ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!

ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!

Malavica Natarajan HT Tamil
Published Jun 07, 2025 12:10 PM IST

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் ஹிந்தி படத்திற்காக புதிய கெட்டப் ஒன்றில் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!
ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!

விமானப்படை அதிகாரியாக தனுஷ்

இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில் தனுஷ், இந்திய விமானப் படை அதிகாரி உடையில் காணப்பட்டார். மேலும் அவரது உடையில் சங்கர் எனும் பெயரும் இருந்தது. இதையடுத்து தனுஷ் இந்தப் படத்தில் தனுஷ் நிச்சயம் விமானப் படை அதிகாரியாக நடிக்க வாய்ப்புள்ளது என இணையவாசிகள் கூறி வருகின்றனர். அதற்கு சாட்சியாக தனுஷ் அந்தப் படத்தில் மிடுக்கான தோற்றத்தில் உள்ளார். இந்தப் படத்தை பகிர்ந்த தனுஷ் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

லீக்கான காட்சிகள்

முன்னதாக, தேரே இஷ்க் மெயின் படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் (எஸ்.ஆர்.சி.சி) நடைபெற்றது. அந்த சமயத்தில், தனுஷ் கல்லூரி வளாகத்தில் நடித்த காட்சியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இதனை ரசிகர்கள் வைரலாக்கினர்.

டெல்லியில் தனுஷ் படப்பிடிப்பு

தனுஷ் படப்பிடிப்பு நடத்தியபோது கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. ஒரு புகைப்படத்தில் அவர் ஒரு கூட்டத்தின் வழியாக ஓடுவதைக் காட்டுகிறது. அவருக்கு அருகில் நிற்கும் சிலர் அவரைப் பார்ப்பது போன்ற காட்சிகள் அதில் காணப்பட்டன.

இதனை ஏராளமான ரசிகர்கள் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டு தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், தனுஷின் தோற்றம் மற்றும் நடிப்புத் திறமையைக் கண்டு வியந்து பாராட்டியும் வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

இதில், எக்ஸ் தள பயனாளி ஒருவர், 41 வயதான நடிகர் கல்லூரி மாணவராக நடிக்க எந்த விதமான டி-ஏஜிங் வேலைப்பாடுகளும் தேவையில்லை' என்று கூறி, அவரை புகழ்ந்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், தனுஷ் கேரவனில் இருந்து வெளியேறுவது தொடங்கி, அவர் ஷூட்டிங்கிற்கு தயாராவது வரை சின்ன சின்ன கிளிப்பிங்ஸ்ஸை வீடியோவாக இணைத்து தங்களது ஆச்சரியத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும், கல்லூரியில் வீடியோ எடுக்கப்பட்டு வருவதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தில் மாணவராகத் தான் நடிப்பார் என்றும், அவர் ஒரு வேளை மாணவ சங்கத் தலைவராக கூட இருக்கலாம் என்றும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் அவர் விமானப் படை அதிகாரியாக நடிப்பார் என்று கூறி வருகின்றனர்.

தேரே இஷ்க் மெயின் பற்றி

இயக்குநர் ஆனந்த் எல் ராய் உடன் இணைந்து இதற்கு முன் தனுஷ் இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான அத்ரங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது 3வது முறையாக தனுஷுடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷின் வரவிருக்கும் படங்கள்

இந்த படத்தைத் தவிர, தனுஷ் தெலுங்கில் சேகர் கம்முலாவுடன் இணைந்து குபேரா படத்திலும், தமிழில் அவரே இயக்கி வரும் இட்லி கடை படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இது தவிர அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திலும், இளையராஜா பயோபிக் படத்திலும் நடிக்க உள்ளார்.