Dhanush Raayan: ஆண்டவா.. ராயன் எப்படியாவது ஓடனும்.. குலதெய்வ கோயிலில் வேண்டிய தனுஷ்!
Dhanush Raayan: ' ராயன் ‘ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி, நடிகர் தனுஷ் ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

Dhanush Raayan: நடிகர் தனுஷ் தனது இரண்டாவது இயக்கத்தில் எழுதி, இயக்கிய வரவிருக்கும் தமிழ் மொழி அதிரடி திரில்லர் திரைப்படம், ராயன். இந்த படத்தில் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து உள்ளார். இதில் தனுஷ் லீடு ரோலில் நடித்து இருக்கிறார்.
ராயன் நடிகர்கள்
இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படம் ராயன் என்ற இளைஞனைப் பின் தொடர்கிறது. அவர் தனது குடும்பத்தின் கொலைகாரர்களைத் தேடும் வகையான கதை களத்தை கொண்டு இருக்கிறது.
ஏ. ஆர். ரஹ்மான் இசை
இப்படம் ஜனவரி 2023 ஆம் ஆண்டு D 50 என்ற தற்காலிகத் தலைப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, இது தனுஷின் 50 ஆவது படமாகும், மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது முக்கியமாக சென்னை மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னா ஜி. கே படத்தொகுப்பு செய்து உள்ளார்.
தனுஷ் வேண்டுதல்
இந்நிலையில் ‘ ராயன் ’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி, நடிகர் தனுஷ் ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவர் குலதெய்வ கோயிலுக்கு தனது இரண்டு மகன்களையும் உடன் அழைத்து சென்று இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு உள்ளார்.
அதில், “ இங்கு பரந்து கிடக்கும் பூமி,
உனக்கும் தந்ததைய்யா,
இங்கு
இருக்கும் அத்தனை சாமியும்,
உனக்கும் சொந்தமைய்யா…
Staying connected to your roots is peace ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
ராயன் படம்
தனுஷின் ராயன் படம், 13 ஆம் தேதி ஜூன் மாதம் 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அறியப்படாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தனுஷின் பிறந்தநாளான ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, இந்த படத்தின் ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகளை இயக்குநர் செல்வராகவன்தான் செய்தார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்தார்.
அந்த விளக்கத்தில், “ என் தம்பியை நினைத்துப் பெருமைப் படுகிறேன்' என்றுகூறிய செல்வராகவன், "நண்பர்களே, 'டி 50 ராயன்' படத்துக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதியதாக செய்திகள் வந்தன. எனக்கும் 'ராயன்' கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
இது முழுக்க முழுக்க, என் தம்பி தனுஷின் கனவுக் கதை. இப்போது அதை அவர் எழுதி இயக்கி, முக்கிய பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நான் ஒரு நடிகன் மட்டுமே " என்று குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்