தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pillaiyar Suzhi: ‘மீண்டும் வரும் ‘ டபுள் டக்கர்’ படை.. படத்தின் தலைப்பு பிள்ளையார் சுழி.. முழு விபரம் இங்கே!

Pillaiyar Suzhi: ‘மீண்டும் வரும் ‘ டபுள் டக்கர்’ படை.. படத்தின் தலைப்பு பிள்ளையார் சுழி.. முழு விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
May 25, 2024 09:53 PM IST

Pillaiyar Suzhi: டபுள் டக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த படக்குழுவினர் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றில் இணைந்து இருக்கின்றனர். படத்தின் தலைப்பு பிள்ளையார் சுழி என வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், படம் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

Pillaiyar Suzhi: ‘மீண்டும் வரும் ‘ டபுள் டக்கர்’ படை.. படத்தின் தலைப்பு பிள்ளையார் சுழி.. முழு விபரம் இங்கே!
Pillaiyar Suzhi: ‘மீண்டும் வரும் ‘ டபுள் டக்கர்’ படை.. படத்தின் தலைப்பு பிள்ளையார் சுழி.. முழு விபரம் இங்கே!

ட்ரெண்டிங் செய்திகள்

சுவாரஸ்யமான திரைப்படம்

சிலம்பரசி வி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்  "பிள்ளையார் சுழி" ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட சுவாரஸ்யமான திரைப்படம் என இயக்குநர் தெரிவித்துள்ளார். தீரஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

"போதை எறி புத்தி மாறி" மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த "டபுள் டக்கர்" போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த தீரஜ், "பிள்ளையார் சுழி" யிலும் பார்வையாளர்களை மீண்டும் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யார் யார் நடிக்கிறார்கள்?

இந்தப் படத்தில் ரேவதி, மைம் கோபி, மத்தியு வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்றோர் துணை நடிகர்களாக நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரங்களாக உன்னி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, மற்றும் ஸ்ரீ ஷரவண் ஆகியோர்  நடித்துள்ளனர்,

"பிள்ளையார் சுழி" பட குழுவில் பிரசாத் DF Tech ஒளிப்பதிவாளராக, ஹரி S.R இசையமைப்பாளராக, ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், கோதை தேவி ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். படத்தின் திருத்தத்தை தயாரிப்பாளர் சிலம்பரசி வி. கவனித்துள்ளார். சத்ய பிரகாஷ், ராகுல் நம்பியார், மற்றும் சூப்பர் சிங்கர் கௌசிக் ஸ்ரீதரன் ஆகியோர் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.பிள்ளையார் சுழி நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்த குழு உருவாக்கிய  “டபுள் டக்கர்” படம் பற்றி பார்க்கலாம்

தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம். எஸ். பாஸ்கர், சுனில் ரெட்டி, முனீஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஃபேண்டஸி ஜானரில் உருவான இந்தப்படம் பற்றி பார்க்கலாம். 

நாயகன் தீரஜ், சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தனது தாய், தந்தையை இழந்து விடுகிறார். அந்த விபத்தில் தீரஜிற்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு விட, அது மறையாத தழும்பாக அவரது முகத்தில் இருந்து விடுகிறது. இந்த நிலையில் அந்த முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார் தீரஜ். இதற்கிடையே, படத்தில் பிரபல வில்லனான மன்சூர் அலிகானின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட்டின் மீது தீரஜிற்கு காதல் முளைக்கிறது. ஆனால் இந்த காதலை ஸ்மிருதி ஏற்க மறுக்கிறார்

வாழ்க்கையே வெறுத்துப் போகும் தீரஜ், தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால், அவரது உயிர் பிரிவதற்கு முன்பே லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு வான் தேவதைகள் அவரது உயிரை எடுத்து விடுகின்றனர். இந்த நிலையில், தன்னுடைய உயிரை எப்படி நீங்கள் எடுக்கலாம் என்று வான் தேவதைகளிடம் தீரஜ் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரின் உடலை யாரோ சிலர் திருடி விடுகிறார்கள்.

இதனையடுத்து தற்காலிகமாக ஒரு உடம்பில் தீரஜின் உயிரை இருக்க வைக்கும் வான் தேவதைகள், அவரது உடலை கண்டுபிடித்தார்களா.? தீரஜ்ஜின் காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்