தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Dhanush Visited Tirumala Temple On Wednesday

Dhanush: திடீரென ரத்தான ஷூட்டிங்.. ஏழுமலையானை நாடிய நடிகர் தனுஷ் - வைரல் வீடியோ!

Karthikeyan S HT Tamil
Jan 31, 2024 04:48 PM IST

படப்பிடிப்பு ரத்தான நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா மூவியாக உருவாகி வருகிறது தனுஷின் D51. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜூனா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் பிரபல இயக்குநரான சேகர் கமுலா இப்படத்தை இயக்கி வருகிறார். 'வாத்தி' படத்திற்குப் பிறகு தனுஷ் அடுத்து நடிக்கும் தெலுங்கு படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'தனுஷ் D51' எனத் தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை திருப்பதி மலையடிவாரத்தில் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தது படக்குழு. அதன்படி, நேற்று காலை 6 மணி முதல் மதியம் வரை நடத்திக்கொள்ள திருப்பதி போலீசார் அனுமதி அளித்திருந்தனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என்பதால் திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள் மற்றும் பக்தர்களின் வாகனங்களை மாற்று சாலை வழியாக போலீஸார் திருப்பி விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலை அடுத்து பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் முன் படப்பிடிப்பை நடத்த முயன்றனர். இதனால் அங்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் வெளியேற்றினர். இதனால், பக்தர்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தனுஷ் படத்தின் படப்பிடிப்பிற்கு அனுமதி தரக்கூடாது என பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து திருப்பதியில் தனுஷ் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. தனுஷ் படப்பிடிப்பால் காலை முதல் தொடர் பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி தெரிவித்தார்.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்தானதால், நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

'கேப்டன் மில்லர்' படத்தைப் போலவே இந்தப் படத்திலும் அடர் தாடி, அதிக தலைமுடியுடன் காணப்படுகிறார் தனுஷ். திருப்பதியை தொடர்ந்து மும்பையில் D51 படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு தனுஷ், ராஷ்மிகா மந்தனா இருவரும் நடிக்கும் காட்சிகளை படமாக்க இயக்குநர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் D51 படப்பிடிப்பு முடிவுக்கு வரும் எனவும் இந்தாண்டு இறுதிக்குள் படம் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.