Actor Dhanush: ஸ்கூல் பையன், பென்சில் பாடி விமர்சனத்துக்கு மத்தியில் கிடைத்த பாராட்டு.. தனுஷை நெகிழ வைத்த இயக்குநர்..
Actor Dhanush: நடிகர் தனுஷ் சினிமாவிற்கு வந்த புதிதில் பல உருவ கேலிகளை சந்தித்த சமயத்தில் ஒரே ஒரு இயக்குநர் மட்டும் அவரை பாராட்டி கௌரவித்திருக்கிறாராம். அது யார் தெரியுமா?

Actor Dhanush:நடிகர் தனுஷ் 2002ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இந்தப் படத்தை தனுஷின் தந்தையும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா இயக்கி இருந்தார்.
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு, காதல், வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்த போதிலும், இந்தப் படத்தில் தனுஷின் தோற்றத்தை பலரும் உருவ கேலி செய்து வந்தனர்.
தன்னை தானே செதுக்கிய தனுஷ்
மிகவும் ஒல்லியான தேகத்துடன் இருந்த அவரை, தமிழ் மக்கள் அவ்வளவு எளிதில் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இவர், தன்னையும், தன் நடிப்பையும் நிலைநாட்டவும் உருவத்திற்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபிக்கவும் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை என அடுத்தடுத்த படங்களில் தன் மொத்த உழைப்பையும் கொட்டி நடித்தார்.
விளைவு, இன்று தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக நிற்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, ஆங்கில படங்களிலும் தற்போது நடித்து வந்து அனைவரின் மனதை கவர்ந்துள்ளார்.
கேலிகளை பாராட்டாக மாற்றிய தனுஷ்
புதுப்பேட்டை படத்தில் தனக்கு வந்த விமர்சனங்களை படத்திலேயே வசனமாக வைத்து, தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருப்பார் தனுஷ். அப்படியான நிலையில் தான் தற்போது தனுஷை மக்கள் ஏற்றுக் கொண்டணர். அவருடைய தோற்றத்தை அவர் படத்துக்கு படம் மெருகேற்றிய விதம் அனைவருக்கும் பிடித்துப் போகவே, அவர் தற்போது திரையில் தோன்றினாலே போதும் என்கிற அளவுக்கு தனக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார்.
இப்படி, வெறும் கிண்டல்களையும் கேலிகளையும் வெறுப்பு விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்து வந்த தனுஷிற்கு குடும்பத்தினரை தவிர்த்து வெளியில் இருந்து கிடைத்த முதல் அங்கீகாரம் எது தெரியுமா? தனுஷிற்கு உத்வேகம் அளித்தது யார் தெரியுமா? தன் வாழ்நாளில் மறக்க முடியாத பாராட்டை பெற்ற தனுஷ் இதுகுறித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
முதல் கமெண்ட்
அந்த நிகழ்ச்சியில் பேசிய தனஷ், "துள்ளுவதோ இளமை படம் பாத்துட்டு இல்ல டிரெயிலர பாத்துட்டு சொன்னாங்க. இவன் எல்லாம் எந்த தைரியத்துல கேமரா முன்னாடி வந்து நின்னான் அப்படிங்குறது தான் எனக்கு வந்த முதல் கமெண்ட்.. ஆனா வெறும் டிரெயிலர பாத்துட்டு இந்த பையன் ரொம்ப பெரிய ஆளா வருவான்னு பாலு மகேந்திரா சார், வெற்றி மாறன் சார்கிட்ட சொல்லிருக்காரு" எனக் கூறி இயக்குநர் பாலுமகேந்திரா தனுஷிற்குள் விதைத்த நம்பிக்கை பற்றி கூறியிருக்கிறார்.
இன்டர்நேஷனல் மாடல்
அத்தோடு, "என்னோட தோற்றத்துக்காக எவ்ளவோ பேரு என்ன கிண்டல் பண்ண சமயத்திலும் கூட அப்போவே ஒரு இண்டர்வியூல சொல்லிருக்காரு. அவருக்கு பிரெஞ்ச் லுக் இருக்குன்னு. அவரோடது இந்தியன் லுக் கிடையாது இன்டர்நேஷனல் லுக் அப்டின்னு. என்னோட தோற்றத்துக்கு முதல் முறையாக காம்ளிமெண்ட் கொடுத்த ஒருத்தர் பாலு மகேந்திரா சார் என தனுஷ் பெருமையுடன் கூறினார்.
ஹேண்ட்ஸம் ஆளு
அதுமட்டுமில்லாமல், இயக்குநர் பாலுமகேந்திரா, விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்று தனுஷ் பற்றி பேசி இருப்பார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், "தனுஷ் என்னா ஹேண்ட்ஸ்மான ஆளு. நெறைய பேருக்கு அவர் எவ்ளோ ஹேண்ட்ஸம்ன்னே தெரியல. அவருடைய லுக் இன்டர்நேஷனல் மாடல் லுக். அது உண்மை. நான் அவரோட லுக்க ரொம்பவே நேசிக்குறேன் என இயக்குநர் பாலு மகேந்திரா கூறியிருப்பார்.
50 படங்களைத் தாண்டி
அவர், கூறியது தற்போது பொய் ஆகாமல் தனுஷ், தமிழ் மொழி படங்களைத் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அத்தோடு நில்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தன் திறமைகளை விரிவு செய்துகொண்டே தற்போது, 50 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

டாபிக்ஸ்