந்துள்ளார். தொடர்ந்து சபரிமலைக்கு மாலை அணிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கடைப்பிடித்துள்ளார்.

அவரை முன்மாதிரியாக வைத்து பல நடிகர்களும் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

செருப்பு அணியாத ராம்சரண்

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்வதென்றால் தினமும் இரண்டு நேரம் சுத்தமாக குளித்து, விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது என்கிற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதேபோல் காலில் செரு்பபு அணியக்கூடாது.

அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவாக வலம் வரும் ராம் சரண் சபரிமலைக்கு மாலையிட்டுக்கொண்ட நிலையில், சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற தனது கேம் சேஞ்சர் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது ஷூ, செருப்பு வெறும் காலில் வந்துள்ளார். இது வடக்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ராம் சரண் மாலை அணிந்திருக்கும் விஷயம் தெரியவந்தது.

சசிகுமார் புதிய படங்கள்

சசிகுமார் நடிப்பில் இந்த ஆண்டில் கருடன், நந்தன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களும் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றன. நந்தன் படத்தின் சசிகுமாரின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

இதையடுத்து தற்போது டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுதவிர எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்துடன் அடுத்த ஆண்டில் மீண்டும் இயக்குநராக சசிக்குமார் கம்பேக் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை தமிழ் பேசும் சசிக்குமார்

டூரிஸ்ட் பேமிலி படம் நகைச்சுவை படமாக உருவாகி வரும் நிலையில், இதன் டீஸர் 3 நிமிடங்களுடன் கூடிய காட்சிகள் இடம்பிடித்துள்ளன. கணவன் மனைவியாக வரும் சசிக்குமார் - சிம்ரன் தங்களது இரு மகன்களுடன் இரவு நேரத்தில் வீட்டை காலி செய்து ஊரை விட்டு எஸ்கேப் ஆக முயற்சிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது. ககலகலப்பான காமெடி காட்சிகளுடன் படத்தின் டீஸர் அமைந்துள்ளது. படத்தில் சசிக்குமார், சிம்ரன் ஆகியோர் இலங்கை தமிழில் பேசியுள்ளார்கள். அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.

ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான்

முன்னதாக வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சசிகுமார், சூர்யாவின் கங்குவா படம் மீது எழுந்த விமர்சனங்கள் பற்றி பேசினார். அப்போது அவர், "குழந்தைக்கு பால் கொடுத்து பசியை ஆற்றுவதே தாய்தான். அவளின் மாரை அறுத்து எப்படி சாப்பிடமுடியும். அதுபோலதான் சிலர் சினிமாவை நம்பி பிழைப்பு நடத்தும் சிலர் கங்குவா படத்தையும் தம்பி சூர்யாவையும் கடுமையாக விமர்சித்து அந்த பணத்தில் எப்படிதான் சாப்பிடுகிறார்களோ எனத் தெரியவில்லை.

சூர்யா சாதாரணமான ஆள் இல்லை. ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவான். அவன் செய்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு எப்படிதான் அப்படிப் பேசத் தோன்றுகிறதோ எனத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.