Nayanthara- Dhanush: 'நயன்தாரா அடிமை மாதிரி.. தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணத்துக்கே காரணம்..' டைரக்டர் நந்தகுமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara- Dhanush: 'நயன்தாரா அடிமை மாதிரி.. தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணத்துக்கே காரணம்..' டைரக்டர் நந்தகுமார்

Nayanthara- Dhanush: 'நயன்தாரா அடிமை மாதிரி.. தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணத்துக்கே காரணம்..' டைரக்டர் நந்தகுமார்

Malavica Natarajan HT Tamil
Jan 11, 2025 07:40 AM IST

Nayanthara- Dhanush: நயன்தாரா அவங்களோட பழகுறவங்ககிட்ட அடிமை மாதிரி இருப்பாங்க. அவங்க விக்னேஷ் சிவன கல்யாணம் பண்ணுனது தான் தனுஷோட பிரச்சனையே என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.

Nayanthara- Dhanush: 'நயன்தாரா அடிமை மாதிரி.. தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணத்துக்கே காரணம்..' டைரக்டர் நந்தகுமார்
Nayanthara- Dhanush: 'நயன்தாரா அடிமை மாதிரி.. தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணத்துக்கே காரணம்..' டைரக்டர் நந்தகுமார்

தனுஷ்- நயன்தாரா பிரச்சனை

நயன்தாராவை சுற்றி சில மாதங்களாகவே சர்ச்சைகள் இருந்து வரினும், இந்தச் சூழல் உக்கரமாக மாறக் காரணம், நடிகர் தனுஷிற்கு எதிரான அறிக்கை தான். அப்படி இருக்கும் சூழலில் தனுஷிற்கும் நயன்தாராவிற்கும் என்ன பிரச்சனை, நயன்தாரா எப்படிப்பட்டவர் என்பதை கிங்உட்ஸ் டிவி யூடியூப் சேனலிடம் விளக்குகிறார் கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார்.

கல்யாணம் ஆனது தான் பிரச்சனை

அந்த பேட்டியில், "ஒரு நடிகையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சினிமாக்காரர்கள் இருப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு வாய்ப்புகளைத் தருவார்கள். ஆனால், அந்த நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால், இவர்களின் கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது. அவரை அவ்வளவு எளிதில் கைப்பற்ற முடியாது. அந்த காரணத்தால் தான் இங்கு திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஒருவேளை நயன்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் இருந்திருந்தால், தனுஷ் அவருக்கு இலவசமாகவே காப்பி ரைட்ஸ் கொடுத்திருக்கலாம். இது தனுஷ் மட்டும் இல்ல எல்லா ஆண்களுக்கும் இருக்க உளவியல் பிரச்சனை.

அடிமை மாதிரி இருப்பாங்க

நான் நயன்தாரா கூட ரொம்ப நெருக்கமான நண்பரா இருந்திருக்கேன். அவங்கள மாதிரி ஒரு தைரியமான பெண்ண பார்க்கவே முடியாது. அதே மாதிரி அவங்கள மாதிரி ஒரு அன்பானவங்களையும் பார்க்க முடியாது. அவங்க யார் கூட இருக்காங்களோ அவங்களுக்கு அடிமையாகவே இருப்பாங்க.

நயன்தாரா முதல் 4 படங்கள்ல மட்டும் தான் சினிமாவுல வாய்ப்பு தேடி போனாங்க. அதுவும் அவரோட மேனஜர் தான் கேட்டாரு. மத்தபடி எல்லா படமுமே அவருக்கு வாய்ப்பு தேடி தான் வந்தது. இதுவரைக்கும் நடிச்சா எல்லா படங்களிலும் அவரைத் தேடி தான் வாய்ப்பு வந்தது.

தயாரிப்பாளர் புலம்ப இதுதான் காரணம்

அதை நயன்தாரா பயன்படுத்திக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் தனக்கான கோரிக்கைகளை வைத்தார். அதற்கு சம்மதித்து தான் படங்களும் செய்து கொடுத்தார். ஆனால், தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் படங்களுக்கு வரவில்லை என்றால் அவர்கள் செய்த செலு எல்லாம் வீணாகப் போய்விட்டதாக தெரிகிறது. இதுதான் பிரச்சனையாகி அவரைப் பற்றி தவறான கருத்துகள் வர காரணமாகிறது.

தனுஷோட பயம் தான் நயன்தாரா கல்யாணம்

விஜய் சேதுபதி கூட, நானும் ரவுடி தான் படத்துல நடிக்கிறதுக்காக அவரோட சம்பளத்த குறைச்சிக்கிட்டாரு. காரணம் நயன்தாராவோட நடிக்கனும்ங்குறதுக்காக. ஏற்கனவே விஜய் சேதுபதி நயன்தாராவ தூக்கனும்ன்னு ஆசை பட்டதாக சொல்லியிருந்தார்.

இதை கேள்விப்பட்ட தனுஷ், எங்கு நயன்தாரா நம்மை விட்டு போய்விடுவாரோ என்ற பயத்தில், தான் வாய்ப்பு கொடுத்த விக்னேஷ் சிவன் பக்கத்தில் நயன்தாராவின் பார்வையை திருப்ப முயற்சி செய்தனர்.

என்ன டைரக்டர் உன்னையே பாத்துட்டு இருக்கான் அப்படி இப்படின்னு சொல்லி இருக்காரு. அந்த சமயத்துல விக்னேஷ் சிவன் ஒரு பாட்டு எழுத, அதை நயன்தாராவ நெனச்சு தான் எழுதுனேனு சொல்ல அவங்களுக்குள்ள காதல் துளிர்விட ஆரம்பிச்சது" எனக் கூறுகிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.