Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

Marimuthu M HT Tamil Published May 15, 2024 04:01 PM IST
Marimuthu M HT Tamil
Published May 15, 2024 04:01 PM IST

- Dhanush Divorce Bad Luck: இரண்டு தேசிய விருதுகளை வென்ற நடிகர் தனுஷூடன் பணியாற்றிய திரைக்கலைஞர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரிந்து வருவது, தனுஷை சுற்றும் விவகாரத்து துரதிர்ஷ்டத்தால் உண்டானது என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் டைவர்ஸ் துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்
Dhanush Divorce Bad Luck: தனுஷை சுற்றும் டைவர்ஸ் துரதிர்ஷ்டம்.. உடன் பணியாற்றியவர்களை காலி செய்த கொடூரம்

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2004ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு யாத்ரா,லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷூடன் பணியாற்றிய சில பிரபலங்களும் விவாகரத்துப் பெற்றும், தாம்பத்திய உறவில் இருந்து பிரிந்தும் வாழ்ந்து வருகின்றனர். இதுதான் தற்போது டாக் ஆஃப் தி டவுன் ஆகி இருக்கிறது. என்னடா, தனுஷுடன் நடித்தவர்கள் அவருடன் பணியாற்றியவர்கள் என சிலரது பெர்ஷனல் வாழ்க்கையும் பிரிந்துபோயுள்ளது என்பது பற்றி பார்ப்போம். 

அமலா பாலை தாக்கிய விவாகரத்து துரதிர்ஷ்டம்!

‘தெய்வத்திருமகள்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகை அமலா பாலுக்கும், இயக்குநர் ஏ.எல். விஜய்க்கும் ஏற்பட்ட நட்புபின், காதலானது. அதன்பின் ’தலைவா’ படத்தில் நாயகியாக நடித்தபின், நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நன்குசென்று கொண்டிருந்த திருமண வாழ்வில், இடையில் தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி 2 படங்களிலும், தனுஷின் தயாரிப்பில் அம்மா கணக்கு படத்திலும் நடிகை அமலா பால் நடித்தார். அதன்பின், 2017ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய்யும் - அமலா பாலும் விவாகரத்து பெற்றனர்.

பிரபல டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, தனது நெடுநாள் நண்பரான உதவி இயக்குநர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீ, தன்னிடம் காதலைச் சொன்னதும் அதனை மறுக்கமுடியவில்லை எனப் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார், திவ்யதர்ஷினி என்கிற டிடி. அதன்பின், தனுஷ் நடித்து, இயக்கி, தயாரித்த ’பவர் பாண்டி’ திரைப்படத்தில், நடித்தபின், திவ்யதர்ஷினி, தன் மணவாழ்க்கையில் இருந்து விலகினார்.

பிரிந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி:

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் அவரது மனைவி சைந்தவியும் பள்ளியில் இருந்தே காதலித்து, 2013ஆம் ஆண்டு கல்யாணம் செய்துகொண்டனர். ஜி.வி.பிரகாஷ், நடிகர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகியப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், அவரது தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, விசாரணை ஆகியப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் சைந்தவியுடனான தனது திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், பாடகி சைந்தவியும், ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் ‘பிறைதேடும் இரவிலே’ படத்தில் தனுஷின் படத்திற்காகப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

’யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நண்பனாக நடித்தவர், கார்த்திக் குமார். மேடையில் கலக்கும் ஸ்டண்ட் அப் காமெடியனாக இருந்து வருகிறார். நிறையப் படங்களில் சின்னஞ்சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரும் பின்னணிப் பாடகியுமான சுசித்ராவும் 2005ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, 2017ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். இவரும் தனுஷூடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்து, 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இவரது மணவாழ்க்கை 2021ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தனுஷுடன் சமந்தா, ’தங்கமகன்’ திரைப்படத்தில் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரும் பின்னாட்களில் நாகசைதன்யாவைப் பிரிந்துவிட்டார் என்பது தான் அவலம்.

இப்படி நடிகர் தனுஷூடன் பணியாற்றியவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் விவாகரத்து பெறுவதும், தாம்பத்திய உறவில் இருந்து தனித்து வாழ்வதும் தனுஷை சுற்றும் விவாகரத்து துரதிர்ஷ்டத்தால் உண்டானது என வேதனையுன் புலம்புகின்றனர். மேலும், சிலர், அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் என எதுவும் இல்லை எனவும்; அது ஒவ்வொருவரின் செயல்களால் நிகழ்வது எனவும் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பேசி வருகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.